களமிறக்கப்படும் 10 புதுமுகங்கள்.. ஸ்டாலின் போடும் பட்டியல்.. சுடசுட ரெடியாகும் லிஸ்ட்.. திக்திக் திமுக
சென்னை: தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தலுக்கான அடிப்படை பூர்வாங்க பணிகளை ஆளும் திமுக செய்ய தொடங்கி உள்ளதாக திமுக தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முக்கியமாக தேர்தலுக்கான வேட்பாளர்களை இப்போதே திமுக அடையாளம் காண உள்ளதாம்.
ஆளும் திமுக கட்சி 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகி வருகிறது. வருகின்ற நாடாளுமன்ற தேர்தலிலும் 38-39 இடங்களை வெல்ல வேண்டும் என்று இலக்கு நிர்ணயம் செய்து திமுக பணிகளை செய்து வருகிறது.

நாடாளுமன்றத் தேர்தல் களத்தின் முதல்கட்டமாக, திருச்சியில், டெல்டா மாவட்டங்களின் வாக்குச்சாவடி முகவர்களுக்கான பயிற்சிப் பாசறைக் கூட்டம் திமுக சார்பாக நேற்று நடத்தப்பட்டது. இதில் கலந்து கொண்ட முதல்வர் ஸ்டாலின் முக்கியமான சில கருத்துக்களை தெரிவித்தார். தமிழை - தமிழினத்தை - தமிழ்நாட்டு மக்களை - இந்திய ஜனநாயகத்தைக் காப்பதற்கான களம் தயாராகிவிட்டது.
திருப்புமுனை தரும் தீரர்கள் கோட்டமான திருச்சியில், வாக்குச்சாவடி வீரர்களிடம் அவர்களின் கடமை இன்றைய காலத்தின் தேவை என்பதை எடுத்துரைத்தேன்.வெறுப்பையும் பிரிவினையையும் மக்களிடையே விதைத்தவர்கள் இப்போது #INDIA-வின் மக்களின் ஒற்றுமையைக் கண்டு அஞ்சி நடுங்குகிறார்கள். களம் காணுவோம்! களமாடுவோம்! நாற்பதும் நமதே! நாடும் நமதே!, என்று கூட்டத்தில் பேசினார்.
லிஸ்ட்: இந்த நிலையில்தான் ஆளும் திமுக சார்பாக பணிகள் செய்வதற்கு முன் ஒரு லிஸ்ட் எடுக்கப்பட்டு அந்த நபர்களின் செல்வாக்கை உளவுத்துறை மூலம் அறிய முதல்வர் ஸ்டாலின் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. சமீபத்தில் சென்னையில் திமுக உயர் நிலை செயல்திட்ட குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் பல முக்கிய தீர்மானமங்கள் நிறைவேற்றப்பட்டன.
தேர்தல்: கிராமங்கள்தோறும் திமுக கொடி கம்பங்கள் அமைப்பது. தமிழ்நாடு முழுவதும் கருணாநிதி சிலைகள் அமைப்பது. தமிழ்நாடு முழுவதும் இணைய வசதியுடன் கலைஞர் படிப்பகங்கள் அமைப்பது போன்ற தீர்மானங்களை கொண்டு வந்தனர்.
இந்த பணிகள் ஒருபுறம் இருக்க இன்னொரு பக்கம் திமுக தரப்பு லோக்சபா தேர்தலுக்கும் தயாராக உள்ளதாம். அதன்படி லோக்சபா தேர்தலுக்காக பூத் கமிட்டியை அமைக்க ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார். 50 ஆயிரம் உறுப்பினர்களை இணைக்க டார்கெட் வைத்துள்ளோம். இதில் பாதி கிணறு தாண்டிவிட்டோம். ஆனால் மீதி கிணறு இன்னும் தாண்டவில்லை.
லோக்சபா தேர்தலுக்கு உட்கட்சி சர்வே எடுக்க வேண்டும்.எம்பிக்கள் செயல்பாடு எப்படி உள்ளது.. யாரை மீண்டும் நிற்க வைக்கலாம்.. புதியவர்கள் தேவையா.. ஏற்கனவே இருப்பவர்களை மீண்டும் களமிறக்கலாமா என்றும் ஆலோசனை செய்யப்பட்டு இருக்கிறதாம். முக்கியமாக 10 புதிய முகங்களை தேர்தலுக்கு களமிறக்குவது தொடர்பாக ஆலோசனை செய்து இருக்கிறாராம்.
தமிழ்நாட்டில் இருக்கும் 39 இடங்களில் அனைத்தையும் வெல்ல ஸ்டாலின் டார்கெட் விதித்து இருக்கிறார் என்று கூறப்படுகிறது. இதற்காக ஆளும் திமுக சார்பாக பணிகள் செய்வதற்கு முன் ஒரு லிஸ்ட் எடுக்கப்பட்டு அந்த நபர்களின் செல்வாக்கை உளவுத்துறை மூலம் அறிய முதல்வர் ஸ்டாலின் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
அதாவது தற்போது இருக்கும் திமுக எம்பிக்கள் செயல்பாடு, மக்களுக்கு அவர்கள் மீது உள்ள நம்பிக்கை, ஆதரவு ஆகியவை பற்றி சர்வே எடுக்கப்படும். அதன்பின் அதை உளவுத்துறை ரிப்போர்ட்டாக கொடுக்கும்.












Click it and Unblock the Notifications