Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சான்ஸ் கொடுக்க கூடாது.. பொன்முடி பதவி பறிப்பு.. ஸ்டாலின் நடவடிக்கைக்கு பின் இப்படியொரு காரணமா!

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுகவின் துணைப் பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்து பொன்முடி நீக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பான அறிவிப்பு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பெயரிலேயே வந்திருப்பது திமுகவினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முதல்வரின் அதிரடியான நடவடிக்கைக்கு பின்னுள்ள காரணம் குறித்து பார்க்கலாம்.

2 ஆண்டுகளுக்கு முன்பாக அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், நாள்தோறும் காலையில் கட்சியினர் எந்த பிரச்சனையும் உருவாக்கி இருக்கக் கூடாது என்ற நினைப்புடன்தான் கண் விழிக்கிறேன். எல்லாரிடமும் செல்ஃபோன் கேமரா இருப்பதால், சொற்களை கவனமாக பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தி இருந்தார்.

ponmudi mk stalin dmk

பொன்முடி நீக்கம்

இந்த நிலையில் அமைச்சர் பொன்முடி பட்டை, நாமம் மற்றும் பெண்கள் பற்றி சர்ச்சையாக பேசி இருக்கிறார். சட்டமன்றத் தேர்தலுக்கு ஓர் ஆண்டு மட்டுமே இருக்கும் நிலையில், துணைப் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து பொன்முடி நீக்கப்பட்டிருக்கிறார். இதற்கு முன்பாகவும் பெண்களை பற்றி ஏராளமான முறை கட்சியினர் இழிவாக பேசி இருக்கிறார்கள்.

சிவாஜி கிருஷ்ணமூர்த்தி சர்ச்சை

திமுகவின் மேடைப் பேச்சாளரான சிவாஜி கிருஷ்ணமூர்த்தி எண்ணற்ற முறை சொல்ல முடியாத வார்த்தைகளால் பெண்களை விமர்சித்திருக்கிறார். அவர் கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டாலும், பல முறை அவர் மீண்டும் திமுகவில் சேர்க்கப்பட்டிருக்கிறார். இவ்வளவு ஏன், உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் கூட மேடையில் கெட்ட வார்த்தைகளில் பேசி சர்ச்சையில் சிக்கி இருக்கிறார்.

மேடையை பகிர்ந்துள்ள முதல்வர்

இப்படி பேசியவர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஏராளமான முறை மேடையை பகிர்ந்திருக்கிறார்கள். ஆனால் இம்முறை அமைச்சர் பொன்முடி பேசியதற்கு உடனடியாக கட்சி பதவியில் இருந்து நீக்கப்பட்டது விவாதமாகி இருக்கிறது. இம்முறை அவர் பெண்களை மட்டுமல்லாமல் இந்து சமயங்கள் குறித்தும் தேவையில்லாத வார்த்தைகளில் பேசி இருக்கிறார்.

இந்து மத விவகாரம்

பட்டை மற்றும் நாமம் ஆகிய வார்த்தைகளுக்கு புதிய அர்த்தத்தை பொன்முடி கூறி இருப்பது இந்துக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே பாஜகவினர் மத்தியில் திமுக இந்துக்களுக்கு எதிரான கட்சி என்று பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இதனால் திமுக தரப்பில் ஏராளமான முறை இந்துக்களுக்கு எதிரானவர்கள் அல்ல என்று விளக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும் சூழல் உருவாகிறது.

திருப்பரங்குன்றம் சர்ச்சை

அதுமட்டுமல்லாமல் திருப்பரங்குன்றம் விவகாரத்தின் போது மதுரையில் திடீரென இந்துக்கள் பெரியளவில் கூட்டம் கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாட்டில் பாஜக தரப்பில் மத ரீதியிலான விவகாரங்களுக்கு முன்னிலை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் மத ரீதியிலான விவகாரங்களை திமுக கவனமாக கையாண்டு வருகிறது.

பதவி பறிப்புக்கான காரணம்

ஒரு சிறிய வார்த்தை கூட மிகப்பெரிய பிரச்சனைக்கு வழிவகுக்கும் என்பதால், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல முறை திமுகவினர் கவனமாக வார்த்தைகளை பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தி வந்தார். இந்த நிலையில் பொன்முடியின் இந்து மதம் சர்ச்சை பேச்சே அவரின் பதவி பறிப்புக்கு காரணமாக பார்க்கப்படுகிறது.

மறைமுக எச்சரிக்கை

ஏனென்றால் தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு மட்டுமே இருக்கும் நிலையில், மத ரீதியிலான வாய்ப்புகளை பாஜகவுக்கு கொடுக்க திமுக விரும்பவில்லை என்று தெரிகிறது. அதேபோல் திமுக நிர்வாகிகள் வரும் காலங்களில் வார்த்தைகளை கவனமாக பயன்படுத்த வேண்டும் என்ற எச்சரிக்கையாகவும் பொன்முடி பதவி நீக்கத்திற்கு பின்னுள்ள எச்சரிக்கையாகவும் பார்க்கப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+