Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வீடு தேடி வரும் ரூ.5000.. ஸ்டாலினின் பொங்கல் பரிசு ரெடி.. அடித்து சொல்லும் பாஜக.. ட்விஸ்ட்டா இருக்கே

Subscribe to Oneindia Tamil

சென்னை: பொங்கல் பண்டிகைக்கு ரூ.5,000 மற்றும் வேட்டி சட்டையை தமிழக அரசு வழங்கும் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சன ரீதியாக தகவல் வெளியிட்டு உள்ளார். பொங்கல் பரிசு வழங்குவதற்காக கூட்டுறவு வங்கிகளை அடமானம் வைக்கத் திட்டம் போட்டுள்ளனர், பொருளாதார நெருக்கடி ஏற்படும் விதமாக தேர்தலுக்காக இந்த நடவடிக்கையை மேற்கொள்கின்றனர் என்றும் குற்றச்சாட்டு வைத்துள்ளார்.

2026 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழகத்தில் உள்ள பெரும்பாலான ரேஷன் அட்டைதாரருக்கும் 5,000 ரூபாய் வழங்க, தி.மு.க. தலைமையிலான தமிழக அரசு, நிதித்துறை அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்படிப்பட்ட நிலையில்தான் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சன ரீதியாக தகவல் வெளியிட்டு உள்ளார்.

pongal 2026 pongal gift cm stalin bank account aadhar 2026

தமிழக அரசின் டாப் தலைகள் சிலர் நிதித்துறை தரப்பிடம் இது குறித்து ஆலோசனை நடத்தியுள்ளனர். பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டம் தொடர்பாக விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. அடுத்த வருடம் தமிழக சட்டசபை தேர்தல் வரும் நிலையில் இது தொடர்பாக முக்கிய அறிவிப்பு வெளியாகலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.

பொங்கல் பரிசு

தமிழர்களின் அடையாளமாக அனைத்துத் தரப்பு மக்களாலும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வரும் பெருமைமிகு ஒரு பண்டிகை பொங்கல் திருநாளாகும். மனித குலத்திற்கே அடித்தளமாய் விளங்கி, உணவளித்து வரும் விவசாயப் பெருங்குடி மக்களுக்கு நன்றி செலுத்தும் ஒரு நாளாகவும் தமிழர்களாகிய அனைவராலும் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை சிறப்பாகக் கொண்டாடிட பொங்கல் பரிசாக 5 ஆயிரம் ரூபாய் ரொக்கமாக வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பொங்கல் திருநாளைச் சிறப்பாக மக்கள் கொண்டாடிட ஒன்றிய, மாநில அரசு ஊழியர்கள் வருமான வரி செலுத்துவோர் பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரிவோர். சர்க்கரை அட்டைதாரர்கள். பொருளில்லா அட்டைதாரர்கள் தவிர்த்து ஏனைய குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் 5,000 ரூபாய் பொங்கல் பரிசாக நியாயவிலைக் கடைகளில் பொங்கல் திருநாளுக்கு வழங்கப்படும் என்று தமிழக அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன

இந்த நன்னாளை முன்னிட்டு 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு ஆகியவை பொங்கல் பரிசுத் தொகுப்பாக வழங்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. இந்த முறை வெல்லம் வழங்கப்படுமா என்ற கேள்வி உள்ளது. அதை பற்றி விரைவில் முடிவு எடுக்கப்படலாம்.

எவ்வளவு ரூபாய் வழங்க திட்டம்?

மேலும், முன்கூட்டியே திட்டமிட்டு உற்பத்தி செய்த காரணத்தினால் பொங்கல் திருநாளை முன்னிட்டு வழங்கப்படவுள்ள இலவச வேட்டி-சேலைகள் அனைத்தும் தயார் செய்யப்பட்டு அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்படும். பொங்கல் பரிசுத் தொகுப்புடன் சேர்த்து, இவற்றை வழங்குவதற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன.

இருப்பினும், மாநிலத்தின் நிதி நிலை காரணமாக அதிகாரிகள் சவால்களை எதிர்கொள்வதாக கூறப்படுகிறது. தமிழகத்தின் நிதி பற்றாக்குறை ஒரு பெரிய கவலையாக உள்ளது. மேலும், அரசு ஏற்கனவே பல நலத்திட்டங்கள், மானியங்கள் மற்றும் உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு கணிசமான நிதியை ஒதுக்கியுள்ளது. அதோடு மகளிர் உரிமைத்தொகையும் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது.

உங்களுடன் ஸ்டாலின்' முகாம்கள் மூலம் இதுவரை 44 லட்சம் பெண்கள் உதவித்தொகை கோரி விண்ணப்பித்துள்ளனர். கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கான விண்ணப்பங்கள் இந்த முகாம்களில் பெறப்படும் என முதல்வர் ஏற்கனவே அறிவித்திருந்தார். டிசம்பர் 15ம் தேதி முதல் கூடுதல் பயனாளிகளுக்கு பணம் வழங்கப்படும் என்பதால் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+