"பிரியதர்ஷினி".. திமுக வேட்பாளர் மனைவி, குஷ்புவுக்கு சொன்ன விஷயம் இதுதான்.. தொகுதியில் என்ன நடக்குது
திமுக வேட்பாளர் மனைவி குஷ்புவுக்கு வாழ்த்து சொல்லி உள்ளார்
சென்னை: திமுக வேட்பாளர் மனைவி, குஷ்புவுக்கு வாழ்த்து சொல்லி உள்ளார்.. ஆயிரம் விளக்கு தொகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
தேர்தல் நெருங்கி கொண்டிருக்கிறது.. பிரச்சாரங்கள் இறுதி கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கின்றன.. இதில் பல ஸ்டார் தொகுதிகளில் இதுவரை யாருக்கு வெற்றி என்ற குழப்ப நிலையே நிலவி வருகிறது.
அதேபோல, எதிர்பார்ப்புக்குரிய தொகுதிகள் பல உள்ளன.. அதில் ஆயிரம் விளக்கு தொகுதியும் ஒன்று.. திமுகவின் கோட்டையான இந்த தொகுதியில் குஷ்பு களம் இறங்கி உள்ளார்.. வழக்கமான யதார்த்த பேச்சு, புன்னகை மாறாத முகம், வெற்றி பெற்றாக வேண்டும் என்ற உந்துதலுடன் ஆயிரம் விளக்கு தொகுதி முழுக்க ஓடி ஓடி வாக்கு கேட்டு வருகிறார்.

குஷ்பு
குஷ்புவின் இந்த செயலை, பாஜகவே ஆச்சரியத்துடன் பார்த்து வருகிறது.. எனினும், அவரை எதிர்த்து போட்டியிடும் வேட்பாளர் டாக்டர் எழிலன் படுஸ்டிராங்காக இருக்கிறார்.. மக்கள் மனசில் இடம் பெற்றவர் டாக்டர் எழிலன்.. எத்தனையோ நற்காரியங்களை இவரது அப்பா முதல் இவர் வரை செய்து கொண்டிருப்பதால், தொகுதி முழுக்க பிரபலமான நபரும் கூட...

எழிலன்
மாணவர்கள், ஐடி அமைப்பினர், தன்னார்வ குழுவினர் என ஒரு படையே எழிலனுக்காக வாக்கு சேகரிக்க களம் இறங்கி உள்ளது.. மேலும் திமுக தலைவர் ஸ்டாலின் முதல் திருமாவளவன் வரை எழிலனுக்காக ஓட்டு கேட்டு தொகுதியில் பிரச்சாரம் செய்துள்ளனர்.. எனினும், எழிலனின் அரசு வெற்றிக்காக அவரது மனைவி பிரியதர்ஷினியும் அந்த தொகுதியில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்து வருகிறார்.

பிரகாசம்
பிரச்சாரத்திற்கு இடையே செய்தியாளர்களிடம் பேசிய பிரியதர்ஷினி, ஆயிரம் விளக்கு தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் டாக்டர் எழிலன் அவர்களுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது... எங்கே போனாலும் எங்களுக்கு தொகுதி மக்கள் ஆதரவு சொல்கிறார்கள்.. வாழ்த்து சொல்கிறார்கள்.. எப்படா திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வராகப் பதவி ஏற்பார் என்று மக்கள் ஆவலாக காத்திருக்கிறார்கள்.. என்றார்.
Recommended Video

வாழ்த்து
உடனே, இதே தொகுதியில் உங்கள் கணவனை எதிர்த்து குஷ்பு போட்டியிடுகிறாரே அவருக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்? என்று செய்தியாளர்கள் கேட்டனர்.. அதற்கு பிரியதர்ஷினி, ஒரு பெண்ணாக என்னுடைய வாழ்த்துக்களை அவருக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.. ஆல் தி பெஸ்ட் என்றார். சிரித்த முகத்துடன், மாற்று கட்சியின் பலமான வேட்பாளருக்கு மனமார்ந்த நன்றியை சொன்ன பிரியதர்ஷினியின் பேச்சு வைரலாகி வருகிறது.
-
ஆடிய ஆட்டமென்ன? குறுநில மன்னர்களாக அமைச்சர்கள்! அடங்காத மா.செ.க்கள்! ஆக்ஷனுக்கு தயாரான ஸ்டாலின்! -
“திமுக - அதிமுக இணைந்து ஆட்சி அமைக்க சதி திட்டம் தீட்டியது யார்?” ஸ்டாலினுக்கு செங்கோட்டையன் கேள்வி -
துரைமுருகன் Out? ஆ.ராசா In.. திமுக செயல் தலைவராகும் கனிமொழி? அறிவாலயத்தை ரவுண்ட் கட்டும் யூகங்கள்! -
துரைமுருகன் திரும்பி சென்றது ஏன்.. மகளிரணி கூட்டத்தில் என்ன நடந்தது.. திமுக ஐடி விங் விளக்கம் -
பெப்பே காட்டிய விஜய்.. விஷத்தை கடைந்த ராகுல்.. திமுக, காங்கிரஸ் பந்தம் டோட்டலாக க்ளோஸ் ஆயிருச்சே -
சைலண்ட் கில்லரான ஸ்டாலின்.. அதிமுக நிர்வாகிகளுக்கு பறந்த அழைப்பு.. தவெகவுக்கு செக் -
கரண்ட் கட்.. போராட்டமாக மாறிய பொதுக்கூட்ட மேடை! சூடான திமுகவினர்! சென்னையில் சலசலப்பு! -
அஸ்திவாரத்தை ஆட்டும் விஜய்.. அலற போகும் அறிவாலயம்! திமுக ‘மாஜி’ புள்ளிகளுக்கு செக்! களமிறங்கிய டீம்! -
தவெகவுக்கு முக்கியத்துவம்?.. மாங்குடியில் ப.சிதம்பரம் செய்த சம்பவம்..அதிருப்தியில் திமுக நிர்வாகிகள் -
வந்துட்டாருய்யா.. வந்துட்டாரு! திருச்சி கிழக்கில் வடிவேலு? திமுகவில் வெடித்த கலகக் குரல்! என்னாச்சு? -
ஸ்டாலினிடம் சமர்ப்பிக்கப்பட்ட ரகசிய அறிக்கை: சேகர்பாபு மீது நடவடிக்கை எடுக்க தயங்கும் தலைமை - பின்னணி என்ன? -
கரூர் சம்பவத்தில் விஜய் மீது வழக்கு போட்டிருந்தால் இன்று நிலைமையே வேறு.. நாங்க ஏமாந்துட்டோம்! எவ வேலு












Click it and Unblock the Notifications