வெடிகுண்டுகளுடன் உள்ளே நுழைய முயற்சியா? ஆளுநர் வதந்தி பரப்புகிறார்.. பொய் பேசுகிறார்- திமுக கண்டனம்
சென்னை: ஆளுநர் மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பொய் சொல்கிறார்; வதந்தி பரப்புகிறார் என திமுக மாணவர் அணித் தலைவர் ராஜீவ் காந்தி குற்றம் சாட்டி உள்ளார்.
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை மீது இருசக்கர வாகனத்தில் வந்த நபர் ஒருவர் திடீரென பெட்ரோல் குண்டுகளை நேற்று வீசினார். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் பெட்ரோல் குண்டுகளை வீசிய நபரை பிடித்தனர். அந்த நபர் ரவுடி கருக்கா வினோத் என விசாரணையில் தெரிய வந்தது. வினோத்திடம் இருந்து மேலும் 2 பெட்ரோல் குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்த சம்பவம் தொடர்பாக கூடுதல் காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா நேற்று விளக்கம் அளித்தார். அதில், பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. மதுபோதையில் பெட்ரோல் குண்டை வினோத் வீசியுள்ளார். ஆளுநர் மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீசப்படவில்ல. அடையாறு சர்தார் பட்டேல் சாலையில்தான் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டுள்ளன. இது பற்றி வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெறுகிறது என்றார் கூடுதல் காவல் ஆணையர் பிரேம் ஆனந்த்.
பின்னர் நேற்று இரவு தமிழ்நாடு ஆளுநர் மாளிகையின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் இந்த சம்பவம் பற்றி பதிவிடப்பட்டிருந்தது. தமிழ்நாடு ஆளுநர் மாளிகையின் எக்ஸ் பக்கத்தில் பதிவிடப்பட்டிருந்ததாவது: ஆளுநர் மாளிகை மீது இன்று பிற்பகலில் தாக்குதல் நடத்தப்பட்டது. வெடிகுண்டுகளை ஏந்திய விஷமிகள் பிரதான வாயில் வழியாக உள்ளே நுழைய முயன்றனர். எனினும் உஷாராக இருந்த காவலர்கள் தடுத்ததால், இரண்டு பெட்ரோல் குண்டுகளை ராஜ் பவனுக்குள் வீசி விட்டு தாக்குதல் நடத்தியவர்கள் தப்பினர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆளுநர் மாளிகையின் இந்த பதிவுக்கு திமுக மாணவர் அணித் தலைவர் ராஜீவ் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ராஜீவ் காந்தி கூறுகையில், பொய் பேசுவதும், வதந்தி பரப்புவதும் தமிழ்நாடு ஆளுநரின் வழக்கமான செயல்களில் ஒன்று என்று தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications