சென்னையில் ஒரு சம்பவம்.. பாமகவின் மனு கொடுக்கும் போராட்டம்.. கூட பறந்த கொடி எதுன்னு பாருங்க!

பாமக வன்னியர்கள் போராட்டத்தில் திமுக கொடி பறந்துள்ளது

Subscribe to Oneindia Tamil

சென்னை: இன்று ஒரு சம்பவம் சென்னையில் நடந்துள்ளது.. பாமகவின் மனு கொடுக்கும் போராட்டத்தில் திமுக கொடியும் சேர்ந்து பறந்துள்ளது.. இதனால் அறிவாலயமே ஆடிப்போச்சாம்..!

Recommended Video

    பாமக போராட்டத்தில் பறந்த திமுக கொடி.. அதிரந்து போன அறிவாலயம் | Oneindia Tamil

    பாமகவின் கூட்டணி முடிவாகாமல் உள்ளது.. திமுகவா? அதிமுகவா? தனித்து போட்டியா? என்பது தெரியாமல் குழப்ப நிலையில் கூட்டணி உள்ளன.

    DMK flag in PMK Protest in Chennai

    இதற்கு காரணம், டாக்டர் ராமதாஸ் வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு கோரி வருகிறார்.. அதற்காக தொடர்ந்து போராடியும் வருகிறார்.. கூட்டணியைகூட முடிவு செய்யாமல், இந்த ஒரு விஷயத்தை மட்டுமே முன்னெடுத்து வருகிறார்.

    இதனால், இடஒதுக்கீடு கோரும் விஷயத்தில் அதிமுக அதிருப்தியில் உள்ளது.. ராமதாஸ், திமுகவையும் சாடி வருவதால், ஸ்டாலினும் இதற்கு பதிலளித்து வருகிறார்.. இதனால், திமுகவுடனும் இணக்கமான போக்கு பாமகவுக்கு இல்லாத நிலை உள்ளது.

    இதனிடையே, இடஒதுக்கீடுகோரி பாமக தொடர்ந்து போராடி வருகிறது.. அந்த வகையில், இன்றும்கூட, கலெக்டர் அலுவலகங்களில் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெறுகிறது.

    இதனால் சென்னை உட்பட தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களின் கலெக்டர் ஆபீஸ் முன்பும் பாமகவினர் திரண்டு போராடி கொண்டிருக்கிறார்கள்.. தங்களுடைய கோரிக்கைக்கு பிற கட்சிகளை சேர்ந்த வன்னியர்களையும் இடம்பெற செய்ய வேண்டும் என்பதே டாக்டர் ராமதாஸின் விருப்பமாக உள்ளது.. அதை பலமுறை வலியுறுத்தியும் வருகிறார்.

    அந்த வகையில், பாமக கொடியுடன் அதிமுக உள்ளிட்ட கொடிகளை ஏந்தி சென்னையில் போராட்டம் நடக்கிறது.. இதில் திடீரென திமுக கொடியும் சேர்ந்து பறந்தது.. இதை பார்த்து திமுக நிர்வாகிகள் ஷாக் ஆகிவிட்டனராம்.. இறுதியில் விசாரித்தால், இவர்களும் பாமகவினர்தானாம்.. ஆனால், பல கட்சி ஆதரவு தங்களுக்கு இருக்கிறது என்பதை வெளிப்படுத்தவே திமுக கொடியை ஏந்துவதாக பதிலளித்தனராம்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+