"என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி".. அதிரடி வியூகத்துடன் களமிறங்கும் திமுக
சென்னை: சட்டமன்ற தேர்தலுக்காக தமிழ்நாடு அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. ஆட்சியை தக்க வைப்பதற்காக திமுக பல்வேறு வியூகங்களை அமைத்து வருகிறது. அந்த வகையில் என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி என்கிற பிரச்சாரம் இன்று தொடங்கப்பட்டுள்ளது. பூத் கமிட்டி அளவில் திமுக தொண்டர்கள் உற்சாகத்துடன் பணியாற்றும் விதமாக இந்த பிரச்சாரத்தை திமுக கையில் எடுத்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டார்.
தமிழ்நாட்டில் எதிர்வரும் 2026 சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. அடுத்த 3 மாதங்களில் எப்போது வேண்டுமானாலும் அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அரசியல் கட்சிகள் இப்போதிருந்தே களத்தில் இறங்கி பரபரப்பான தேர்தல் வியூகங்கள், பிரச்சாரங்களை தொடங்கிவிட்டனர். தமிழ்நாடு அரசியலை பொறுத்தவரை திமுக கூட்டணி, அதிமுக - பாஜக கூட்டணி, நாம் தமிழர், தவெக என்று 4 முனை போட்டி நிலவி வருகிறது.

திமுக வியூகங்கள்
திமுக தங்களின் கூட்டணி பலத்துடன் ஆட்சியை மீண்டும் தக்க வைப்பதற்காக முயற்சி செய்கிறார். மறுபக்கம் அதிமுக - பாஜக கூட்டணி ஆட்சியை பிடிப்பதற்கு தீவிரம் காட்டி வருகின்றன. வழக்கம் போல நாம் தமிழர் தனித்து போட்டி என்று அறிவித்துள்ளது. தவெக தலைமையில் ஒரு பெரிய கூட்டணியை உருவாக்கும் பணியில் அந்தக் கட்சியினர் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த சில மாதங்களாகவே திமுக தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வருகிறது. உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்கிற பெயரில் முகாம்களை நடத்தி மக்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு கொடுக்கும் நகர்வை எடுத்தனர். தொகுதி வாரியாக திமுக மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகளை தனித்தனியாக சந்தித்து உரையாடி வருகிறார். எஸ்ஐஆர் பணிகள் தொடர்பாகவும் அவர் திமுக நிர்வாகிகளுக்கு செல்போனில் அழைத்து பேசினார்.
என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி
இந்நிலையில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, 'என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி' என்கிற பிரச்சாரத்தை திமுக இன்று தொடங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வாக்கச்சாவடியிலும் திமுக நிர்வாகிகள், தொண்டர்களை உற்சாகப்படுத்துவதற்காக இந்த முன்னெடுப்பை திமுக தலைமை கையில் எடுத்துள்ளது. சென்னை தேனாம்பேட்டை அண்ணா அறிவாலயம் அருகே நடைபெறும் நிகழ்ச்சியில் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் பங்கேற்றார்.
அதேபோல, தமிழ்நாடு முழுவதும் மாநில நிர்வாகிகள் தொடங்கி அந்தந்த வாக்குச்சாவடிக்கு உட்பட்ட நிர்வாகிகள் வரை அனைவரும் அந்தந்த வாக்குசாவடி அருகே இந்த நிகழ்வில் பங்கேற்றனர். வீடு வீடாக சென்று தேர்தல் பணிகளில் ஈடுபடும் திமுக பெண் நிர்வாகிகள் அதிகளவில் பங்கேற்றனர். தேர்தலுக்கு சில மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில் திமுகவின் இந்த நகர்வு திமுக பூத் கமிட்டியை பலப்படுத்தி, அவர்களின் தொண்டர்களை உற்சாகத்துடன் களப்பணியில் ஈடுபடுத்தும் வகையில் இந்த முன்னெடுப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சென்னை மயிலாப்பூர் தொகுதியில் உள்ள தனது வாக்குச்சாவடி கூட்டத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டார். தனது வாக்குச்சாவடியில் 440 வாக்குகளை இலக்காக நிர்ணயித்து ஒவ்வொரு வாக்குச்சாவடி உறுப்பினர்களுக்கும் அவரவர்களுக்கான இலக்கை முதல்வர் நிர்ணயித்துக் கொடுத்தார்.
-
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
அதிமுக என்னும் மாபெரும் மதில் இடியும் போதும்.. மௌனம் காக்கும் எடப்பாடி.. ஒரு வார்த்தை பேசலையாமே! -
எங்களை தொட்டுருக்கவே கூடாது குழந்தை.. தவெகவுக்கு அதிமுக பைனல் வார்னிங் -
சினிமா துறைக்கு ரெட் கார்பெட்.. அதிமுக மாஜிக்களுடன் நோ சந்திப்பு.. விஜய்யின் செயலால் அப்செட்! -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்! -
கலக்கத்தில் கரூர்.. தவெகவுக்கு தாவும் விஜயபாஸ்கர்? அவரே சொன்ன விளக்கம்! குஷியான அண்ணனின் விழுதுகள்! -
காங்கிரஸ் செய்த கழுத்தறுப்புகள்.. ஆசிர்வாதம் செய்த ராகுல் காந்தி! விடாத திமுக.. குதிக்கும் தலைகள்! -
Mithun: எடப்பாடி பழனிசாமி மகன் மிதுனை அரசியலுக்கு அழைப்பது தவறு! ராஜசத்யன் கடும் எதிர்ப்பு -
“அண்ணாமலைக்கும், அவர் பின்னால் போன ஆட்டு மந்தைக்கும் பாஜகவின் கொள்கை புரியவில்லை” - வேலூர் இப்ராஹிம் -
தவெகவுக்கு முக்கியத்துவம்?.. மாங்குடியில் ப.சிதம்பரம் செய்த சம்பவம்..அதிருப்தியில் திமுக நிர்வாகிகள் -
அண்ணா அறிவாலயத்தில் ஆட்டம் போட்ட மகளிரணி.. ரீல்ஸ் போடச் சொல்லும் ஸ்டாலின்! தவெகவைப் பார்த்து சூடு? -
இனிமே நம்மதான்..பக்காவாய் காய் நகர்த்தும் பாஜக! டெல்லியில் எகிறும் செல்வாக்கு! மோடி போட்ட பலே ப்ளான்












Click it and Unblock the Notifications