Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

'ஐயா நீங்க வந்தாக வேண்டும் என்றார்கள்' தவெக நிர்வாகி பண மாலை அணிவித்த விவகாரம்.. எ.வ.வேலு பதிலடி

Subscribe to Oneindia Tamil

சென்னை: தவெகவின் திருவண்ணாமலை தெற்கு மாவட்டச் செயலாளர் பாரதிதாசனின் சகோதரர்கள் திமுகவினர் என்றும், அவரும் தனக்கு நெருக்கமானவர் என்றும் அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். திருமண்ணாமலையில் எப்போதும் கட்சி பார்த்து விழாக்களில் கலந்து கொண்டதில்லை என்றும் கூறிய அவர், அழைப்பிதழ் அளிக்கப்பட்டதால் விழாவில் கலந்து கொண்டு வாழ்த்தினேன் என்று தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகம் சார்பாக நடத்தப்பட்ட முதல் மாநாட்டில் விஜய் பேசுகையில், கொள்கை எதிரி பாஜக.. அரசியல் எதிரி திமுக என்று சூளுரைத்தார். அதன்பின் ஒவ்வொரு தவெக மேடைகளிலும் விஜய், திமுகவையும், திமுக நிர்வாகிகளையும் கடுமையாக விமர்சித்து வருகிறார். இந்த நிலையில் தவெக திருமண்ணாமலை தெற்கு மாவட்டச் செயலாளர் பாரதிதாசன் புதுமனை புதுவிழாவில் அமைச்சர் எ.வ.வேலு கலந்து கொண்டார்.

DMK Has Close Ties with TVK District Secretary Bharathidasan Family Says Minister E V Velu

எ.வ.வேலுக்கு பண மாலை

பாரதிதாசனின் இல்ல விழாவில் தவெகவினரை விடவும் திமுகவினரே அதிகளவில் இருந்தனர். அதிலும் அமைச்சர் எ.வ.வேலு, அவரின் மகன் கம்பன், திருவண்ணாமலை எம்பி சிஎன் அண்ணாதுரை உள்ளிட்ட திமுகவின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இதில் எ.வ.வேலுவுக்கு பண மாலை அணிவித்து பாரதிதாசன் வரவேற்பு அளித்தார்.

காலில் விழுந்து ஆசீர்வாதம்

அதுமட்டுமல்லாமல் எ.வ.வேலுவின் காலில் விழுந்ததோடு, அவரின் மகன் கம்பன் காலிலும் விழுந்து ஆசி பெற்றது தமிழக வெற்றி கழகத்தினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தவெக தலைமைக்கு செல்ல, விவகாரம் பேசுபொருளானது. இந்த நிலையில் தவெக நிர்வாகி பாரதிதாசன் அக்கட்சித் தலைவர் விஜய்-க்கு மன்னிப்பு கடிதம் எழுதி இருக்கிறார்.

பாரதிதாசன் கடிதம்

அந்த கடிதத்தில் திருவண்ணாமலையில் நான் கட்டியிருக்கும் புதிய வீட்டு புதுமனை புகுவிழா கடந்த 8-ந்தேதி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, நண்பர்கள், கட்சியினர் உள்ளிட்டோரை அழைத்தேன். அவரும் வருகை தந்தார். அமைச்சர் என்பதால், அவருக்கு மரியாதை செய்யும் வகையில் 20 ரூபாய் நோட்டு மாலையும், மலர் மாலையும் அணிவித்தேன். அச்செயலுக்காக வருந்துகிறேன்.

மன்னிப்பு

அதற்காக தலைவரிடம் மன்னிப்பு கோருகிறேன். இனி வரும் காலங்களில் என் சம்பந்தப்பட்ட விழாக்களில் நம் கழக சொந்தங்கள் தவிர வேறு எந்த மாற்றுக்கட்சி நிர்வாகிகளையும் அழைக்க மாட்டேன். மேலும் இதுபோன்ற நிகழ்வுகள் இனிமேல் நடக்காமல் பார்த்து கொள்கிறேன். தலைவர் என்னை மன்னிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எ.வ.வேலு விளக்கம்

இந்த விவகாரம் பேசுபொருளான நிலையில் அமைச்சர் எ.வ.வேலு விளக்கம் கொடுத்துள்ளார். அதில், பாரதிதாசன் என்ன செய்தார் என்பது எனக்கு தெரியாது. என்னை பொறுத்தவரை அவர் எனது வாக்காளர். அவரின் சகோதரர்கள் திமுகவில் இருக்கிறார்கள். எனக்கும் நெருக்கமான குடும்பம். என்னுடன் நெருக்கமானவர் தான். அவர்கள் வீடு கட்டியுள்ளதால், அழைப்பிதழ் கொடுத்து ஐயா நீங்கள் வந்துதான் ஆக வேண்டும் என்றார்கள்.

கட்சி பேதம் கிடையாது

எப்போதும் நான் கட்சி பார்ப்பதில்லை. திருவண்ணாமலையில் யார் அழைப்பிதழ் கொடுத்தாலும், செல்வேன். அப்படிதான் அழைப்பிதழ் கொடுத்தார்கள். அதனால் அந்த விழாவில் கலந்து கொண்டு வாழ்த்தினேன். அவர் என்ன செய்தார் என்பதெல்லாம் எனக்கு தெரியாது என்று கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+