நீட்: எடப்பாடி காட்டிய ஆ.ராசாவின் 'அயோக்கியத்தனம் பேச்சு' பக்கா எடிட்டிங்- அம்பலப்படுத்தியது திமுக!
சென்னை: நீட் தேர்வு தொடர்பாக மாஜி முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் காட்டிய முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா எம்.பி.யின் பேச்சு திரிக்கப்பட்டது என்பதை திமுக அம்பலப்படுத்தி உள்ளது. மேலும் நீட் தேர்வை ரத்து செய்ய சாத்தியமில்லை என எடப்பாடி பழனிசாமி கூறியிருந்ததற்கான பதில்தான் ஆ.ராசா பேசியது என்பதும் அதில் தெரியவந்துள்ளது.
தமிழக சட்டசபையில் மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வில் இருந்து நிரந்தர விலக்கு பெறும் மசோதா நிறைவேற்றப்பட்டது. அதேபோல் மருத்துவபடிப்புகளுக்கு இனிமேல் பிளஸ் டூ மதிப்பெண்கள் அடிப்படையில்தான் மாணவர் சேர்க்கை நடைபெறவும் சட்டத்தில் வகை செய்யப்பட்டுள்ளது.
இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்ட போது சட்டசபையில் இருந்து அதிமுக வெளிநடப்பு செய்தது. பின்னர் மசோதா நிறைவேற்ற ஆதரவு அளித்தது.

எடப்பாடி வெளியிட்ட வீடியோ
சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்த போது ஆவேசமாக பேட்டியளித்த முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஒரு வீடியோவை ஆதாரமாக காட்டினார். திமுகவின் ஆ.ராசா பேசும் அந்த ஆடியோவில், என்ன இதுக்கு தீர்மானம் போட்டீங்க; புத்தி இருக்கா.. நான் எல்லா சாத்தியக் கூறுகளையும் ஆராய்ந்துவிட்டேன். நீட்டை ரத்து செய்வதற்கு சாத்தியமே இல்லை அப்ப என்னதுக்கு தமிழ்நாட்டில் தீர்மானம் போட்ட யாரை ஏமாற்ற? அயோக்கியத்தனம் இல்ல... என்பதாக ஆ.ராசா பேசியிருந்தார். இதனை வைத்து, ஆக அன்றைய தினம் நாங்கள் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என தீர்மானம் கொண்டு வந்த போது அதை அயோக்கியத்தனம் ஆ.ராசா கருத்து தெரிவித்திருந்தார் என்றார் எடப்பாடி பழனிசாமி.

வெட்டிய வீடியோ
தற்போது திமுகவினர் ஆ.ராசா பேசிய முழு பகுதியையும் வெளியிட்டுள்ளனர். அதையும் எடப்பாடி பழனிசாமி காட்டிய வீடியோவையும் ஒப்பிட்டுப் பார்த்தால் திட்டமிட்டு ஒரு பகுதியை மட்டும் வெட்டி எடுத்து வெளியிட்டுள்ளது உறுதியாகிறது. அந்த வீடியோவில், செய்தியாளர் ஒருவர் நீட் தேர்வை ரத்து செய்ய சாத்தியக் கூறுகளே இல்லை என்கிறாரே எடப்பாடி பழனிசாமி என கேள்வி கேட்கிறார். அதற்கு ஆ.ராசா அளித்த பதில்தான் அது.
|
மக்களை ஏமாற்ற தீர்மானம்
ஆ.ராசா சொன்னது என்ன?: சாத்தியமே இல்லை என்று சொல்லிட்டீங்க இல்லை... அப்புறம் என்ன இதுக்கு தீர்மானம் போட்டிருக்கீங்க? புத்தி இருக்கா? நான் எல்லா சாத்திய கூறுகளையும் ஆராய்ந்துவிட்டேன். நீட்டை ரத்து செய்வதற்கு சாத்தியமே இல்லை. அப்புறம் என்னாத்துக்கு தமிழ்நாட்டுல வந்து தீர்மானம் போட்ட? யாரை ஏமாற்ற? அயோக்கியத்தனம் இல்ல.. முடியாத ஒரு காரியத்துக்கு.. நாளைக்கு ஸ்டாலின் வந்து சொல்றாரு.. சூரியனை பிடித்து தமிழக செக்ரெட்டெரியேட்டில் வைக்கனும்னு சொல்றாரு..சாத்தியமா? ஆனால் சூரியனை பிடித்து வந்து தமிழ்நாட்டில் கட்டுவோம்னு எடப்பாடி பழனிசாமி தீர்மானம் போட்டால் முட்டாள் யாரு?அப்ப தீர்மானம் போடும்போது தமிழ்நாட்டு மக்கள் கிட்ட சொல்லி இருக்கனும் சாத்தியமே இல்லை... தீர்மானம் போட முடியாதுன்னு சொல்லி இருந்தா யோக்கியன்..

ஜெயலலிதா வழி அரசா?
ஆனால் ஊரை ஏமாற்ற தீர்மானம் போட்டு இருக்கீங்க.. அந்த தீர்மானத்தை ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கிறேன்னு சொல்லிட்டு ஜனாதிபதிகிட்ட எங்க இருக்கேன்னு தெரியாம போயிருச்சு.. போயிருச்சுன்னு பொய்சொல்லிகிட்ட இருந்த முதலமைச்சர எதுல சேர்ப்பீங்க? நீட் தீர்மானம் கொண்டுவரச் சொன்னதே நாங்கதான்... உங்களால் சாத்தியமே இல்லை எனில் ஜெயலலிதா எப்படி சாத்தியப்படுத்தினார்? ஜெயலலிதா நிறுத்த முடிந்ததை உங்களால் நிறுத்த முடியலை... அப்புறம் எதுக்கு ஜெயலலிதா ஆட்சி வேணும்? அப்ப ஜெயலலிதா வழியில் நீங்க நடக்கலைல.. இப்படித்தான் ஆ.ராசா கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications