வெடிக்கும் கொடநாடு : மடியில் கனமில்லை என்றால் எதற்கு பயம் என்ற ஸ்டாலின் - பதறிய எடப்பாடி பழனிச்சாமி
கொடநாடு விவகாரத்தில் தன்னை குறி வைப்பதாக எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டி உள்ளார்
சென்னை: கொடநாடு வழக்கை திமுக அரசு கையில் எடுத்துள்ளது பல்வேறு சந்தேகங்களையும், கேள்விகளையும், யூகங்களையும் எழுப்பி வருகிறது.
Recommended Video
நடந்து முடிந்த தேர்தல் பிரச்சாரங்களின்போது, திமுக தலைவர் ஸ்டாலின் கொடநாடு விவகாரத்தை கையில் எடுத்தார்.. செல்லும் இடமெல்லாம் இதே பிரச்சனையை பேசினார்.
அதிலும் கடைசி நாள் பிரச்சாரம் பெரம்பூரில் நடந்தது.. அப்போது ஸ்டாலின் பேசும்போது அதிமுக அரசை விமர்சித்தார்.. அதிமுக ஆட்சியில் பெண் எஸ்பிக்கு பாலியல் கொடுமை நடந்தது, பொள்ளாச்சி விவகாரம், சாத்தான்குளம், தூத்துக்குடி துப்பாக்கி சூடு என்று லிஸ்ட் போட்டு பேசியபடியே இருந்தார்.

தகவல்கள்
அதுமட்டுமல்ல, இந்த எஸ்டேட்டில் அடுத்தடுத்து நடந்த கொலை தொடர்பாக தெகல்ஹா முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ் சாமுவேல் சில தகவலை வெளியிடவும், அந்த விவகாரம் தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலினும் தமிழக அரசையும், எடப்பாடி பழனிச்சாமியையும் தொடர்ந்து விமர்சனம் செய்து வந்தார்... இதனால் அப்போதைய தமிழக அரசு, ஸ்டாலின் மீது ஹைகோர்ட்டில் வழக்கு தொடுத்து, அதை விசாரித்த கோர்ட்டும் கொடநாடு விவகாரம் குறித்து ஸ்டாலின் பேச தடை விதித்தது. இந்த அளவுக்கு கொடநாடு விவகாரத்தில் ஆர்வமும் முனைப்பும் காட்டி வந்தவர்தான் முக ஸ்டாலின்.

தர்ணா
இன்றைய தினமும் இதே பிரச்சனை பட்ஜெட் கூட்டத்தொடரில் எழுந்துள்ளது.. கொடநாடு என்று திமுக ஆரம்பித்ததுமே அதிமுக தரப்பு டென்ஷன் ஆகிவிட்டது.. அதிலும் முதல் நபரே எடப்பாடி பழனிசாமிதான்.. அவையை புறக்கணித்துவிட்டு வெளியே வந்து தர்ணாவில் உட்கார்ந்துவிட்டார்.. தொடர்ந்து பேட்டியும் தந்தார்..

கேஸ்
அதில், "அந்த வழக்கு கோர்ட்டில் விசாரணை நடந்து கொண்டிருக்கிறது... இன்னும் கேஸ் முடியவே இல்லை.. அதற்குள் திமுக அரசு, திட்டமிட்டு, சயன் என்பவருக்கு சம்மன் அனுப்பி, அவரிடம் ரகசிய வாக்குமூலம் பெற்றுள்ளது.. அந்த வழக்கில் என்னையும் சிலரையும் சேர்த்திருக்கிறார்களாம். திமுக அரசு மறுபடியும் திட்டமிட்டு எனக்கு குறி வைக்கிறது" என்று நேரடியாகவே குற்றம் சாட்டினார்.

