சீக்ரெட் எப்படி கசியுது? உளவுத்துறையை விட்டு.. விசாரித்த ஸ்டாலின்! தேர்தல் வர நேரத்தில்.. கருப்பு ஆடு
சென்னை: லோக்சபா தேர்தல் கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி உடன்பாடுகளை இந்த வாரத்துக்குள் முடிக்க தேர்தல் பேச்சுவார்த்தைக் குழுவுக்கு அறிவுறுத்தியிருக்கிறார் ஸ்டாலின்.
லோக்சபா தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தை முடிவுகளை வேகமாக எடுத்து வருகின்றன. லோக்சபா தேர்தலையொட்டி திமுக- மார்க்சிஸ்ட் இடையே நடந்த தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையில் 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு இரண்டு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே திமுக 2 தொகுதிகளின் பங்கீடு தொடர்பான அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 1 இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. மீண்டும் ராமநாதபுரத்தில் போட்டியிடும் என்று அறிவித்துள்ளது. திமுக கூட்டணியில் ஐ.யூ.எம்.எல் கட்சி சார்பாக மீண்டும் ராமநாதபுரம் தொகுதியில் ஏணி சின்னத்தில் நவாஸ் கனி போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
அதேபோல் வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் மீண்டும் நாமக்கல் தொகுதி கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தற்போது அந்த தொகுதி எம்பியாக அந்த கட்சியின் ஏகேபி சின்ராஜ் உள்ளார். ஆனால் புதுமுகத்துக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று உங்கள் கட்சியிலேயே முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
எம்பி ஏகேபி சின்ராஜ் வரும் தேர்தலில் போட்டியிடப்போவது இல்லை என கூறியுள்ளார். அதனால் புதுமுகம் போட்டியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இது போக மதிமுகவிற்கு வழங்கப்படும் தொகுதி குறித்தும் விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கமல் கூட்டணி: இது போக தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தலில் மக்கள் நீதி மய்யம் திமுகவுடன் கூட்டணி வைத்து போட்டியிடும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இவர்கள் கூட்டணி கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டதாம். விரைவில் அதற்கான அறிவிப்பும் வெளியாகும் என்கிறார்கள்.
2024 லோக்சபா தேர்தலில் கோயம்புத்தூரில் போட்டியிடுவேன் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் சமீப நாட்களாக தெரிவித்து வருகிறார். அவர் பேசுகிற இடங்களில் எல்லாம் லோக்சபா தேர்தலில் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக முடிந்த அளவு பதிவு செய்து கொண்டே இருக்கிறார். மேலும், கூட்டணிக்கு அழைப்பிதழ் ரெடியாகிவிட்டது என்றும் கூறி உள்ளார்.
ஸ்டாலின் முடிவு: இந்த நிலையில்தான் கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி உடன்பாடுகளை இந்த வாரத்துக்குள் முடிக்க தேர்தல் பேச்சுவார்த்தைக் குழுவுக்கு அறிவுறுத்தியிருக்கிறார் ஸ்டாலின். காங்கிரசைக் கூட சமாளித்துவிடலாம் போலிருக்கிறது ; மதிமுகவையும் விடுதலை சிறுத்தைகளையும் சமாளிக்க முடியவில்லை என ஸ்டாலினிடம் ஆதங்கப்பட்டிருக்கிறது பேச்சுவார்த்தைக்குழு.
இந்த நிலையில், திமுக முன்னெடுக்கும் தேர்தல் வியூகங்கள், அதிமுக தரப்புக்கு செல்வதாக ஒரு புகார் ஸ்டாலினின் கவனத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. அதைக் கேட்டு அப்-செட்டாகியிருக்கிறார் ஸ்டாலின். ரகசிய தகவல்கள் அதிமுக தரப்புக்கு எங்கிருந்து கசிகிறது என்பதை கண்டறியுமாறு உளவுத்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாம்.
இந்த நிலையில், திமுக முன்னெடுக்கும் தேர்தல் வியூகங்கள், அதிமுக தரப்புக்கு செல்வதாக ஒரு புகார் ஸ்டாலினின் கவனத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. அதைக் கேட்டு அப்-செட்டாகி யிருக்கிறார் ஸ்டாலின். ரகசிய தகவல்கள் அதிமுக தரப்புக்கு எங்கிருந்து கசிகிறது என்பதை கண்டறியுமாறு உளவுத்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாம்.












Click it and Unblock the Notifications