“இன்னும் 8 மாதத்தில் திமுக ஆட்சியை வீட்டிற்கு அனுப்ப வேண்டும்".. சபதம் எடுத்த அன்புமணி
திருப்பத்தூர்: "இன்னும் 8 மாதத்தில் கொடுங்கோல் திமுக ஆட்சியை வீட்டிற்கு அனுப்ப வேண்டும்" என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசியுள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆதியூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில், ஒருங்கிணைந்த பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், "பாமக தொடங்கி 36 ஆண்டுகள் ஆகிவிட்டது. தமிழ்நாட்டில் மிகவும் பின்தங்கிய மக்களுக்கு சமூக நீதி தேவை என்பதற்காகவே இந்த கட்சியைத் தொடங்கினோம்.

கடந்த மாதம் பாமக நடத்திய மாநாட்டை பார்த்து எதிர்க்கட்சிகளும், மற்ற கட்சிகளும் பொறாமையிலும், பீதியிலும் உள்ளனர். ஏனென்றால், எப்படி மாநாட்டிற்கு ஆள் சேர்ந்தார்கள்? பாமக மாநாட்டை நடத்தவிடக்கூடாது என பல வழக்குகளை தொடர்ந்தார்கள். ஆனால், எவ்வளவு தடைகளை ஏற்படுத்தினாலும், அதனை உடைத்தெறிந்து மாநாட்டை வெற்றிகரமாக நடத்தினோம். எவ்வளவு காலம்தான் நாம் அவர்களிடம் கேட்பது? நாமும் ஆளவேண்டும்?
வன்னியர்களின் தரவுகளை சேகரித்து உள்ஒதுக்கீடு அளிக்கலாம் என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. ஆனால், நாங்கள் அனைத்து தரப்பு மக்களுக்கும் ஒதுக்கீடு கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்துகிறோம். இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து மனு அளித்தோம்.
அப்போது, 'சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த தனியாகவே சட்டமன்ற கூட்டத்தொடர் நடத்துவேன்' னக் கூறினார். பல்வேறு மாநிலங்களில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி இடஒதுக்கீடு அளித்து வருகின்றனர். ஆனால், 'தமிழ்நாட்டிற்கு அந்த அதிகாரம் இல்லை, மத்திய அரசு தான் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும்' என்று பல்டி அடித்துவிட்டார்.
ஏனென்றால், நம்முடைய மாநாட்டை பார்த்த ஸ்டாலின், நேரடியாக களத்தில் சந்திக்க முடியாமல் சூழ்ச்சி செய்து வீழ்த்த நினைக்கிறார். ஆனால் இன்னும் 8 மாதத்தில் கொடுங்கோல் திமுக ஆட்சியை வீட்டிற்கு அனுப்ப வேண்டும். வீதி வீதியாகப் போதைப்பொருட்கள் விற்பனை செய்கிறார்கள். எனவே, தமிழ்நாடு என்ற பெயரை, குடிகார நாடு, போதை நாடு, கஞ்சா நாடு என மாற்றிக் கொள்ளலாம்.
கல்லணையில் நீரை திறந்துவிடுவது அதிகாரிகளின் வேலை, அதை ஏன் முதலமைச்சர் செய்கிறார்? அவரது வேலை, தமிழ்நாட்டில் சட்டம்- ஒழுங்கை சீர் செய்வது. எங்களுக்கு 1,000 ரூபாய் வேண்டாம்.. சமூக நீதி வேண்டும். அதை கொடுக்க துப்பில்லை, பெண்களை செட் செய்து ரோடு ஷோவில் மகிழ்ச்சியாக இருக்கிறீர்களா? ஆனால், தமிழ்நாட்டில் யாரும் மகிழ்ச்சியாக இல்லை," என்று அன்புமணி ராமதாஸ் பேசினார்.
-
“ஆதவ் அர்ஜுனாவுக்கு தொடர்பா? தைரியம் இருந்தா சட்டரீதியாக திமுக நிரூபிக்கட்டும்”.. தவெக பதிலடி! -
திமுக ஆட்சியில் போடப்பட்ட டெண்டர் ரத்து? ரூ.2,100 கோடி ECR திட்டத்திற்கு முட்டுக்கட்டை போட்ட விஜய் -
திமுக ஆப்சென்ட்.. இந்தியா கூட்டணி கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பது உறுதி! காங். சொன்ன மேட்டர் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
தமிழகத்தில் மின்சாரம் துண்டிப்புக்கு திமுக ஆதரவு மின் அதிகாரிகளே காரணம்.. அமைச்சர் ரஞ்சித்குமார் -
ராகுலுக்கு ஷாக் கொடுத்த திமுக! INDIA கூட்டணி தலைவர்களுடன் இடம்பெற்ற பேனர்.. காங். இதை எதிர்பார்க்கல! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
வைகோ வருத்தப்பட போறாரு.. நிர்வாகிகளை தட்டித் தூக்கும் திமுக! ஆர்டர் போட்ட ஸ்டாலின்! துரை தான் பாவம்! -
ஸ்டாலின் அதிரடி மாற்றம்.. இனி இவங்க யாருமே வேண்டாம்.. கொத்தாக தூக்கப்படும் பெரிய மீன்கள்! -
திமுகவில் இணைந்தார் Ex. MLA பனையூர் பாபு.. விசிகவில் இருந்து ஆயிரக்கணக்கானோருடன் ஜம்ப்! -
திருவான்மியூர் - உத்தண்டி உயர்மட்ட பால ஒப்பந்தம் ரத்து? முதல்வர் விஜய் முடிவுக்கு அன்புமணி வரவேற்பு -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால்











Click it and Unblock the Notifications