பொங்கலுக்கே பட்டாசு வெடிப்பாங்க.. தீபாவளி கிடைச்சா? பாஜகவுக்கு "உதவி செய்யும்" காங்கிரஸ், அனிதா!
சென்னை: 2024 மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் காங்கிரஸ் மற்றும் திமுகவினர் சிலரது கருத்துக்கள் மற்றும் செயல்பாடுகள் வெறும் வாயை மெல்லும் பாஜகவுக்கு அவல் அள்ளிக் கொடுத்த கதையாக மாறி இருக்கிறது.
2024 மக்களவைத் தேர்தல் பரபரப்பு தேசம் முழுவதும் தொற்றி இருக்கிறது. ஆளுங்கட்சியான பாஜகவும் எதிர்க்கட்சியான காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகளும் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. பொதுவாகவே பாஜகவின் தேர்தல் யுக்தி என்பது மக்களின் உணர்வுகளை தூண்டி வாக்கு சேகரிப்பதுதான். இந்துத்துவம், தேசியவாதம், பாகிஸ்தான் எதிர்ப்பு, எல்லையில் ராணுவ வீரர்கள் என்று கூறியே பாஜக தேர்தல் சமயத்தில் உணர்வுகளை தூண்டி வாக்கு சேகரிக்கிறது.

தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட தென் இந்தியா மாநிலங்களில் பெரும்பாலான மக்கள் ஆட்சியின் செயல்பாடுகளை அடிப்படையாக வைத்தே வாக்குகளை செலுத்துகிறார்கள். ஓப்பிட்டு அளவில் சாதி, மதவாதம் பேசும் கட்சிகளை விட சமூக நீதி, முற்போக்கு பேசும் கட்சிகளுக்கே மக்கள் ஆதரவளிக்கின்றன. அதற்கு ஒரு உதாரணம்தான், தமிழ்நாட்டில் தொடர்ந்து திராவிட கட்சிகளும், கேரளத்தில் மார்க்சிஸ்ட் அல்லது காங்கிரஸ் கட்சிகள் ஆட்சியை பிடிப்பதும்.
ஆனால், வட மாநிலங்களில் நிலைமை அப்படியே தலைகீழாக உள்ளது. தங்கள் மாநிலத்துக்கு, பகுதிக்கு அரசு கொண்டு வரும் திட்டங்கள், சமூக நீதி போன்றவற்றை கருத்திக்கொள்ளாமல், சாதி, மதம் போன்றவற்றையே பிரதானமாக கருதி வாக்களித்து வருகிறார்கள். அதேபோல் தேர்தல் சமயங்களில் கட்சிகளின் மத ரீதியிலான பேச்சுக்கள், தேச பக்தி பேச்சுக்களுக்கு மயங்கி மக்கள் வாக்குகளை செலுத்துகிறார்கள். குஜராத் கலவரத்துக்கு பிறகு, பாலம் இடிந்துவிழுந்த தொகுதியிலும், உபியில் விவசாயிகள் கொல்லப்பட்ட தொகுதியிலும் மீண்டும் ஆளுங்கட்சியே வெற்றிபெறுவதற்கு காரணம் இதுதான்.
2019 மக்களவைத் தேர்தலுக்கு சில மாதங்கள் முன்பாக புல்வாமாவில் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாகவும், பாகிஸ்தானை விமர்சித்தும் பிரச்சார மேடைகளில் பாஜக ஆற்றிய உரை அக்கட்சிக்கு பெரும் வெற்றியை பெற்றுக் கொடுத்ததாக பல்வேறு ஊடகங்கள், அரசியல் திறனாய்வாளர்கள் கருத்து தெரிவித்தனர். அதேபோன்று 2016 ஆம் சர்ஜிகல் ஸ்ட்ரைக் சம்பவத்தை சுட்டிக்காட்டியே பல மாநில தேர்தல்களில் பாஜக வெற்றிபெற்றது. இந்த தேர்தலிலும் பாஜக அயோத்தி ராமர் கோயில், ஞானவாபி மசூதி சர்ச்சை, பொது சிவில் சட்டம், சிஏஏ போன்றவற்றை கிளப்பி இந்த தேர்தலை பாஜக எதிர்கொள்ள திட்டமிட்டு உள்ளது.
ஆனால், வழக்கமான பாகிஸ்தான், சீனா டெம்பிளேட்டை இதுவரை பாஜக எடுத்து பேசாமல் உள்ளது. இந்த நிலையில்தான் வெறும் வாயை மெல்லும் பாஜகவுக்கு அவல் கொடுத்ததை போன்று தமிழ்நாட்டிலும், கர்நாடகத்திலும் ஒரு சம்பவம் நடந்து இருக்கிறது. தமிழ்நாட்டில் நேற்று குலசேகரபட்டினத்தின் ராக்கெட் ஏவுதளத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்த நிலையில், இந்த நிகழ்ச்சி தொடர்பாக திமுகவை சேர்ந்த அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கொடுத்த விளம்பரத்தில் சீன ராக்கெட் இடம்பெற்று இருப்பதை பாஜகவினர் பூதாகரமாக கிளப்பி இருக்கிறார்கள்.
அதேபோன்றுதான் கர்நாடகாவில் காங்கிரஸ் தலைவர் பேசி இருக்கும் கருத்து பாஜகவுக்கு அவல் சாப்பிடுவதைபோன்று அமைந்து இருக்கிறது. மாநிலங்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியினர் வெற்றிபெற்றதை கொண்டாடும் வகையில் "பாகிஸ்தான் ஜிந்தாபாத்" என முழக்கம் எழுப்பப்பட்டதாக சர்ச்சை எழுந்தது. இது தொடர்பாக கர்நாடக சட்ட மேலவையில் பேசிய காங்கிரஸ் எம்.எல்.சி. ஹரிபிரசாத், "பாஜகவுக்குதான் பாகிஸ்தான் எதிரி நாடு. எங்களுக்கு இல்லை" என்று கூறினார். இது பற்றி கேள்வி எழுப்பிய பத்திரிகையாளரிடம் காங்கிரஸ் தலைவர் ஆவேசமாக பேசி பிரச்சனையை பெரிதாக்கிவிட்டன. இதனை ஓரமாக நின்று கவனித்த பாஜகவினர் "இதுபோதும் எனக்கு.. இதுபோதுமே" என தேர்தல் பிரச்சாரத்துக்காக குறிவைத்து இருக்கிறார்கள்.
-
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
பாலைவனத்தில் பதுங்கும் சீன டிராகன்... பதறும் அமெரிக்கா.. வெறும் 90 நொடிகளில் எல்லாமே முடிஞ்சுடும் -
ஒட்டுமொத்த தலைநகரையும் கையில் எடுத்த ராணுவம்! பாகிஸ்தானில் ஓவர்நைட்டில் எல்லாம் மாறிடுச்சு.. பதற்றம் -
சிங்கப்பூரில் இந்தியாவை பாராட்டிய அமெரிக்க பாதுகாப்பு துறை அமைச்சர்.. வியந்து போய் சொன்ன விஷயம் -
பாலைவனத்தில் பங்கர்கள்.. அணு ஆயுதங்களை டபுளாக்கும் சீனா! சாட்டிலைட் படங்களால் வெளிவந்த உண்மை! -
சீனாவில் ஆடு மேய்க்கும் வேலைக்கு மாதம் 1 லட்சம் சம்பளம்! பண்ணையில் திரளும் பட்டதாரிகள்! பின்னணி என்ன -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி












Click it and Unblock the Notifications