அகற்றப்பட்ட கல்வெட்டு மீண்டும் பதிப்பு: சென்னை ஓமந்தூரார் மருத்துவமனைக்கு மாறுகிறதா தமிழக சட்டசபை?
சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட புதிய சட்டசபை வளாகத்துக்கு தலைமை செயலகம் மாற்றப்படுகிறதா? என்கிற கேள்வி எழுந்துள்ளது. அதிமுக ஆட்சியில் அகற்றப்பட்ட புதிய தலைமை செயலகம் கல்வெட்டு தற்போது அங்கு மீண்டும் பதிப்பிக்கப்பட்டுள்ளதால் இந்த கேள்வி எழுந்துள்ளது.
சென்னை ஓமந்தூரரார் அரசின் தோட்ட வளாகத்தில் கருணாநிதி ஆட்சிக் காலத்தில் பார்த்து பார்த்து புதிய தலைமை செயலகம் பிரமாண்டமாக கட்டப்பட்டது. 80,000 சதுர அடி பரப்பளவில் ரூ450 கோடியில் இந்த தலைமை செயலகம் கட்டப்பட்டது.

திறந்துவைத்த மன்மோகன்சிங்
இந்த கட்டிடத்தை 2010-ல் அப்போதைய பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்டோர் பங்கேற்று திறந்து வைத்தனர். தமிழக சட்டசபை கூட்டமும் செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு பதிலாக இங்கு நடைபெற்றது.

மருத்துவமனையாக மாற்றம்
ஆனால் 2011-ல் அதிமுக ஆட்சிக்கு வந்த உடனேயே மீண்டும் செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கே தலைமைச் செயலகம் மாற்றப்பட்டது. அத்துடன் இந்த புதிய கட்டிடம், பன்னோக்கு மருத்துவமனையாக ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் மாற்றப்பட்டது. மேலும் புதிய தலைமை செயலகமானது பன்னோக்கு மருத்துவமனையாக்கப்பட்டது.

கலைவாணர் அரங்கில் சட்டசபை
இந்நிலையில் தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்துள்ளது. திமுக ஆட்சிக்கு வந்தது முதலே ஓமந்தூரார் வளாகத்தில் புதிய சட்டசபை செயல்படுமா? என்கிற விவாதம் நடந்து வருகிறது. தற்போது கொரோனா கால கட்டுப்பாடுகளால் கலைவாணர் அரங்கத்தில்தான் சட்டசபை கூட்டம் நடைபெற்று வருகிறது.

கல்வெட்டு
இதனிடையே திடீரென ஓமந்தூரார் மருத்துவமனை வளாகத்தில் ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் அகற்றபட்ட புதிய தலைமை செயலகக் கல்வெட்டு மீண்டும் பதிப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் மீண்டும் சட்டசபை செயல்படுமா? என்கிற கேள்வி எழுந்துள்ளது. சமூக வலைதளங்களில் இது தொடர்பான படங்கள் வைரலாக ஷேர் செய்யப்பட்டும் வருகிறது.
-
பெப்பே காட்டிய விஜய்.. விஷத்தை கடைந்த ராகுல்.. திமுக, காங்கிரஸ் பந்தம் டோட்டலாக க்ளோஸ் ஆயிருச்சே -
தண்ணீர் பாட்டில் வீசுனாங்க.. ஆனால் இன்னைக்கு! ஓபிஎஸ் சொன்னதுமே ஸ்டாலின் கொடுத்த ரியாக்ஷன் -
தவெகவுக்கு தாவும் திண்டுக்கல் திமுக கவுன்சிலர்.. அவங்க அப்பா பெரிய புள்ளியாச்சே! பிரம்மாண்ட ப்ளான்! -
'நான் முதல்வன்' திட்டத்தின் பெயரை மாற்றிய தவெக.. பழைய பதிவுகளை கூண்டோடு நீக்கிய விஜய்! -
'Sofa Model' தவெக ஆட்சியில் எம்எல்ஏ-க்களை கொள்முதல் செய்றாங்க.. உதயநிதி ஸ்டாலின் நேரடி அட்டாக்! -
வெளியே போறோம்..புரட்சி செய்யும் புதுக்கோட்டை மும்மூர்த்திகள்! சி.விஜயபாஸ்கருக்கு சிக்கல்! என்னாச்சு? -
சேலத்தில் பெரியார் சிலை அவமதிப்பு.. கீழ்த்தரமான செயல் என திமுக கண்டனம் -
இது வெள்ளை அறிக்கை அல்ல.. வெற்று அறிக்கை.. அமைச்சர் மரிய வில்சனை விளாசிய தங்கம் தென்னரசு! -
விஜய் சார் இதை மறந்துடாதீங்க.. திமுக ஐடி விங்க் வெளியிட்ட மீம் வீடியோ..! -
திமுக செய்த சாதனை.. உண்மையை ஒப்புக்கொண்ட TVK.. அப்போ பெண்களுக்கான 'இந்த' திட்டம் வருமா? வரதா? -
தவெகவுக்கு முக்கியத்துவம்?.. மாங்குடியில் ப.சிதம்பரம் செய்த சம்பவம்..அதிருப்தியில் திமுக நிர்வாகிகள் -
"பன்றிக்கு நன்றி சொல்லி குன்றின் மேல் ஏறி".. மரியா வில்சனின் வெள்ளை அறிக்கையை விமர்சித்த திமுக












Click it and Unblock the Notifications