நவ.23-ம் தேதி திமுக உயர்நிலை செயல்திட்டக் குழு கூட்டம்... எதை பற்றி விவாதிக்க கூடுகிறது..?
சென்னை: நவம்பர் 23-ம் தேதி திமுக உயர்நிலை செயல்திட்டக் குழு கூட்டம் சென்னையில் நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
Recommended Video
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் கட்சி ஆக்கப்பணிகள் குறித்து விவாதிக்கப்படும் எனத் தெரிவித்திருக்கிறார் துரைமுருகன்.

நவம்பர் 20-ம் தேதி தனது ஆதரவாளர்களுடன் மு.க. அழகிரி ஆலோசனை நடத்தி அதில் ஏதேனும் திமுகவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்தால் அது தொடர்பாகவும் உயர்நிலைக் குழு கூட்டத்தில் விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது.
மேலும், தேர்தல் நெருங்கி வருவதால் கூட்டணியை இறுதி செய்வது பற்றியும் உயர்நிலை செயல் திட்டக் குழு உறுப்பினர்களுடன் ஸ்டாலின் விவாதிப்பார் எனத் தெரிகிறது.
தேர்தல் அறிக்கையில் இடம்பெற வேண்டிய அம்சங்கள், தேர்தல் பிரச்சாரம், தேர்தல் நிதி, உள்ளிட்ட விவகாரங்கள் குறித்தும் ஸ்டாலின் ஆலோசிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்து வரும் நிலையில் இந்தக் கூட்டத்தை திமுக நடத்தவிருப்பதால் அதில் முக்கிய முடிவுகள் எடுக்க வாய்ப்பிருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக பீகார் தேர்தல் முடிவுகள் குறித்தும் காங்கிரசுக்கு ஒதுக்க வேண்டிய இடங்கள் குறித்தும் உயர்நிலைக் குழு உறுப்பினர்களுடன் ஸ்டாலின் விரிவாகவே ஆலோசிப்பார் எனத் தெரிகிறது.
-
தவெகவை முடக்க இதுமட்டும்தான் ஒரே வழி.. திமுக பிடித்த ரூட்.. ஸ்டாலின் கையில் பிரம்மாஸ்திரம் -
காங்கிரஸ் செய்த கழுத்தறுப்புகள்.. ஆசிர்வாதம் செய்த ராகுல் காந்தி! விடாத திமுக.. குதிக்கும் தலைகள்! -
அண்ணா அறிவாலயத்தில் ஆட்டம் போட்ட மகளிரணி.. ரீல்ஸ் போடச் சொல்லும் ஸ்டாலின்! தவெகவைப் பார்த்து சூடு? -
ஆடிய ஆட்டமென்ன? குறுநில மன்னர்களாக அமைச்சர்கள்! அடங்காத மா.செ.க்கள்! ஆக்ஷனுக்கு தயாரான ஸ்டாலின்! -
“திமுக - அதிமுக இணைந்து ஆட்சி அமைக்க சதி திட்டம் தீட்டியது யார்?” ஸ்டாலினுக்கு செங்கோட்டையன் கேள்வி -
துரைமுருகன் Out? ஆ.ராசா In.. திமுக செயல் தலைவராகும் கனிமொழி? அறிவாலயத்தை ரவுண்ட் கட்டும் யூகங்கள்! -
துரைமுருகன் திரும்பி சென்றது ஏன்.. மகளிரணி கூட்டத்தில் என்ன நடந்தது.. திமுக ஐடி விங் விளக்கம் -
கரண்ட் கட்.. போராட்டமாக மாறிய பொதுக்கூட்ட மேடை! சூடான திமுகவினர்! சென்னையில் சலசலப்பு! -
திமுக தோல்விக்கு காரணம் என்ன என்று நினைக்கிறீர்கள்.. கமெண்ட் செய்யுங்க -
வந்துட்டாருய்யா.. வந்துட்டாரு! திருச்சி கிழக்கில் வடிவேலு? திமுகவில் வெடித்த கலகக் குரல்! என்னாச்சு? -
மாற்றத்தை எதிர்பார்த்த மக்களுக்கு ஏமாற்றமே.. தவெக ஆட்சியை விமர்சித்து ஜவாஹிருல்லா பேச்சு -
2K கிட் டைம் டிராவல் செய்து கருணாநிதியை சந்தித்தால் எப்படி இருக்கும்? ஒரு ஜாலியான, சீரியஸ் கற்பனை












Click it and Unblock the Notifications