காங்கிரஸ் ஆட்சிக்கு வருவது எளிதல்ல.. ரிசல்ட்டுக்கு பின் இதுவே நடக்கும்! திமுக நிர்வாகி பரபர கணிப்பு!
சென்னை: காங்கிரஸ் கட்சி தனியாக 150 இடங்களை வெல்லாமல் ஆட்சி மாற்றம் நடக்காது என திமுக நிர்வாகி எஸ்கேபி கருணா தெரிவித்துள்ளார். லோக்சபா தேர்தல் முடிவுகள் தொடர்பாக தனது பார்வையை முன்வைத்துள்ளார் எஸ்கேபி கருணா.
நாடு முழுவதும் லோக்சபா தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில் ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்க உள்ளது. இந்நிலையில், நேற்று மாலை முதல் எக்ஸிட் போல் முடிவுகள் வெளியிடப்பட்டன. அவற்றில் பெரும்பான்மையான தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் மீண்டும் பாஜக அதிக சீட்களை வென்று ஆட்சிக்கு வரும் என்றே கணித்துள்ளன.

அதேசமயம், தமிழ்நாட்டைப் பொறுத்தவரை திமுக கூட்டணி தான் முன்னிலையில் இருக்கிறது. மொத்தமுள்ள 39 தொகுதிகளில் 35 க்கும் அதிகமான இடங்களை திமுக கைப்பற்றும் என்றே பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன. இரண்டாவது இடத்தை பிடிப்பது யார் என்பதில் தான் அதிமுகவும், பாஜகவும் போட்டி போட்டு கொண்டிருப்பதாக எக்ஸிட் போல் முடிவுகள் தெரிவிக்கின்றன.
திமுக நிர்வாகி அலசல்: தமிழ்நாட்டில் திமுக அதிக இடங்களில் வென்றாலும், ஒட்டுமொத்தமாக, இந்தியா கூட்டணி பின்னடைவைச் சந்திக்கும் என எக்ஸிட் போல் முடிவுகள் தெரிவித்து வரும் நிலையில், தேர்தல் முடிவுகள் தொடர்பாக அலசியுள்ளார் திமுக நிர்வாகி எஸ்கேபி கருணா.
திமுக பொறியாளர் அணியின் செயலாளராக பொறுப்பில் இருந்து வருகிறார் கு.கருணாநிதி. எஸ்கேபி கருணா என்ற பெயரில் எக்ஸ் தளத்தில் இயங்கி வருகிறார் இவர். இவர், நாடு முழுவதும் நடந்து முடிந்துள்ள லோக்சபா தேர்தலில் கட்சிகள் வெற்றி பெற வாய்ப்புள்ள இடங்களின் எண்ணிக்கை, தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு நடைபெற சாத்தியமுள்ள அரசியல் நிகழ்வுகள் பற்றி சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
எஸ்கேபி கருணா வெளியிட்டுள்ள பதிவு வருமாறு:
பொதுத்தேர்தல் 2024 :
பாஜக ஆட்சி மாறுமா? - எனது கருத்து.
1. ஆட்சி அமைக்க தேவையான மேஜிக் எண்ணிக்கை 272.
பாஜகவிடம் மட்டும் தற்போது உள்ள இடங்கள் 303. இந்த எண்ணிக்கை கூடுதல் ஆக வாய்ப்பே இல்லை. நிச்சயம் இல்லை. குறைந்தபட்சம் 30 முதல் அதிகபட்சம் 100 வரையில் குறையும் என்பதே எனது எதிர்பார்ப்பு.
இதுபோக NDA கூட்டாளிகளாக பல மாநிலங்களில் இருந்த பல கட்சிகளை இம்முறை பாஜக கைநழுவ விட்டிருக்கிறது. அதிமுக, சிரோன்மணி அகாலிதள் போன்றவைகள் இப்போது உடன் இல்லை. சிவசேனாவை உடைத்து வெறும் டம்மிகளை உடன் வைத்துள்ளனர். நிதிஷ் குமாருக்கு இருந்த செல்வாக்கை இவர்களே களவாடி விட்டமையால், அந்தக் கட்சியும் இப்போது டம்மிதான்.