முதல்வர் ஸ்டாலின்
ஆனால், முதல்வர் ஸ்டாலினோ, "முறைப்படி அனுமதி பெற்று தான் விசாரணை நடக்கிறது... இதில் எந்த அரசியல் தலையீடும் இல்லை. எங்கப்பன் குதிருக்குள்ள இல்லை என்பதை போல் அதிமுகவினர் நடந்து கொண்டனர்... மடியில் கனம் இருந்தால் தான் வழியில் பயம் இருக்கும். விசாரணையில் எந்த அரசியல் தலையீடும் இருக்க போவதில்லை. எனவே பயப்பட தேவையில்லை... தேர்தல் வாக்குறுதியில் சொன்னதை செய்யாமல் எங்கள் மீது குறி வைக்கிறீர்கள் என்று கேட்கிறார்களே, இந்த கோடநாடு விவகாரமும் தேர்தல் அறிக்கையில் சொன்னதுதான்.. இதுமட்டுமல்ல.. இன்னும் நிறைய இருக்கு" என்று ஒரு பஞ்ச் வைத்து பேசினார்.

வாக்குறுதி
ஆக, இது ஒருபக்கம் இருந்தாலும், உண்மையில் திமுக அரசு பழிவாங்கும் நடவடிக்கையில்தான் இறங்கி உள்ளதா என்று தெரியவில்லை.. தேர்தல் வாக்குறுதிகளில் சொன்னதைதான் திமுக செய்து கொண்டிருக்கிறார்கள் என்றாலும், இந்த வழக்கில் தன்னிச்சையாக திமுக தலையிட முடியாது என்றாலும், அனைத்துமே சட்டப்படி செல்கிறது என்றாலும், கடந்த கால ஆட்சியாளர்கள் மீது ஆளும் தரப்பு எடுக்கும் வழக்கமான நடவடிக்கை இதுவாக இருக்கக்கூடும் என்பதையும் மறுப்பதற்கில்லை..

பயம் ஏன்?
ஸ்டாலின் கேட்பதுபோல, கொடநாடு விவகாரத்தில் தப்பு செய்யவில்லை என்றால், எதுக்கு பயப்படணும்? என்று கேட்பதில் மாற்றுக்கருத்து யாருக்கும் இருக்க போவதில்லை. ஏற்கனவே, முதலில் விஜயபாஸ்கர், அடுத்து எஸ்பி வேலுமணி, தற்போது எடப்பாடி என திமுக காய் நகர்த்த மக்கள் பிரச்சினையில் அவர்கள் கவனத்தை திசைத்திருப்ப திட்டமா? என்ற கேள்வியும் எழுகிறது.

புறக்கணிப்பு
அதேசமயம், அதிமுகவின் இன்றைய செயல்பாடுகள் உற்று நோக்க வைத்து வருகிறது. இப்படித்தான் அன்று அதிமுக ஆட்சியின்போது, சட்டப்பேரவையை திமுக ஏதோ ஒரு காரணத்துக்காக புறக்கணித்து வெளியேறி இருந்தது.. அதற்கு அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, "மக்கள் பிரச்சினை இவர்களுக்கு முக்கியமல்ல.. மக்கள் மீது உண்மையான அக்கறை இருந்திருந்தால், இங்கே உட்கார வேண்டியதுதானே? ஏன் அடிக்கடி வெளிநடப்பு செய்கிறார்கள்? என்று கேள்வி கேட்டு விமர்சித்திருந்தார்..

எடப்பாடி
அன்று எடப்பாடி சொன்னதையேதான் இன்று திருப்பி கேட்க வேண்டி உள்ளது.. வழக்கு விசாரணையில் தற்சமயம் வெறும் பெயர் சொன்னதாக மட்டுமே தகவல் வந்துள்ளது.. அதற்கே வழக்கு போட்டு பழி வாங்குவதுபோல் ஆர்பாட்டங்கள், 2 நாள் புறக்கணிப்புகளை அதிமுக செய்ய காரணம்? அப்படியானால் இவர்களுக்கு மக்கள் பிரச்சனையின் மீது அக்கறை இல்லையா?

