இந்திய கம்யூனிஸ்ட் நினைச்சது நடக்குமா? திமுக கூட்டணியில் நாளை தொகுதி பங்கீடு கையெழுத்தாக வாய்ப்பு
சென்னை: திமுக - இந்திய கம்யூனிஸ்டு (சிபிஐ) இடையே நாளை தொகுதி பங்கீடு உடன்பாடு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தொகுதி பங்கீடு தொடர்பாக 4 ஆம் கட்ட பேச்சுவார்த்தைக்காக நாளை சென்னை அண்ணா அறிவாலயத்திற்கு மு வீரபாண்டியன் வருகை தருகிறார். கடந்த முறை 6 தொகுதியில் போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்டுக்கு இந்த முறை 5 தொகுதிகள் வழங்கப்படுவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
திமுக கூட்டணியில் தே.மு.தி.க. உள்ளிட்ட புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பங்கீட்டை நிறைவு செய்வதில் இழுபறி நீடித்து வருகிறது. நீண்ட பேச்சுவார்த்தைக்கு பின்னர் தான் காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது.

திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு
திமுக கூட்டணிக்கு புதிதாக வந்துள்ள தே.மு.தி.க. இரட்டை இலக்க தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே கூட்டணியில் உள்ள இந்திய கம்யூனிஸ்டு மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிகளும் தங்களுக்கும் இரட்டை இலக்க தொகுதிகள் வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகிறார்கள். இதனால் அடுத்தடுத்து பேச்சுவார்த்தை நடத்தியும் இதுவரை தொகுதி பங்கீடு நிறைவடையவில்லை.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் பெ. சண்முகமும் இடதுசாரிகள் எதிர்பார்க்கும் இடங்களை தருவது சிரமம் என்று கூறிவிட்டு காங்கிரஸ், தே.மு.தி.க.வுக்கு மட்டும் கூடுதல் தொகுதிகள் ஒதுக்குவதா? என்று கேள்வி எழுப்பி பேசியிருந்தார். இதற்கு இடையே 3 முறை பேச்சுவார்த்தை நடத்தியும் திமுக - இந்திய கம்யூனிஸ்டு இடையே தொகுதி பங்கீடு நிறைவு பெறவில்லை.
5 தொகுதிகள் ஒதுக்கீடு?
இந்த நிலையில் நாளை திமுக - இந்திய கம்யூனிஸ்டு இடையே தொகுதி பங்கீடு உடன்பாடு ஏற்படும் என்று தகவல் வெளியாகி இருக்கிறது. நாளை சென்னை அண்ணா அறிவாலயத்தில் நாளை தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடக்க இருப்பதாகவும், இதில் தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்து ஆகும் என்றும் தகவல் வெளியாகி இருக்கிறது.
இதற்காக நாளை சென்னை அண்ணா அறிவாலத்திற்கு இந்திய கம்யூனிஸ்டு தலைவர் மு வீரபாண்டியன் வருகை தருகிறார். இதில் திமுக இந்திய கம்யூனிஸ்டு கட்சிக்கு 5 தொகுதிகளை ஒதுக்குவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. கடந்த முறை 6 தொகுதியில் போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சி இந்த முறை 5 தொகுதிகள் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்!












Click it and Unblock the Notifications