கணவர் எங்கே? செந்தில் பாலாஜி மனைவி ஆட்கொணர்வு மனு.. திமுகவும் அவசர வழக்கு.. திடீரென விலகிய நீதிபதி

Subscribe to Oneindia Tamil

சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜி கைது தொடர்பாக திமுக சார்பாகவும், அமைச்சர் செந்தில் பாலாஜி மனைவி சார்பாகவும் இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர வழக்கு தொடுக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் செந்தில் பாலாஜி தரப்பில் தொடர்ந்த வழக்கை விசாரிப்பதில் இருந்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆர்.சக்திவேல் விலகி உள்ளார்.

17 மணி நேர ரெய்டிற்கு பின் நேற்று இரவு செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை மூலம் கைது செய்யப்பட்டார். நெஞ்சு வலியால் ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு உள்ளார். ரத்த அழுத்தம், நெஞ்சுவலியால் செந்தில் பாலாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

இந்த நிலையில்தான் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது தொடர்பாக திமுக சார்பாகவும், அமைச்சர் செந்தில் பாலாஜி மனைவி சார்பாகவும் இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர வழக்கு தொடுக்கப்பட உள்ளது.

செந்தில் பாலாஜியை கைது செய்வதற்கான ஆதாரத்தை வழங்கவில்லை. அவரை சட்டப்படி கைது செய்து இருக்கிறீர்களா? கைது செய்யப்பட்டது முறையாக நடந்துள்ளதா? செந்தில் பாலாஜி கைதை ஏன் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லைனு. அவர் கைது செய்யப்பட்டு உள்ளார் என்றால் உடனடியாக உடல்நிலையை காரணம் காட்டி பெயில் வழங்க வேண்டும் என்று என்று திமுக சார்பாக மனுதாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

DMK files urgent case and Minister Senthil Balajin wife files habeas corpus case in MHC

செந்தில் பாலாஜி வழக்கை அவசர வழக்காக விசாரிக்க திமுக கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சுந்தர், சக்திவேல் ஆகியோர் அமர்வு முன் முதல் வழக்காக இன்று விசாரிக்க உள்ளனர். அவசர வழக்காக விசாரிக்கப்பட உள்ளது. சட்ட விரோதமாக செந்தில் பாலாஜி பிடித்து வைக்கப்பட்டு உள்ளதாக மனுவில் கூறப்பட்டு உள்ளது.

இன்னொரு பக்கம் செந்தில் பாலாஜி மனைவி ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்கிறார். அதன்படி என் கணவரை காணவில்லை அல்லது அவர் எங்கே இருக்கிறார் என்று தெரியவில்லை. அதனால் அவரை கண்டுபிடிக்க வேண்டும் என்று செந்தில் பாலாஜி மனைவி மேகலா தனியாக ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்கிறார்.

இது போன்ற மனுக்களில் போலீஸ் குறிப்பிட்ட நபரை கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும் என்பதால் செந்தில் பாலாஜியை தமிழ்நாடு போலீஸ் அழைத்து வரும் வாய்ப்புகளும் உள்ளன. இந்த கைது பற்றி அமலாக்கத்துறை அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை என்பதால்தான் இத்தனை குழப்பம் ஏற்பட்டு உள்ளது.

இன்று அதிகாலைதான் செந்தில் பாலாஜி மனைவி அவசரமாக கரூரில் இருந்து சென்னை வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் 2.15 மணிக்கு வழக்கு விசாரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதிரடி திருப்பமாக செந்தில் பாலாஜி தரப்பில் தொடர்ந்த வழக்கை விசாரிப்பதில் இருந்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆர்.சக்திவேல் விலகினார்.

சில நிமிடங்களுக்கு முன் செந்தில் பாலாஜிக்கு ஆஞ்சியோ சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. செந்தில் பாலாஜிக்கு நடத்தப்பட்ட ஆஞ்சியோகிராம் பரிசோதனையில் ரத்தக்குழாயில் 3 அடைப்புகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. அவருக்கு தற்போது பைபாஸ் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதய அறுவை சிகிச்சைக்காக காவேரி மருத்துவமனைக்கு செல்கிறார் செந்தில் பாலாஜி.செந்தில் பாலாஜிக்கு அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது. இதனால் ஆட்கொணர்வு வழக்கில் அவரை ஆஜர்படுத்துவது சிக்கலாகி உள்ளது.

வழக்கு விளக்கம்: இது குறித்து செந்தில் பாலாஜி வழக்கறிஞர் எம்பி இளங்கோவன் பேட்டி அளித்துள்ளார். அதில், செந்தில் பாலாஜியை நாள் முழுக்க துன்புறுத்தி உள்ளனர். அமைச்சர் செந்தில் பாலாஜி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்; வழக்கு குறித்து சட்டப்படி உறவினர்களிடம் தெரிவிக்கவேண்டும்; ஆனால், செய்தியாளர்களிடம்தான் தெரிவிப்பார்கள் போல.

அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. செந்தில் பாலாஜி உடல்நிலை குறித்து மருத்துவ பரிசோதனைக்கு பின் தெரியவரும். செந்தில் பாலாஜியை பார்ப்பதற்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் அனுமதிக்கவில்லை; கைது நடவடிக்கை என்றால் அதற்குரிய விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை.

செந்தில் பாலாஜி விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டாரா? கைது செய்யப்பட்டாரா? எனத் தெரியவில்லை; வழக்கை சட்ட ரீதியாக எதிர்கொள்வோம். செந்தில் பாலாஜியை கைது செய்ததாக கூறவில்லை.

கைது நடவடிக்கை என்றால் அதற்குரிய விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை. கைது செய்யப்பட்டால் என்றால் ஏன் கைது என்று சொல்லவில்லை என்று கூறியுள்ளார். அவரின் இந்த பேட்டி காரணமாக செந்தில் பாலாஜி முறையாக கைது செய்யப்பட்டு உள்ளாரா அல்லது விசாரணைக்கு செல்லும் வழியிலேயே அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுவிட்டாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+