சசிகலா
ஏற்கனவே அதிமுகவுக்குள் உட்கட்சி பூசல், இரட்டை தலைமை விவகாரம், சசகிலா வருகை, மாஜிக்களின் மீதான ஊழல்புகார்கள் என எத்தனையோ இடியாப்ப சிக்கலில் உள்ள நிலையில், அடுத்த பிரச்சனையில் தன்னை காத்து கொள்ள துடிப்பது மட்டுமே இன்றைய செயல்பாடுகள் மூலம் பரவலாக உணர முடிகிறது.

தயார்
உள்ளாட்சி தேர்தல் விரைவில் வரப்போகிறது.. எம்பி தேர்தலுக்கு பிரதான கட்சிகள் இப்போதே தயாராகி கொண்டிருக்கும்போது, அதிமுக இப்படி கூட்டத்தொடரில் தொடர்ந்து நடந்து வரும் செயல்பாடுகளை மக்கள் ரசிப்பார்களா? திமுகவை டேமேஜ் செய்வதை மட்டுமே ஒரே குறிக்கோளாக அதிமுக வைத்துள்ளதாக நினைக்க தோன்றாதா? என்ற அடுத்தடுத்த கவலைக்குரிய சந்தேகமும் நமக்கு எழுகிறது.

சொத்துக்கள்
கடந்த மாதம் ஒரு செய்தி கசிந்தது.. அதிமுக மாஜிக்களின் சொத்துகள் குறித்த விவரங்களை, அதிகாரிகள் கேட்டதாகவும், அதுகுறித்து எடப்பாடியிடம் சில முன்னாள்கள் நேரிலேயே சென்று இதை பற்றியும் சொல்லி புலம்பியும் உள்ளனர்.. அதற்கு எடப்பாடியோ, "யாரும் பயப்படாதீங்க.. நம்ம மேல அவ்ளோ லேசில் கை வைக்க முடியாது.. அப்படியே நம்மை தொட்டால், நம் ஆட்சியின்போது திமுகவில் சில சீனியர்கள் செய்த ஊழல்கள் குறித்த விவரங்களை தூசி தட்டி எடுப்போம்.. அவர்கள் கோர்ட்டுக்கு போனால், நாமும் திமுக மீது வழக்கு தொடுப்போம்.. அந்த ஃபைல்கள் எல்லாம் என்கிட்டதான் இருக்கு" என்று தைரியம் சொன்னதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவித்தன.

மாஜிக்கள்
எடப்பாடியின் இந்த பேச்சை மலைபோல் நம்பிதான், அன்று மாஜிக்கள் அமைதியானார்கள்.. ஆனால், திமுக தன் அதிரடியை எடுத்ததுமே அலறி அடித்து டெல்லிக்கு ஓடியதுதான் மிச்சம்.. இவ்வளவு தைரியம் சொன்ன எடப்பாடி பழனிசாமியே, இன்று டென்ஷன் அடைந்து, தர்ணாவில் உட்கார்ந்து பேட்டியையும் தந்து பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது, அரசியல் களத்தை உற்று நோக்க வைத்து வருகிறது..!
-
"டெல்லி என்ன.. அமெரிக்காவே மிரட்டினாலும்..” டிடிவி தினகரனுக்கு ஓபிஎஸ் கொடுத்த பதில்! -
சிபிஎம் கட்சிக்கு 5 தொகுதிகள்தான்! கட் அன்ட் ரைட்டாக சொன்ன ஸ்டாலின்! பெ.சண்முகம் வைத்த டிமாண்ட் -
புதுச்சேரி தேர்தல்.. முதல்வர் ஸ்டாலினுடன் ப.சிதம்பரம் சந்திப்பு.. முடிவுக்கு வருமா தொகுதி பங்கீடு? -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம்












Click it and Unblock the Notifications