ஓவர் நைட்டில் உச்சம் தொட்ட கார்த்திகேய சிவசேனாதிபதி.. வேலுமணிக்கு எதிராக தொண்டாமுத்தூரில் போட்டி
சென்னை: திமுகவில் இணைந்த வேகத்தில் அடுத்தடுத்த பதவிகளைப் பெற்ற, கார்த்திகேய சிவசேனாபதி தற்போது தொண்டாமுத்தூர் தொகுதியில் அந்த கட்சியின் வேட்பாளராக களமிறங்கியுள்ளார்.
அதிமுக சார்பில் அமைச்சர் வேலுமணி போட்டியிடும் இந்த தொகுதியில் இவர் போட்டியிடுவதன் மூலமாக ஓவர் நைட்டில் ஸ்டார் வேட்பாளராக மாறிவிட்டார் கார்த்திகேய சிவசேனாபதி.
ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது காளைகள் பற்றிய பல்வேறு தகவல்களை பொது வெளிக்குக் கொண்டு வந்து விழிப்புணர்வை ஏற்படுத்தியதில், கார்த்திகேய சிவசேனாபதி பங்கு அளப்பரியதாக இருந்தது.

திமுகவில் இணைந்தார்
இவர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம், திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் அந்த கட்சியில் இணைந்தார். இதையடுத்து அவருக்கு, திமுக சுற்றுச்சூழல் அணி செயலாளர் பதவி வழங்கி கவுரவிக்கப்பட்டது. கொங்கு மண்டலத்தில் தீவிரமாக பரப்புரைகளை ஆரம்பித்துவிட்டார் கார்த்திகேய சிவசேனாபதி.

பதவியை எறிந்தவர்
ஜல்லிக்கட்டு போராட்டம் விஸ்வரூபம் எடுத்தபோது, காங்கேயம் மாடுகள் ஆராய்ச்சி தலைவராக பதவி வகித்தவர் கார்த்திகேய சிவசேனாபதி. ஜல்லிக்கட்டு மீதான தடையை உடனடியாக நீக்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழ்நாடு வேளாண் பல்கலை கழகத்தின் நிர்வாக குழு உறுப்பினர் பதவியை அவர் ராஜினாமா செய்தார்.

கொங்கு மண்டலம்
கோவை மற்றும் மேற்கு மண்டலங்கள், அதிமுக வலுவாக இருக்கக் கூடிய பகுதிகள் என்று பார்க்கப்படுகிறது. கடந்தகால தேர்தல் முடிவுகளை வைத்து பார்க்கும்போது அப்படித்தான் சொல்ல முடியும். ஆனால், இந்த முறை கொங்கு மண்டலத்தில் அதிக தொகுதிகளில் திமுக போட்டியிடுகிறது. மேலும் அங்கே உள்ள கொங்கு மக்கள் தேசிய கட்சி உள்ளிட்ட மக்கள் ஆதரவு பெற்ற அமைப்புகளுடன் கூட்டணி அமைத்துக் கொண்டு இருக்கிறது திமுக.

கார்த்திகேய சிவசேனாதிபதி வளர்ச்சி
ஆதித்தமிழர் பேரவை கட்சியுடன் கூட்டணி அமைத்துக் கொண்டு இருப்பதால், கொங்கு மண்டலத்தில் கணிசமாக உள்ள அருந்ததியர் வாக்குகளை அறுவடை செய்ய திமுக காய் நகர்த்தி உள்ளது. அந்த வகையில்தான் கொங்கு மண்டலத்தில் பாரம்பரிய குடும்பப் பின்னணி கொண்டவரும், வெகு மக்களால் அறியப்படுபவருமான, கார்த்திகேய சிவசேனாபதியை, தங்கள் கட்சியில் இணைத்துக் கொள்வதில் திமுக வெற்றி பெற்றது. இப்போது, தொண்டாமுத்தூர் தொகுதியில் அவர் போட்டியிடுவதன் மூலம் தமிழகத்தின் நட்சத்திர வேட்பாளர் அந்தஸ்தை பெற்றுள்ளார். மிக குறுகிய காலத்தில் திமுகவில் அவரது வளர்ச்சி மிகப் பெரிதாக இருக்கிறது என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.
-
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்!












Click it and Unblock the Notifications