கிரிஷ் சோடங்கர் இல்ல.. ஸ்டாலினை சந்தித்த கேசி வேணுகோபால்.. விருப்ப பட்டியல் கொடுக்கும் காங்கிரஸ்!
சென்னை: காங்கிரஸ் கட்சியின் அமைப்பு பொதுச்செயலாளர் கேசி வேணுகோபால், முதல்வர் ஸ்டாலினை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின் போது காங்கிரஸ் போட்டியிடும் விருப்ப தொகுதிகளுக்கான பட்டியலை முதல்வர் ஸ்டாலினிடம் கொடுக்க உள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
சட்டசபைத் தேர்தல் நெருங்கிட்ட சூழலில், திமுக தரப்பில் கூட்டணி கட்சிகளின் தலைவர்களுடன் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையை தொடங்கி இருக்கிறது. இன்று இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறது. ஐயூஎம்எல் சார்பாக 3 தொகுதிகள் கேட்கப்பட்ட சூழலில், திமுக தரப்பில் 2 தொகுதிகள் வரை கொடுக்கப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேமுதிக மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சிகள் கூட்டணிக்குள் வந்திருப்பதால், கூட்டணி கட்சிகளும் விட்டுக் கொடுக்க வேண்டும் என்று திமுக தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டிருக்கிறது. முதலில் சிறிய கட்சிகளுடனும், பின்னர் விசிக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்த தயாராகி வருகிறது. இதனிடையே திமுக - காங்கிரஸ் இடையில் கூட்டணி தொடருமா என்ற கேள்விகளும் எழுந்துள்ளது.
ஏனென்றால் காங்கிரஸ் கட்சி தரப்பில் ஆட்சியில் பங்கு, மதுரை வடக்கு தொகுதி உள்ளிட்டவை கேட்கப்பட்டு வந்தது. ஆனால் சென்னை வந்த காங்கிரஸ் கட்சியின் அமைப்பு பொதுச்செயலாளர் கேசி வேணுகோபால், ஆட்சியில் பங்கு கோரிக்கை கட்சியின் நிலைப்பாடு அல்ல என்று வெளிப்படையாக அறிவித்தார். இதனால் திமுக - காங்கிரஸ் கூட்டணி தொடர்வதாக பார்க்கப்பட்டது.
இருப்பினும் கே.சி.வேணுகோபால் முதல்வர் ஸ்டாலினை சந்திக்க முடியாமல் டெல்லி திரும்பியது பல்வேறு சலசலப்பை உருவாக்கியது. அதேபோல் சட்டசபையிலும் காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை மீண்டும் ஸ்டாலின் ஆட்சி அமைப்பார் என்று புகழ்ந்து பேசினார். இதனிடையே டெல்லி காங்கிரஸ் தலைமையிடம் திமுக தரப்பு நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் அமைப்பு பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் இன்று சென்னை வந்தார். சென்னை வந்துள்ள கே.சி.வேணுகோபால், முதல்வர் ஸ்டாலினை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின் போது காங்கிரஸ் கட்சி போட்டியிடும் விருப்ப தொகுதிகளுக்கான பட்டியலை கொடுக்க உள்ளதாக தெரிய வந்துள்ளது. இந்த ஆலோசனையில் செல்வப்பெருந்தகை உள்ளிட்டோரும் இருக்கின்றனர்.
முன்னதாக திமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த காங்கிரஸ் கட்சி கிரிஷ் சோடங்கர் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. ஆனால் கிரிஷ் சோடங்கரை மாற்ற திமுக தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. தினேஷ் குண்டுராவ் போன்றோரை கூட்டணி பேச அனுப்புங்கள் என்றும் வலியுறுத்தப்பட்டது. ஆனால் காங்கிரஸ் கட்சி மீண்டும் கிரிஷ் சோடங்கரை அனுப்பியது. தற்போது கே.சி.வேணுகோபால் நேரடியாக ஸ்டாலினிடம் பேசவிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
என்கிட்டயே அழுது சீன் போடுறீயா? நான் என்ன கல்லா.. டிஆர் பாலுவை முற்றுகையிட்ட எஸ்ஆர் ராஜா ஆதரவாளர்கள் -
அரசு அலுவலர், ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு! ஸ்டாலின் சொன்ன மேஜர் அறிவிப்பு! திமுக சிக்ஸர் வாக்குறுதி -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
அட.. இதை கவனிச்சீங்களா? தமிழகத்திலேயே 2 குடும்பம் மட்டும்தான்! திமுகவில் களமிறங்கும் தந்தை - மகன்கள் -
"மகளிருக்கு ஜாக்பாட்".. ரூ.8,000 கூப்பன் உள்பட பெண்களுக்கு திமுக தந்த டாப் 14 அறிவிப்புகள் – லிஸ்ட் -
ஸ்டாலின் பிரச்சாரத்துக்கு ரெடி.. “குறுக்க யாரும் வந்துடாதீங்க”.. அறிவிப்பில் வந்த எச்சரிக்கை! -
"ரூ.30 லட்சம் வரை கடனுதவி".. சிறுபான்மையினரை கவர திமுக தேர்தல் அறிக்கையில் டாப் 10 அறிவிப்பு -
விவசாயிகளுக்கு திமுகவின் ‘ஜாக்பாட்’! மீட்டர் பொருத்தப்படாத நவீன பம்ப்செட் வழங்கப்படும் என வாக்குறுதி -
OPS: விருப்ப மனு கொடுத்தும் சீட் கிடைக்கலையே.. திடீரென அண்ணா அறிவாலயம் வந்த ஓபிஎஸ் மகன்! -
முட்டி மோதியும் கண்டுகொள்ளாத திமுக, அதிமுக.. 4 தொகுதிகளில் மன்சூர் அலிகான் தனித்துப் போட்டி! -
திவ்யா சத்யராஜ், வைஷ்ணவி, ராஜீவ் காந்தி, கனிமொழி, போஸ் வெங்கட்டுக்கு சீட் ஏன் கிடைக்கவில்லை?












Click it and Unblock the Notifications