இன்று மாலைக்குள் நல்ல செய்தி வரும்.. காங்கிரஸ் நிலைப்பாட்டில் நல்ல மாற்றம்.. டிகேஎஸ் இளங்கோவன்!

Subscribe to Oneindia Tamil

வேலூர்: திமுக - காங்கிரஸ் இடையிலான கூட்டணி தொடர்பாக மாலைக்குள் நல்ல செய்தி வரும் என்று திமுக செய்தித் தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் உடனான கூட்டணியை சுமூகமாக முடிக்கதான் ஸ்டாலின் விரும்புவார் என்று கூறிய டிகேஎஸ் இளங்கோவன், காங்கிரஸ் கட்சி பழைய நிலைப்பாட்டில் இருந்து மாறி இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

சட்டசபைத் தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணி தொடருமா என்ற விவாதம் நீண்ட நாட்களாக நடைபெற்று வருகிறது. முதலில் ஆட்சியில் பங்கு என்று பேசி வந்த காங்கிரஸ் கட்சியின் கிரிஷ் சோடங்கர், பிரவீன் சக்ரவர்த்தி உள்ளிட்டோர் தற்போது, கூடுதல் தொகுதிகள் என்று பேச தொடங்கியுள்ளனர். திமுக - காங்கிரஸ் இடையில் முதற்கட்ட தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடந்தது.

DMK Congress

அப்போது திமுக 25 தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்ய சபா சீட் என்று கூறி இருக்கிறது. ஆனால் காங்கிரஸ் கட்சியோ 41 தொகுதிகள் வேண்டும் என்று பிடிவாதம் காட்டி இருக்கிறது. ஒரு கட்டத்தில் காங்கிரஸ் கட்சியிடம் இதுதான் எங்களால் முடியும்.. இல்லையென்றால் உங்கள் முடிவை எடுத்துக் கொள்ளுங்கள் என்று திமுக தெளிவாக கூறிவிட்டது. இன்னொரு பக்கம் தவெக உடன் காங்கிரஸ் கூட்டணி பேசி வந்தது.

இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலினுடன் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம், செல்வப்பெருந்தகை உள்ளிட்டோ சந்தித்துள்ளனர். அப்போது திமுக எம்பிக்களான கனிமொழி மற்றும் டி.ஆர்.பாலு ஆகியோரும் உடனிருந்தனர். இந்த சந்திப்பு குறித்து வேலூரில் திமுக செய்தித் தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன் பேசுகையில், காங்கிரஸ் உடனான கூட்டணியை சுமூகமாக முடிக்கதான் ஸ்டாலின் விரும்புவார்.

காங்கிரஸ் ஒன்று கேட்கிறது.. திமுக ஒன்று சொல்கிறது.. தற்போது மீண்டும் கூட்டணி பேச்சுவார்த்தைக்கு வந்துள்ளார்கள் என்றால், காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவே தெரிகிறது. இன்று மாலைக்குள் நல்ல செய்தி வரும் என்று தெரிவித்துள்ளார். இன்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை மகள் நிச்சயதார்த்த விழா நடக்கவுள்ளது.

அந்த விழாவில் பங்கேற்க கேசி வேணுகோபால், கிரிஷ் சோடங்கர் உள்ளிட்ட டெல்லி காங்கிரஸ் பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர். அதேபோல் திமுக நிர்வாகிகளும் பங்கேற்க உள்ளனர். இதனால் இரவில் சந்திப்பு நடத்த திமுக - காங்கிரஸ் இடையிலான கூட்டணியை உறுதி செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+