திமுகவில் 234 தொகுதிகளுக்கும் 'தொகுதி பார்வையாளர்கள்'! வாரம் ஒரு முறை நேரடியாக தலைமைக்கு ரிப்போர்ட்!
சென்னை: தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் பூத் கமிட்டி அமைப்பு, உறுப்பினர் சேர்த்தல் ஆகிய பணிகளை பார்வையிட தொகுதி பார்வையாளர்களை நியமனம் செய்துள்ளார் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன்.
கும்மிடிப்பூண்டி முதல் குமரி மாவட்டத்தில் உள்ள கிள்ளியூர் தொகுதி வரை அனைத்து தொகுதிகளுக்கும் தனி தனி பார்வையாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
பூத் கமிட்டி அமைப்பு, உறுப்பினர் சேர்த்தல் பணிகளை நேரடியாக ஆய்வு செய்து வாரம் ஒரு முறை அது குறித்த விவரங்களை தலைமைக் கழகத்திற்கு தொகுதி பார்வையாளர்கள் ரிப்போர்ட் அனுப்ப வேண்டும் என்பது இவர்களுக்கு துரைமுருகன் கொடுத்துள்ள அறிவுறுத்தலாகும்.

கட்சி முக்கியம்
ஆட்சிப் பணிகளுக்கு எந்தளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறாரோ அதேயளவு கட்சிப் பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறார் முதலமைச்சர் ஸ்டாலின். திமுக ஆளுங்கட்சியாக இருப்பினும் கூட கட்சியை இன்னும் வலிமைப்படுத்த விரும்புகிறார் முதலமைச்சர் ஸ்டாலின். புதிய உறுப்பினர்களை சேர்ப்பது, பூத் கமிட்டிகளை வலிமைப்படுத்துவது என கட்சி சார்ந்த நடவடிக்கைகளில் தீவிர கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார் ஸ்டாலின்.

வாரம் ஒரு முறை ரிப்போர்ட்
இதற்கு எதிர்வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலும் ஒரு காரணம் ஆகும். இதனிடையே ஒவ்வொரு தொகுதியிலும் பூத் கமிட்டி அமைக்கும் பணிகள் எப்படி நடக்கின்றன, புதிய உறுப்பினர் சேர்ப்பு எவ்வாறு நடக்கின்றன, எண்ணிக்கைகள் சரியாக இருக்கின்றனவா என்பதை நேரடியாக ஆராய பார்வையாளர்களை நியமனம் செய்துள்ளார் துரைமுருகன். ஒவ்வொரு தொகுதி குறித்த ரிப்போர்ட்டும் வாரம் ஒரு முறை பார்வையாளர்களால் தலைமைக் கழகத்திற்கு அனுப்பப் படவேண்டும் என்பது முக்கிய அறிவுறுத்தலாகும்.

சார்பு அணிகளின் நிர்வாகிகள்
தொகுதிப் பார்வையாளர்கள் அந்தந்த மாவட்டச் செயலாளர்களுடன் கலந்து பேசி அவர்களுக்கு உதவியாக கிளை/பூத் வாரியாக தொடர்பு கொண்டு பேசி தலைமையின் அறிவுறுத்தலை முழுமையாக செயல்படுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என துரைமுருகன் கேட்டுக்கொண்டுள்ளார். ராஜீவ்காந்தி, பி.டி.அரசகுமார், கவிஞர் சல்மா, கார்த்திகேய சிவசேனாபதி, டாக்டர் மகேந்திரன் உள்ளிட்டோர் உட்பட இன்னும் பல சார்பு அணிகளின் நிர்வாகிகள் தொகுதி பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

மாவட்டக் கழக கூட்டம்
தொகுதிப் பார்வையாளர்கள் அனைவரும் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள மாவட்ட கழக கூட்டங்களில் தவறாது பங்கேற்க வேண்டும் எனவும் துரைமுருகன் கேட்டுக்கொண்டுள்ளார். இதில் குறிப்பிட வேண்டிய விவகாரம் என்னவென்றால் உட்கட்சி புகைச்சல் எழாதவாறு ஊர் விட்டு ஊர் மாற்றி பார்வையாளர்கள் நியமனம் செய்யப்பட்டிருப்பது தான்.
-
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ!












Click it and Unblock the Notifications