பாஜகவுக்கு மெஜாரிட்டி கிடைக்குமா?: எனவே, பாஜகவுக்கு 30 இடங்கள் குறைந்தாலும் தனிப் பெரும்பான்மை இல்லை. 50 குறைந்தால் NDA கூட்டாளிகள் உதவி தேவை. 60- 100 இடங்கள் குறைந்தால் அவர்களின் அரசியல் சதுரங்க வேட்டைத் தொடங்கும்.
2. பாஜக ஆட்சியை வீழ்த்த வேண்டுமெனில் காங்கிரஸ் கட்சி தனித்து 150 இடங்களில் வென்றாக வேண்டும். 50 இடங்கள் தென்னிந்தியாவில் இருந்து கிடைத்து விடும். இது போக 100 இடங்களை காங்கிரஸ் எங்கிருந்து வெல்லும் எனும் பதிலில்தான் ஆட்சி மாற்ற சாத்தியம் உள்ளது.
இந்திய அரசியலையே புள்ளிவிவரங்களுடன் விரல் நுனியில் வைத்திருக்கும் எனது நண்பன் (கேரளாவைச் சேர்ந்த தீவிர காங்கிரஸ் அனுதாபி) காங்கிரஸ் கட்சி நிச்சயமாக வெல்லப் போகும் 190 இடங்களின் பட்டியலை தருகிறான். குஜராத்லேயே 2 இடம், ராஜஸ்தான்லே கணிசமான இடங்கள், ஹிமாச்சல், டெல்லி, அரியானா முழுமையாக அதில் உள்ளது.
நம்பிக்கை இல்லை: அந்தப் பட்டியலைப் படிக்க நன்றாக இருக்கிறது. அது நடந்தால் நன்றாகதான் இருக்கும். ஆனால், எனக்கு நம்பிக்கையில்லை. 150 வந்தாலே போதும். அதுவே பெரிய வெற்றிதான். இந்தத் தேர்தல் மாநிலக் கட்சிகளின் தேர்தல் என நான் உறுதியாக நம்புகிறேன்.
திமுக 100% முழுமையாக வெல்லும். சமாஜ்வாடி, சரத்பவார், சிவசேனா, தேஜஸ்வி யாதவ், ஆம் ஆத்மி போன்றோர் போட்டியிடும் இடங்களில் நிச்சயம் 60% ஸ்டிரைக் ரேட் உண்டு.
இருந்தாலும், காங்கிரஸ் கட்சியின் வெற்றி மட்டுமே பாஜகவை வீழ்த்த முடியும். அதற்கு அதன் ஸ்டிரைக் ரேட் 70% இருந்தால் மட்டுமே இது சாத்தியம். காங்கிரஸ் கட்சி 150 இடங்களை வெல்லாமல் ஆட்சி மாற்றம் இல்லை. எனவே தேர்தல் முடிவுகள் இப்படிதான் இருக்கக்கூடும்.
பாஜக + கூட்டணி = 210 +(50 - 75)
காங்கிரஸ் +கூட்டணி = 150+ (125 -150)
மற்றவர்கள் : 30- 60.
இந்தியா கூட்டணிக்கு மெஜாரிட்டியே கிடைத்தாலும், ஆட்சியமைக்க பாஜகவை தான் குடியரசுத் தலைவர் அழைப்பார். தனிப்பெரும் கட்சி எனும் வகையில்...
பாஜக பேரம்: பாஜக ஆட்சியமைத்து, பேரம் பேசி மற்றக் கட்சிகளை இழுக்க அவர்கள் விரும்பும் அவகாசம் தரப்படும். பாஜக, குடியரசுத் தலைவர் அலுவலகம், தேர்தல் ஆணையம் என அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவார்கள்.
