வரும் 7 ஆம் தேதி ஸ்டாலின் தலைமையில் திமுக மா.செக்கள் கூட்டம்… துரைமுருகன் அறிவிப்பு! என்ன மேட்டர்?
சென்னை: திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நாளை மறுநாள் (ஜூன் 7) திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
2026 சட்டமன்ற தேர்தலுக்கு அனைத்துக் கட்சிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன. ஆளும் திமுகவை பொறுத்தவரை, 8 மண்டல பொறுப்பாளர்கள், 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் தொகுதி பார்வையாளர்களை நியமித்து தமிழகம் முழுவதும் கூட்டங்களை நடத்தி, தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளது.

கடந்த ஜூன் 1 ஆம் தேதி மதுரையில் நடைபெற்ற திமுக பொதுக்குழு கூட்டத்தில் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், ஒவ்வொரு பூத்களிலும் 30 சதவிகிதம் வாக்காளர்களை சேர்க்க வேண்டும் என்று நிர்வாகிகளுக்கு உத்தரவு பிறப்பித்தார். தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக பல்வேறு அறிவுறுத்தல்களையும் வழங்கி இருந்தார்.
இந்தநிலையில், திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் ஜூன் 7 ஆம் தேதி நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் இன்று அறிவித்துள்ளார். கட்சி உறுப்பினர் சேர்க்கை தொடர்பாக திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் மாவட்ட செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தொகுதி பார்வையாளர்கள் கூட்டம் ஜூன் 7 அன்று சனிக்கிழமை காலை 10.30 மணி அளவில், காணொலி காட்சி வாயிலாக நடைபெறும்.
அதுபோது மாவட்ட செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தொகுதி பார்வையாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications