வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகை! மசூதி வளாகத்தில் திமுக நிர்வாகி சுபேர் கான்! அடடே என்ன ஐடியா?
சென்னை: நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கக் கோரி 50 நாட்களில் 50 லட்சம் கையெழுத்துகள் பெறும் முயற்சியை திமுக முன்னெடுத்துள்ள நிலையில் அக்கட்சியின் சிறுபான்மையினர் அணி மாநில செயலாளர் சுபேர் கான், பள்ளிவாசலுக்கு வெள்ளிக்கிழமை ஜும் ஆ தொழுகை நடத்த வந்த ஆயிரக்கணக்கானோரிடம் அரை மணி நேரத்தில் கையெழுத்துகள் பெற்று கவனம் ஈர்த்துள்ளார்.
நீட் விலக்கு நம் இலக்கு: நீட் விலக்கு நம் இலக்கு என்ற முழக்கத்துடன் நீட் தேர்வுக்கு எதிராக தமிழகம் முழுவதும் பொதுமக்களிடமிருந்து 50 லட்சம் கையெழுத்துக்கள் பெற்று அதனை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவிடம் ஒப்படைப்பதற்கான பணிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முடுக்கிவிட்டுள்ளார்.

திமுக சிறுபான்மையினர் அணி: திமுக தொடங்கியுள்ள இந்த கையெழுத்து இயக்கம் மக்கள் மத்தியில் பெரியளவில் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என நினைக்கிறார் அவர். அதன் அடிப்படையில் திமுக இளைஞரணியினர், மாணவரணியினர் மட்டுமல்லாமல் சிறுபான்மையினர் அணி உள்ளிட்ட சார்பு அணிகளின் நிர்வாகிகளும் நீட் தேர்வு விலக்கு கையெழுத்துக்களை பெற்று வருகிறார்கள். இந்நிலையில் சென்னை வாலாஜா சாலை பெரிய பள்ளிவாசல் வளாகத்தில் டேபிள், சேர் சகிதமாக நேற்று டேரா போட்ட திமுக சிறுபான்மையினர் அணி மாநிலச் செயலாளர் சுபேர் கான், ஜும் ஆ தொழுகை நடத்த வந்த இஸ்லாமியர்களிடம் நீட் தேர்வுக்கு எதிராக கையெழுத்துக்கள் பெற்றார்.
வாலாஜா சாலை பெரிய பள்ளிவாசல்: மூன்று நாட்கள் அலைந்து திரிந்து வாங்க வேண்டிய ஆயிரக்கணக்கான கையெழுத்துக்களை மூன்று மணி நேரத்தில் ஸ்மார்ட் ஒர்க் செய்து வாங்கிவிட்டார் சுபேர் கான். இந்த வாரம் சென்னை வாலாஜா சாலை பெரிய பள்ளிவாசல் வளாகத்தில் முகாமிட்டதை போல் வரும் வாரங்களில் அடையாறு பெரிய பள்ளிவாசல் உள்ளிட்ட இன்னும் பல முக்கிய மசூதிகளில் நீர் தேர்வு விலக்கு கோரி இஸ்லமியர்களிடம் கையெழுத்து பெறும் திட்டத்தில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தேவாலயங்கள்: மசூதிகளில் கையெழுத்து வாங்கப்படுவதை போலவே தேவாலயங்களிலும் நீட் தேர்வு விலக்கு கோரி திமுக சிறுபான்மையினர் அணி சார்பில் கையெழுத்துக்கள் பெறப்படும் எனத் தெரிகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications