எஸ்பி வேலுமணி வியூகத்தை முறியடித்த எவ வேலு.. கடைசி நேரத்தில் ட்விஸ்ட்! பிரேமலதா மனம் மாறியது எப்படி?
சென்னை: தமிழக அரசியல் களத்தில் யாரும் எதிர்பாராத ஒரு மாபெரும் திருப்பமாக, தேமுதிக இன்று அதிகாரப்பூர்வமாக திமுகவுடன் கைகோர்த்துள்ளது. கடந்த சில நாட்களாக அதிமுக-பாஜக கூட்டணியில் தேமுதிக இணையப்போகிறது என்று பலமாக நம்பப்பட்ட நிலையில், நேற்று நள்ளிரவில் அரங்கேறிய ரகசிய பேச்சுவார்த்தைகள் ஒட்டுமொத்த அரசியல் கணக்குகளையும் தலைகீழாக மாற்றியுள்ளன.
திமுக கூட்டணியில் இன்று தேமுதிக இணைய உள்ளது. இன்று திமுக கூட்டணியில் சில புதிய கட்சிகள் இணைகின்றன. திமுக உடன் கூட்டணியில் இணைவதற்காக பிரேமலதா தற்போது அறிவாலயம் வந்துள்ளார்.

தமிழக அரசியல் களம் 2026 சட்டமன்றத் தேர்தலை நோக்கி மின்னல் வேகத்தில் நகரத் தொடங்கியுள்ளது. ஆளுங்கட்சியான திமுக தனது கோட்டையைத் தக்கவைத்துக் கொள்ளவும், எதிர்க்கட்சிகள் ஆட்சியைப் பிடிக்கவும் இப்போதே வியூகங்களை வகுக்கத் தொடங்கிவிட்டன. இந்நிலையில், அரசியல் வட்டாரங்களில் தற்போதைய 'ஹாட் டாபிக்' - திமுக மற்றும் தேமுதிக இடையே அமையும் மெகா கூட்டணிதான்.
கடந்த சில தேர்தல்களாகவே தனித்துப் போட்டியிட்டோ அல்லது மற்ற கூட்டணிகளிலோ இருந்த தேமுதிக, தற்போது திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இணைந்துள்ளது. முக்கியமாக 6 இடங்களுக்கான மக்களை தேர்தல் அடுத்த மாதம் நடப்பதால்... அதற்கு முன் தேமுதிக, திமுகவிடம் 1 எம்பி இடத்தை வாங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த அதிரடி மாற்றத்திற்குப் பின்னால் திமுகவின் மூத்த அமைச்சர் எ.வ. வேலு மற்றும் ஒரு முக்கிய அரசியல் ஆலோசகர் ஆகியோரின் சாதுர்யமான காய்நகர்த்தல்கள் இருந்ததாகக் கூறப்படுகிறது.
கோவையில் தொடங்கிய ஆட்டம்
கடந்த வாரம் ஈஷா யோகா மையத்தில் நடைபெற்ற மகா சிவராத்திரி விழாவில், அதிமுகவின் செல்வாக்குமிக்க தலைவரான எஸ்.பி. வேலுமணியுடன் பிரேமலதா விஜயகாந்த் ஒரே மேடையில் காணப்பட்டது, தமிழக அரசியலில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. "கோவை ஆபரேஷன்" என்று வர்ணிக்கப்பட்ட அந்தச் சந்திப்பின் மூலம், தேமுதிகவை எடப்பாடி பழனிசாமி தலைமையிலான கூட்டணிக்குள் கொண்டு வருவதற்கான அத்தனை வேலைகளையும் எஸ்.பி. வேலுமணி கச்சிதமாகச் செய்திருந்தார் என்று உறுதி செய்யப்படாத தகவல்கள் வந்தன.
எ.வ. வேலுவின் 'நள்ளிரவு' பதிலடி
ஆனால், அதிமுகவின் இந்த வியூகத்தை முறியடிக்க திமுக தலைமை அமைச்சர் எ.வ. வேலுவிடம் பொறுப்பை ஒப்படைத்தது. நேற்று மாலை வரை நீடித்த ரகசியப் பேச்சுவார்த்தையில், எ.வ. வேலுவும் திமுகவின் அரசியல் ஆலோசகரும் தேமுதிக தலைமைக்கு சில முக்கிய வாக்குறுதிகளை அளித்ததாகத் தெரிகிறது.
குறிப்பாக, அதிமுக தரப்பு தயங்கிய சில தொகுதி பங்கீட்டு அம்சங்கள் மற்றும் எதிர்கால அரசியல் அங்கீகாரம் தொடர்பாக திமுக தரப்பில் அளிக்கப்பட்ட உறுதிமொழிகள் பிரேமலதாவை யோசிக்க வைத்தன. எஸ்.பி. வேலுமணி வெற்றி பெற்றுவிட்டார் என்று அதிமுகவினர் கொண்டாட்டங்களுக்குத் தயாராகிக் கொண்டிருந்த வேளையில்தான், திமுகவின் இந்த 'அதிரடி அட்டாக்' நிகழ்ந்துள்ளது.
அண்ணா அறிவாலயத்தில் உறுதி
நேற்று இரவு எடுக்கப்பட்ட இறுதி முடிவின்படி, இன்று காலை அண்ணா அறிவாலயம் வந்த பிரேமலதா விஜயகாந்த், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினைச் சந்தித்து கூட்டணியை உறுதி செய்தார். இதன் மூலம் அதிமுக மற்றும் பாஜகவின் நீண்டநாள் முயற்சிகள் கடைசி நிமிடத்தில் தோல்வியைத் தழுவியுள்ளன.
"இது வெறும் கூட்டணி மட்டுமல்ல, ஒரு பெரிய அரசியல் போரில் எ.வ. வேலுவும் அவரது குழுவும் நிகழ்த்திய நள்ளிரவு சாதனை" என்று திமுக உடன்பிறப்புகள் உற்சாகத்தில் உள்ளனர்.
இந்த அதிரடித் திருப்பம் வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
திடீரென.. திமுக வேட்பாளர் காலில் விழுந்த அதிமுக வேட்பாளர்.. வேட்பு மனு தாக்கலின்போது ருசிகரம்! -
Rs 8000 Gift Voucher: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000 கூப்பன் எங்கே கிடைக்கும்? விண்ணப்பிப்பது எப்படி? -
இல்லத்தரசி கூப்பன்.. கிராமங்களில் உள்ளவர்களுக்கு செம சான்ஸ்.. ஸ்டாலின் மாஸ்டர்பிளான்? கசிந்த தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
181–189 தொகுதிகளில் வெற்றி.. மீண்டும் வெல்லும் திமுக கூட்டணி.. அதிமுக – தவெகவிற்கு ஷாக் தந்த சர்வே -
ஸ்டாலின் தான் சிறந்த CM வேட்பாளர்.. பின்னாலேயே துரத்தும் எடப்பாடி.. விஜய்க்கு அதிர்ச்சி! புதிய சர்வே -
பஞ்சாயத்து.. பிரசாரம்.. அனல் பறக்கும் 'கேப்டன்' கோட்டை! பிரேமலதா முடிவால் அப்செட்டில் உடன்பிறப்புகள் -
"செந்தில் பாலாஜி கோவையில் போட்டியிட காரணம் இதுதான்" - பிரச்சாரத்தில் ஓப்பனாக சொன்ன முதல்வர் ஸ்டாலின் -
பொருளாக தராமல் ரூ.8,000 கூப்பன் கொடுப்பது ஏன்? மக்களிடம் முதல்வர் ஸ்டாலின் சொன்ன விளக்கம்! -
75 வருட வரலாற்றில் முதன்முறை..DSV vs IPS! திண்டுக்கல்லில் நேருக்குநேர் மோதும் திமுக-அதிமுக மா.செ.கள் -
அதிமுகவை பாஜக விலைக்கு வாங்கிவிட்டது.. திருவாரூரில் தேர்தல் பரப்புரையை தொடங்கிய ஸ்டாலின்! ‘அட்டாக்'












Click it and Unblock the Notifications