அப்படிப்போடு.. ஆரத்தி எடுத்தவர்களுக்கு 'ஆறுதல்' தொகையா? நத்தம் விஸ்வநாதன் மீது திமுக புகார்
சென்னை: நத்தம் சட்டமன்ற வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான நத்தம் விஸ்வநாதன் மீது தேர்தல் ஆணையத்தில் திமுக புகார் அளித்துள்ளது.
Recommended Video
முன்னாள் தமிழக அமைச்சரும், நத்தம் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளருமான நத்தம் விஸ்வநாதன் திண்டுக்கல் பகுதியில் தன்னுடைய பிரச்சாரத்தை துவங்கினார். அப்போது, நத்தம் பகுதியில் அவருக்கு பொதுமக்கள் சிலர் ஆரத்தி எடுத்தனர்.

அப்போது அமைச்சருக்கு முன்பாக வந்த அதிமுக ஆதரவாளர் ஒருவர், வரிசையாக தரையில் வைக்கப்பட்டிருந்த ஆரத்தி எடுத்த தட்டுகளுக்கு தேர்தல் விதிமுறைகளை மீறி பணத்தை விநியோகம் செய்து வந்தார். அங்கு களத்தில் வாக்கு சேகரித்து கொண்டிருந்த நத்தம் விஸ்வநாதன் தனது பாக்கெட்டில் இருந்து பணம் பட்டுவாடா செய்தார். இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இது தொடர்பாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மாவட்ட தேர்தல் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர். திண்டுக்கல் மாவட்ட தேர்தல் அதிகாரி மற்றும் ஆட்சியருமான எம் விஜயலட்சுமி இது தொடர்பான தகவல்களை வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். நத்தம் காவல் நிலையத்தில் இது தொடர்பாக புகாரும் பதிவு செய்யப்பட்டுள்ளது. திண்டுக்கல் பகுதி துணை காவல் ஆய்வாளர் எம்எஸ் முத்துசாமி இந்த வழக்கு தொடர்பான சிஎஸ்ஆர் நகலை வெளியிட்டார்.
இந்நிலையில், ஆரத்தி எடுப்பதற்கு பணம் வழங்கியதாக நத்தம் விஸ்வநாதன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, தேர்தல் ஆணையத்தில் திமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
-
திமுக நாசமா போக காரணமே நாமதான்..ஒரிஜினல் திமுககாரன வளர்த்து விடுங்க! மேடையில் வெடித்த மாஜி மூர்த்தி! -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
“துரோகி.. துரோகி”.. செல்வப்பெருந்தகை வந்தபோது திமுகவினர் கோஷம்.. திடீர் பரபரப்பு! -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த விஷக்காளான் நீங்க! விஜய் குறித்து திமுக ஐடி விங்க் விமர்சனம் -
அண்ணன் தம்பிகள்தானே! இடைத்தேர்தலில்.. அதிமுக-திமுக கூட்டணி! வாயை விட்ட சுப வீரபாண்டியன்! -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
“ஒரு இயக்கம்.. இன்னொரு இயக்கத்தின் சின்னத்தில் போட்டியிடக்கூடாது” - துரை வைகோ!












Click it and Unblock the Notifications