"எதுவுமே சரியில்லை".. ஸ்டாலினுக்கு சென்ற போன் கால்.. பதறியடித்த திமுக.. அடுத்தடுத்து பறந்த வார்னிங்!
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதம் கூட இல்லாத நிலையில் திமுக தரப்பு இன்று அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளது.. திமுக நிர்வாகிகள் பலருக்கு இதனால் முக்கியமான வார்னிங் ஒன்று சென்றுள்ளது.
தமிழக சட்டசபை தேர்தலுக்காக திமுக தீவிரமாக தயாராகி வருகிறது. மொத்தம் 173 தொகுதிகளில் திமுக இந்த தேர்தலில் போட்டியிடுகிறது.187 தொகுதிகளில் திமுகவின் உதய சூரியன் சின்னம் போட்டியிடுகிறது.
திமுகவிற்காக அதன் நிர்வாகிகள் தீவிரமாக தேர்தல் பணிகளை செய்து வருகிறார்கள். இந்த நிலையில் இன்னொரு பக்கம் சில நிர்வாகிகள் சரியாக தேர்தல் பணிகளை கவனிக்கவில்லை என்றும் புகார் சென்றுள்ளது.

தென்காசி
திமுகவில் தென்காசி தற்போது இரண்டு மாவட்டங்களாக பிரிக்கப்பட்டு நிர்வகிக்கப்பட்டு வருகிறது. ஆலங்குளம் சங்கரன்கோவில் தென்காசி தெற்கு மாவட்டம் ஆகும். இதன் மாவட்ட செயலாளர் சிவபத்மநாபன். கடையநல்லூர் மற்றும் வாசுதேவநல்லூர் உள்ளடக்கிய வடக்கு தென்காசியின் மாவட்ட பொறுப்பாளர் துரை. இவர்தான் தற்போது சர்ச்சையில் சிக்கி உள்ளார்.

ஆர்வம்
வாசுதேவநல்லூர் தொகுதியில் திமுக சார்பாக போட்டியிட துரை விருப்ப மனு அளித்து இருந்தார். ஆனால் இவருக்கு பதிலாக இங்கு மதிமுக களமிறங்கி உள்ளது. மதிமுக வேட்பாளர் சதன் திருமலைக்குமார் இங்கு திமுக கூட்டணி சார்பாக போட்டியிடுகிறார். தேர்தலில் போட்டியிட முடியாத விரக்தியில் துரை கடந்த சில தினங்களாக இருந்தார்.

விரக்தி
இதனால் கடந்த சில தினங்களாக இவர் தேர்தல் பணிகளை செய்யவில்லை என்று கூறப்படுகிறது. கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கும் சரி திமுக வேட்பாளர்களுக்கும் சரி..இவர் தேர்தல் ரீதியாக பணிகளை மேற்கொள்ளவில்லை. இதனால் தென்காசியில் இருக்கும் சில திமுக நிர்வாகிகள் ஸ்டாலினிடம் துறை குறித்து புகார் அளித்துள்ளனர்.

புகார்
இங்கே எதுவும் சரியில்லை. தேர்தல் பணிகளே நடக்கவில்லை. நீங்கதான் நடவடிக்கை எடுக்கணும் என்று போனில் புகார் சென்றுள்ளது. இதை கேட்டு திமுக பதறியடித்துள்ளது. தொடர்ச்சியாக நிறைய புகார் வந்த நிலையில் துரை மாவட்ட பொறுப்பாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார் . இவருக்கு பதிலாக செல்லத்துரை தற்போது வடக்கு மாவட்டப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

வார்னிங்
இதையடுத்து திமுக நிர்வாகிகள் எல்லோரும் நன்றாக வேலை பார்க்க வேண்டும். வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் கவலைப்படாமல் தேர்தல் பணிகளை செய்ய வேண்டும். உங்களுக்கான வாய்ப்பு கிடைக்கும் கண்டிப்பாக என்று திமுக தலைமை தங்கள் நிர்வாகிகளிடம் தெரிவித்துள்ளது.
-
ரூ.258 கோடி போதைப்பொருள் வழக்கு பரபரப்பு: விஜய் அரசுக்கு எதிராக திமுக அதிரடி குற்றச்சாட்டு -
குறுநில மன்னர்களுக்கு செக்.. மா.செ.கள் ஏரியாக்களை பறிக்கும் ஸ்டாலின்! இளந்தாரிகளுக்கு மெகா வாய்ப்பு! -
3 மாதத்தில் ஆட்சி கவிழும் என்று ஸ்டாலின் எப்போ சொன்னார்? திரித்து பரப்புவதா? தங்கம் தென்னரசு டென்ஷன் -
வெட்கமாக இல்லையா விஜய் அரசே? ஆன்லைன் பத்திரப்பதிவு சேவை குறித்து திமுக விளக்கம் -
இதெல்லாம் நம்ப மாட்டேன்.. ஸ்டாலின் 'டபுள் செக்' அதிரடி! திமுகவில் நடுங்கும் தலைகள்.. என்ன நடக்குது? -
திமுகவில் இணைந்தார் Ex. MLA பனையூர் பாபு.. விசிகவில் இருந்து ஆயிரக்கணக்கானோருடன் ஜம்ப்! -
திருமாவளவன் குற்றச்சாட்டால் ஆடிப்போன ராகுல், சோனியா.. அடுத்து என்ன செய்யப்போகிறது காங்கிரஸ்? -
தமிழகத்தில் மின்சாரம் துண்டிப்புக்கு திமுக ஆதரவு மின் அதிகாரிகளே காரணம்.. அமைச்சர் ரஞ்சித்குமார் -
ராகுலுக்கு ஷாக் கொடுத்த திமுக! INDIA கூட்டணி தலைவர்களுடன் இடம்பெற்ற பேனர்.. காங். இதை எதிர்பார்க்கல! -
வைகோ வருத்தப்பட போறாரு.. நிர்வாகிகளை தட்டித் தூக்கும் திமுக! ஆர்டர் போட்ட ஸ்டாலின்! துரை தான் பாவம்! -
ஏஐ மூலம் கலைஞர், விஜய் போன்ற தலைவர்களை அசிங்கமாக சித்தரிப்பதா? குரல் எழுப்பும் சிபிஐ! -
உள்ளாட்சி தேர்தலில் வாங்க பார்த்துக்கிறோம்.. ஆதவ் அர்ஜுனாவுக்கு சவால் விட்ட அனிதா ராதாகிருஷ்ணன்












Click it and Unblock the Notifications