அதற்கும் முன்னால், வாக்கு எண்ணிக்கையின்போதே, பாஜகவுக்கு சாதகமான டிரெண்ட் இல்லையென்றாலோ, தேர்தல் முடிவுகள் கடும் போட்டியும், இழுபறியுடனும் வரத் தொடங்கினாலோ, தேர்தல் ஆணையம் முடிவுகளை வெளியிடுவதை தாமதப்படுத்தும். சிறு காரணங்களைக் காட்டி வாக்கு எண்ணிக்கையை நிறுத்தி வைக்கும்.
இதையெல்லாம் மீறி பாஜக அல்லாத அரசு அமைவது மிகக் கடினமே! இருந்தாலும் அதற்கான சாத்தியம் உண்டு என நம்புகிறேன். மக்கள் தெளிவான, உறுதியான தீர்ப்பை அளித்திருந்தால் அது நடக்கும்.
(தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வருவதற்கு முன்பே எழுதி வைத்திருந்த டிராஃப்ட் இது. வந்த பிறகும் இதே கருத்துதான் எனக்கு).
இவ்வாறு தெரிவித்துள்ளார்.
-
இன்னும் சற்று நேரத்தில் NDA கூட்டணி தொகுதிப் பங்கீடு.. அதிமுக அலுவலகத்துக்கு விரைந்த பியூஷ் கோயல் -
என்டிஏவில் எல்லா நாளும் கார்த்திகை.. ஒரே குடும்பமா இருக்கோம்! சென்னை வந்ததும் கோயல் சொன்ன வார்த்தை! -
முடிவுக்கு வரும் பாஜக பஞ்சாயத்து.. தமிழகம் வந்த பியூஸ் கோயல்! அமித் ஷாவுக்கு எடப்பாடி ஓகே சொல்வாரா? -
அசைக்க முடியாத சாதனையைச் செய்த மோடி! 8,931 நாள் அரசு பதவி! உலக அளவில் உயரும் டிஜிட்டல் செல்வாக்கு! -
பாஜகவில் இருந்து விலகலா.. ஆதரவாளர்களுடன் ஆலோசனை குறித்து சரத்குமார் பரபரப்பு விளக்கம் -
30+ தொகுதியில் போட்டி? தமிழகத்தில் பாஜக எந்தெந்த தொகுதிகளில் களமிறங்குகிறது.. வெளியான முக்கிய தகவல் -
ஆதரவாளர்களுடன் சரத்குமார் ரகசிய ஆலோசனை.. மீண்டும் உதயமாகிறதா சமக.. அதிர்ச்சியில் பாஜக -
பாஜக பஞ்சாயத்து ஓவர்..டேக் ஆஃப் ஆகுமா அதிமுக கூட்டணி! ப்ளானை மாற்றிய ’டெல்லி’ தலை! திடீர் ட்விஸ்ட்! -
எடப்பாடி பழனிசாமிக்கே ஷாக்.. மாப்பிள்ளை அவர் தான்.. ஆனால் சட்டை? பாஜக வெயிட்டிங் கேம் பின்னணி என்ன? -
அமமுகவுக்கு 12 சீட்? குக்கர் சின்னத்தில் போட்டி.. பியூஷ் கோயல் - டிடிவி தினகரன் சந்திப்பில் உறுதி?! -
சாத்தூர் தொகுதியில் போட்டியா? எங்கும் போட்டியிடுவேன்.. நயினார் நாகேந்திரன் நேரடியாக சொன்ன பதில்! -
புதுச்சேரியில் 9 தொகுதிகளுக்கு பாஜக வேட்பாளர்கள் அறிவிப்பு.. ஜான் குமாருக்கு மீண்டும் சீட்!












Click it and Unblock the Notifications