Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

காங்கிரஸ், விசிக உள்பட யாருக்கும் கூடுதல் சீட் கிடையாதாம்.. திமுகவின் பிளான் இதுதானாம்.. பின்னணி

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2021 சட்டசபை தேர்தல் போல் தான் தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்படும். கூடுதலாக ஒரு சீட் கூட தர முடியாது. ஆட்சியிலும் பங்கு தர முடியாது என்று காங்கிரஸ் கட்சியிடம் திமுக தரப்பு உறுதியாக சொல்லி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதேபோல் விடுதலை சிறுத்தைகள், 2 கம்யூனிஸ்ட்டுகள், மதிமுகவிற்கும் கூடுதல் சீட் வழங்க திமுக ஆர்வம் காட்டவில்லை என்றும், அதன் பின்னணி குறித்தும் பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளது.

தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வருகிறது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியால் குழப்பம் ஏற்பட்டது. இருப்பினும் தற்போது வரை காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியில் தான் நீடித்து வருகிறது. இந்நிலையில் தான் திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைகள் சூடுபிடித்துள்ளன.

dmk-did-not-want-to-increase-the-congress-and-other-alliance-partners-seats-in-2016-assembly-electio

அதன்படி திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையை தொடங்கி உள்ளது. காங்கிரஸ் பொதுச் செயலாளர் கேசி வேணுகோபால் திமுக தலைவர்களுடன் தொடர்பில் இருந்து வருகிறார். விரைவில் தொகுதி உடன்பாட்டை எட்டும் வகையில் அவர் ஆர்வம் காட்டி வருகிறார்.

குறிப்பாக இந்த முறை காங்கிரஸ் கட்சி 2021 சட்டசபை தேர்தலை விட அதிக இடங்களில் களமிறங்குவது அல்லது ஆட்சி அதிகாரத்தில் பங்கு கோருவதை திட்டமிட்டுள்ளது. ஆனால், திமுக தற்போது கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு கூடுதல் இடங்களை வழங்க தயங்குகிறது. மாறாக, புதிய கட்சிகளை கூட்டணிக்குள் கொண்டு வருவதில் கவனம் செலுத்துகிறது.

தொகுதி பங்கீடு பற்றி பேச காங்கிரஸ் கடந்த ஆண்டே தனிக்குழுவை அமைத்தது. திமுக தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியபோது, காங்கிரஸ் ஆட்சியில் பங்கு மற்றும் கூடுதல் தொகுதிகளை கோரியது. ஆனால் அதனை ஏற்க திமுக மறுத்துவிட்டது. இதுபற்றி மூத்த திமுக தலைவர் கூறுகையில், "காங்கிரஸுக்கு ஆட்சியில் பங்கோ, கூடுதல் இடங்களோ கிடையாது. 2021 சட்டசபை தேர்தலில் ஒதுக்கப்பட்ட அதே இடங்கள் தான் கிடைக்கும். 2021-ல் இந்த தொகுதிப் பங்கீட்டு ஃபார்முலா சிறப்பாகச் செயல்பட்டது; இந்த முறையும் இதுவே தொடரும்,'' என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

கடந்த 2021 சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதி ஒதுக்கப்பட்டது. அதில் 18 இடங்களில் வெற்றி பெற்றது. இந்நிலையில் தான் அதேபோல் இந்த முறையும் 25 தொகுதிகளை மட்டுமே வழங்க திமுக திட்டமிட்டுள்ளது. அதேபோல் தொல் திருமாவளவனின் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, வைகோவின் மதிமுக உள்ளிட்ட கட்சிகளுக்கு தலா 6 இடங்கள் வழங்கப்பட்டது.

இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கிற்கு 3 தொகுதிகளும், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, மனிதநேய மக்கள் கட்சி மற்றும் டி. வேல்முருகன் தலைமையிலான தமிழக வாழ்வுரிமைக் கட்சி போன்ற கட்சிகளுக்கு தலா ஒரு இடங்களும் வழங்கப்பட்டது. இந்த கட்சிகள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ன. இந்நிலையில் தான் இந்த முறையும் அதேபோல் தொகுதிகளை ஒதுக்க திமுக திட்டமிட்டுள்ளது. கூடுதல் சீட்டுகளை யார் கேட்டாலும் திமுக அதற்கு ஒப்புக்கொள்ளாது என்ற தகவல் வெளியாகி உள்ளது.

ஏனென்றால் நடிகர் விஜய் புதிதாக கட்சி தொடங்கி உள்ளார். அவரது தமிழக வெற்றிக் கழகம் வரும் சட்டசபை தேர்தலில் களமிறங்க உள்ளது. இதனால் அவர் ஓட்டுகளை பிரிக்கலாம். அதேபோல் கடந்த 5 ஆண்டு ஆட்சியால் இயல்பாக மக்களிடம் அதிருப்தி இருக்கலாம். இதனால் கூட்டணியை இன்னும் பலமாக்க முதல்வர் ஸ்டாலின் விரும்புகிறார்.

ஏற்கனவே கமல் ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கூட்டணியில் இணைந்துள்ளது. இதுதவிர இன்னும் சில சிறிய கட்சிகள் திமுகவுடன் கைகோர்த்துள்ளன. இதனால் அந்த கட்சிகளுக்கும் சீட் ஒதுக்கீடு செய்ய வேண்டிய கட்டாயம் திமுகவுக்கு உள்ளது. இதுதவிர பிரேமலதா விஜயகாந்தின் தேமுகதிகவை கூட்டணியில் சேர்க்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இதனால் காங்கிரஸ் கட்சிக்கு அதிக சீட் ஒதுக்க திமுக தயங்கி வருகிறது.

இதுபற்றி திமுக தரப்போ, ‛‛தேமுதிகவை கூட்டணியில் சேர்க்க திமுக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. கடந்த வாரம் பிரதமர் நரேந்திர மோடியின் என்டிஏ மாநாட்டில் தேமுதிக பங்கேற்கவில்லை. ஆனால் தேமுதிக இரட்டை இலக்க எண்ணிக்கையில் தொகுதிகளை கோருகிறது. இது சாத்தியமில்லை. இருப்பினும் அவர்களுடன் தொடர்ந்து பேசி வருகிறோம். ஒற்றை இலக்க எண்ணிக்கையிலான தொகுதிகளுக்கு அவர்கள் சம்மதிக்க வேண்டும்'' என்று கூறியது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+