ஆஹா.. திமுக ஆட்சிக்கு ஆபத்து வந்துடுச்சாமே.. டிடிவி தினகரன் ஏன் இப்படி சொல்கிறார்.. என்ன நடந்தது?
திமுக ஆட்சி விரைவில் கவிழும் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்
சென்னை: விரைவில் திமுக ஆட்சி கவிழ போகிறது என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆரூடம் கூறியுள்ளார்.
10 வருடம் கழித்து திமுக அரியணை ஏறியது.. இந்த முறை திமுக ஆட்சிக்கு வந்தது முதலே ஏராளமான அதிரடிகள், அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அது மக்களிடம் நல்ல வரவேற்பையும் பெற்று வருகிறது.
இருந்தாலும், திமுகவை விடாமல் விமர்சித்து கொண்டிருப்பவர் எடப்பாடி பழனிசாமி என்றால், அதற்கு அடுத்தபடியாக விமர்சித்து கேள்விகளை எழுப்பி வருபவர் டிடிவி தினகரன் ஆவார்.

அமமுக
அமமுகவின் மாவட்ட வளர்ச்சிப்பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம் இன்று சென்னையில் நடந்தது.. இந்த கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சந்தித்தார்.. அப்போது பேசியபோது, "மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்த கட்சி திமுக, இப்போது 150 சதவீதம் சொத்து வரியை உயர்த்தி மக்கள் மீது கடுமையான வரிச்சுமையை சுமத்தியுள்ளது.

விசிக
தமிழகத்தின் பல்வேறு பிரச்சினைகளுக்காக போராடும் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் மற்றும் திமுகவின் கூட்டணி கட்சிகள் இந்த வரி உயர்வை கண்டித்து ஏன் போராடவில்லை.. பெட்ரோல் டீசல் விலையை குறைக்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.. தேர்தல் நேரத்தில் பொய்யான வாக்குறுதிகளை சொல்லி ஆட்சிக்கு வந்த திமுக ஒரு தீயசக்தி.. திமுகவை எதிர்த்து தமிழக மக்களுக்காக அமமுக போராடி வருகிறது..

ஸ்டாலின்
அம்பேத்கர் பிறந்த தினத்தன்று சென்னை கோயம்பேட்டில் பாஜக விசிக மோதிக்கொண்டது காட்டுமிராண்டித்தனம்.. திமுக மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் வந்து கொண்டே இருக்கிறது.. கூடிய விரைவில் திமுகவின் ஆட்சிக்கு ஆபத்து நேரிடும்.. அமலாக்கத்துறை மறுபடியும் விசாரணைக்கு அழைத்தால் ஆஜராக தயாராக இருக்கிறேன்.. அம்பேத்கர்-மோடியை ஒப்பிட்டு இசையமைப்பாளர் இளையராஜா பேசியது அவருடைய தனிப்பட்ட கருத்து, இளையராஜா அரசியலுக்கு அப்பாற்பட்டவர்" என்றார்.

இளையராஜா
அம்பேத்கருடன் மோடியை எப்படி ஒப்பிடலாம் என்று பெரும்பாலானோர் கேள்விக்கணைகளை எழுப்பி இளையராஜாவுக்கு கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், திருமாவளவன் மட்டும் இளையராஜா பாவம் என்றார்.. அதற்கு ஆர்எஸ்எஸ்காரர்கள்தான் காரணம் என்றும் கூறியிருந்தார்.. ஆனால், அரசியலுக்கு அப்பாற்பட்டவர் இளையராஜா என்று டிடிவி தினகரன் சொல்லி உள்ளது வியப்பை ஏற்படுத்தி வருகிறது.. அம்பேத்கர் அரசியலுக்கு மட்டுமல்லாமல் அனைவருக்கும் பொதுவானர்தானே? என்ற கேள்வியை எழுப்பி வருகிறார்கள்.
-
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
சிவக்குமார் விஜய்யை பாராட்டி பேச பேச சத்யராஜ் கொடுத்த ரியாக்ஷன் பாருங்க.. அமைதியாக கவனிக்கும் திமுக -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications