அண்ணாமலை கைதாகிறாரா? திமுகவுக்கு இப்படியொரு ரகசிய திட்டமா? இது எப்போ? குண்டை தூக்கி போட்ட தமிழக பாஜக
சென்னை: தமிழக பாஜகவின் , செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் வெளியிட்டிருக்கும் அறிக்கை ஒன்று தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை கிளப்பி விட்டுள்ளது.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடந்த செப்டம்பர் மாதம் மதுரையில் பேசும்போது, மீனாட்சி அம்மன் கோயிலில் 1956-ம் ஆண்டு நடைபெற்ற நிகழ்ச்சியில், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர், அறிஞர் அண்ணா குறித்து பேசியதை கூறியிருந்தார்.. ஆனால், அப்போது முத்துராமலிங்கத் தேவர் அவ்வாறு பேசவில்லை என்று மீடியாவில் தகவல்கள் வெளியாகியிருந்தன.

சர்ச்சை பேச்சு: இதனிடையே, கடந்த பிப்ரவரி மாதம் சேலத்தை சேர்ந்த வி.பியூஷ் என்பவர் அண்ணாமலை, இதுபோன்ற தகவல்களை பரப்பி மக்கள் மத்தியில் மோதலை ஏற்படுத்துவதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டு, சேலம் கலெக்டரிடம் மனு அளித்திருந்தார்.. அதேபோல, சேலம் கமிஷனரிடமும் புகார் தந்தார்..
அதேபோல, சேலம் கோர்ட்டிலும் வழக்கு தொடர்ந்தார். தன்னுடைய புகார்களுடன் அதற்கான ஆதாரங்கள் அத்தனையையும் சமர்ப்பித்திருந்தார்.
கலெக்டர்: இதற்கு பிறகு, சேலம் கலெக்டர் தமிழக அரசுக்கு கடிதம் ஒன்றை எழுதினார். அந்த கடிதததின் அடிப்படையில் கடந்த ஏப்ரல் 25-ம் தேதி தமிழக பொதுத்துறை செயலர் கே.நந்தகுமார் அரசாணை ஒன்றை பிறப்பித்திருந்தார்.. அதில், அண்ணாமலை மீது குற்ற வழக்கு தொடர அனுமதியளிக்கப்பட்டிருந்தது. மேலும், அந்த அரசாணையின்கீழ், "ஆளுநரின் ஆணைப்படி" என்ற வாசகமும் இடம்பெற்றிருந்தது.
இதைப்பார்த்த பலரும், அண்ணாமலை மீது குற்ற வழக்கு தொடர ஆளுநர் ரவி, அனுமதியளித்துவிட்டதாக மீண்டும் ஊடகங்களில் செய்தி வெளியானது. ஆனால், இந்த தகவலை ஆளுநர் மாளிகை உடனே மறுத்துவிட்டது.
ஆளுநர் மாளிகை: "அண்ணாமலைக்கு எதிரான கிரிமினல் வழக்கு குறித்து ஆளுநர் மாளிகை எந்த ஒரு தகவலும் அறிந்திருக்கவில்லை. மேலும், இது தொடர்பான அனுமதி உத்தரவு எதுவும் பிறப்பிக்கவில்லை" என்று ஆளுநர் மாளிகை தெளிவுபடுத்தியிருந்தது.
இப்படிப்பட்ட சூழலில், தமிழக பாஜக செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் ஒரு அறிக்கை அறிக்கை வெளியிட்டுள்ளார்.. அதில், திமுக அரசை சரமாரி விமர்சித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:
அண்ணாமலை: தமிழகத்தில் நடந்து வரும் தி.மு.க.வின் கொடுங்கோல் ஆட்சியை யாரும் எதிர்க்க துணியாத நிலையில், கடந்த 2021 ஜூலையில் தமிழக பா.ஜ.க. தலைவரானது முதல் அண்ணாமலை துணிவுடன் தக்க ஆதாரங்களுடன் எதிர்த்து வருகிறார். அது மக்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.
அண்ணாமலை கோவையில் போட்டியிடுகிறார் என்றதுமே, பெரும் படையை அனுப்பி அதிகாரம், பணம், ஆள்பலத்தை வைத்து அவரை வீழ்த்த அத்தனை அட்டூழியங்களையும் திமுக செய்தது. ஆனாலும் கோவையில் அண்ணாமலை வெல்வது உறுதி.
அண்ணாமலை ஜூரம்: இப்படி அண்ணாமலை ஜுரம் தி.மு.க.வை ஆட்டிப்படைத்து வருகிறது. அதனால் எப்படியாவது, ஏதாவது ஒரு வழக்கில் சிக்க வைத்து அவரை முடக்கி விடலாம் என தி.மு.க. முக்கியப் புள்ளிகள் பகல் கனவு கண்டு வருகின்றனர். புகாரின் அடிப்படையில் அண்ணாமலை மீது வழக்குப் பதிவு செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கு கவர்னர் மாளிகை அனுமதி கொடுத்து விட்டதாக பொய்யான தகவலையும் பரப்பினர். ஆனால் இதை கவர்னர் மாளிகை மறுத்துள்ளது. எத்தனை வழக்குகள் தொடுத்தாலும் அண்ணாமலையின் மக்கள் பணிகளை முடக்க முடியாது" என்று அவர் அறிக்கையில் கூறியுள்ளார்.
இந்த அறிக்கைதான் பெரும் சலசலப்பை உண்டுபண்ணி வருகிறது.. இதற்கு திமுக தரப்பு என்ன பதில் சொல்லப்போகிறதென்று தெரியவில்லை.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!












Click it and Unblock the Notifications