திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி வேட்பாளர் நேர்காணலில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று பங்கேற்றார். திமுக வேட்பாளர்கள் நேர்காணலில் தன்னிடம் கேட்கப்பட்ட கேள்விகள் குறித்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 23 ஆம் தேதியும், புதுச்சேரிக்கு வாக்குப்பதிவு ஏப்ரல் 9 ஆம் தேதியும் நடைபெறவுள்ளது. தற்போதைய சூழலில், திமுக, அதிமுக, பாமக நிறுவனர் ராமதாஸ் - அ.இ.பு.த.ம.மு.க சசிகலா என மூன்று கூட்டணிகளும், தவெக மற்றும் நாதக ஆகிய இரண்டு கட்சிகளும் தனித்து போட்டியிடுகின்றன. இதன் காரணமாக தமிழ்நாட்டில் ஐந்து முனை போட்டி இருந்து வருகிறது.

DMK Candidate Interview Udhayanidhi Stalin Opens Up on Questions Asked

தமிழகத்தில் ஆளும் கட்சியாக இருக்கும் திமுக தேர்தலுக்காக இதுவரை இல்லாத அளவிற்கு 20க்கும் மேற்பட்ட கட்சிகளுடன் மிகப்பெரிய கூட்டணியை உருவாக்கியுள்ளது. திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு தொடங்கி கூட்டணி கட்சிகளுடன் நடைபெற்று வருகிறது. இதில் சில கட்சிகளுடன் தொகுதி பங்கீடு நிறைவடைந்த நிலையில், சில கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகளும், மதிமுகவிற்கு நான்கு தொகுதிகளும், இந்திய முஸ்லிம் லீக் கட்சிக்கு 2 தொகுதிகளும், கொ.ம.தே.க கட்சிகளுக்கு 2 தொகுதிகளும், ம.ம.க 2 தொகுதிகளும், சிபிஐ-க்கு 5 தொகுதிகளும் இதுவரை ஒதுக்கப்பட்டுள்ளது. விசிக மற்றும் தேமுதிகவிற்கு தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

கூட்டணி தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை ஒரு புறம் நடந்துவரும் நிலையில், திமுகவில் விருப்ப மனு வழங்கியவர்களிடமும் அக்கட்சியின் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் நேர்காணல் செய்து வருகிறார். அமைச்சர்கள், மூத்த நிர்வாகிகள் உள்பட 15,372 பேர் விருப்ப மனுக்களை வழங்கினர். அவர்களிடம் நேர்காணல் நடத்தப்பட்டு வருகிறது.

அந்தவகையில், இன்றைய நேர்காணலில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றார். இதில் பங்கேற்றுவிட்டு வெளியே வந்த உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "மற்ற தொகுதி நபர்களிடம் என்ன கேட்கிறார்கள் என எனக்கு தெரியவில்லை. சேப்பாக்கம் சட்டமன்றத் தொகுதியில் என்ன பணிகள் எல்லாம் மேற்கொண்டீர்கள் என கேட்டார்கள். அதற்கு என்னவெல்லாம் செய்துள்ளோம் என்பது குறித்து தெரிவித்துள்ளேன்.

எஸ்.ஐ.ஆர்ல் எவ்வளவு வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளார்கள்? அது குறித்தான பணிகள் எல்லாம் மேற்கொள்ளப்பட்டதா என்பது குறித்தும் கேட்டார்கள். பதில் அளித்துள்ளேன். போய்விட்டு வாருங்கள்.. யார் வேட்பாளர் என்று கூறுகிறோம் என்று சொல்லி அனுப்பி இருக்கிறார்கள்" எனத் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+