சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

லியோனியின் "இடுப்பு".. முகம் சுழித்த பெண்கள்.. பகிரங்க மன்னிப்பு கேட்ட திமுக வேட்பாளர்.. வியந்த கோவை

லியோனி சர்ச்சை பேச்சுக்காக மன்னிப்பு கேட்டார் திமுக வேட்பாளர்

Google Oneindia Tamil News

சென்னை: பெண்களை குறித்து, திண்டுக்கல் லியோனி கூறிய சர்ச்சை பேச்சுக்கு திமுக வேட்பாளர் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுக் கொண்டுள்ளார்.

திமுக பேச்சாளர்களில் ஒருவரான திண்டுக்கல் லியோனி, சில சமயம், ஆபாசமாகவும் எல்லை மீறியும் எதிர்க்கட்சிகளை விமர்சித்து வருகிறார் என்று சொல்லப்பட்டு வருகிறது. இப்போது தேர்தல் நெருங்குவதால், திமுக மற்றும் கூட்டணி கட்சியினருக்கு தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார்.

அந்த வகையில், தொண்டாமுத்தூர்தொகுதியில் திமுக வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாதிபதியை ஆதரித்து லியோனி வாக்கு சேகரித்தார்...

 பிரச்சாரம்

பிரச்சாரம்

பிரச்சாரத்தில் பேசிய லியோனி, "ஃபாரின் மாடு எல்லாம் மெஷின் வைத்துதான் பால் கறப்பார்கள். அந்த மாடு எல்லாம் ஒரு மணிநேரத்துக்கு 40 லிட்டர் பால் கறக்கும். அந்த ஃபாரீன் மாட்டு பாலை குடித்து குடித்து நம்ம ஊர் பெண்கள் பலூன் மாதிரி இத்த தண்டி ஊதிக்கிடக்குறாங்க... அவங்களோட பிள்ளைகளும் அதே மாதிரி ஊதிக்கிடக்குறாங்க.

 ஃபாரீன் மாடு

ஃபாரீன் மாடு

ஒரு காலத்துல பெண்களோட இடுப்பு 8 மாதிரி இருக்கும். குழந்தைகளை தூக்கி இடுப்புல வச்சா அப்படியே உட்கார்ந்துக்குவாங்க.. 8 போல் இருந்த இடுப்பு பாரீன் மாட்டு பாலை குடிச்சு குடிச்சு பேரல் போலாகிடுச்சு என்றார் லியோனி இப்படி பேசியது அந்த பிரச்சாரத்தில் மட்டுமல்லாமல், தமிழக அரசியலில் சலசலப்பை உண்டு பண்ணி வருகிறது. சோஷியல் மீடியாவிலும் லியோனிக்கு கண்டனங்கள் வந்தபடியே உள்ளன.

 தர்மசங்கடம்

தர்மசங்கடம்

இது திமுகவுக்கு பெரும் தர்மசங்கடத்தையும் தந்து வருகிறது.. அதிலும், யாருக்காக வாக்க சேகரித்தாரோ, அதே திமுக வேட்பாளர் கார்த்திகேய சேனாபதிக்கே தர்மசங்கடத்தை தந்துள்ளது என்றார்கள். இந்நிலையில், கோவை மற்றும் வடக்கு கோவை பகுதிகளில் தொண்டாமுத்தூர் காரத்திகேய சிவசேனாதிபதி வாக்கு சேகரித்தார். "பாஜகவிற்கும், அதிமுகவிற்கும் பலமே வேலுமணிதான், தமிழ் சமூகத்திற்கும், தமிழ்நாட்டிற்கும் ஆபத்தானவர் அமைச்சர் வேலுமணி" என்று விமர்சித்து கொண்டு வந்தவர், திடீரென லியோனி பேச்சு பக்கம் தாவினார்.

 லியோனி

லியோனி

திண்டுக்கல் லியோனி பெண்கள் பற்றி பேசிய கருத்து உண்மையிலேயே வருத்தத்திற்கு உரியதுதான்.. அதற்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.. லியோனி மன்னிப்பு கேட்பார் என்று பார்த்தால், திமுக வேட்பாளர் மன்னிப்பு கேட்கிறாரே என்று வியந்து பார்த்தனர் தொகுதி மக்கள்..!

English summary
DMK Candidate apologizes for Dindigul Leoni in Coimbatore Election Campaign
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X