10 ஆண்டுகளாக முடங்கி கிடந்த திமுக.. இப்போ இந்தியாவிலேயே நம்பர் 1.. புகழ்ந்து தள்ளிய ஓபிஎஸ் மகன்!
சென்னை: 10 ஆண்டுகளாக முடங்கி கிடந்த திமுக, தற்போது இந்தியாவிலேயே முதன்மையான கட்சியாக உருவாகி கொண்டிருப்பதாக ஓபிஎஸ் மகன் ஜெயபிரதீப் வீடியோ வெளியிட்டுள்ளார். அதிமுக அதள பாதாளத்தை நோக்கி சென்று கொண்டிருப்பதாக குற்றம்சாட்டிய ஜெயபிரதீப், அதிமுகவில் செல்வாக்கு உள்ள யாரும் இருக்கக் கூடாது என்று எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டு செயல்பட்டதாகவும் விமர்சித்துள்ளார்.
அண்மையில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், எந்த நிபந்தனையும் இல்லாமல் அதிமுகவில் இணையத் தயார் என்று தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து அதிமுகவில் மீண்டும் ஓபிஎஸ் சேர்த்துக் கொள்ளப்படுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதனிடையே அவருடைய ஆதரவாளர்கள் உற்சாகம் அடைந்திருக்கின்றனர்.

தற்போது ஓபிஎஸ் இளைய மகன் ஜெயபிரதீப் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், அனைத்து மாவட்டங்களிலும் எடப்பாடி பழனிசாமிக்கு மேல் செல்வாக்கு உள்ள யாரும் கட்சியில் இருக்கக் கூடாது என்ற குறுகிய நோக்குடன் செயல்பட்டவர் எடப்பாடி பழனிசாமி. கட்சியில் யார் சுயமாக சிந்தித்து செயல்படுகிறார்களோ அவர்களையும் கட்சியில் இருந்து நீக்கிவிட்டார்.
இதனால் அதிமுகவில் நல்லவர்கள் அனைவரும் கட்சியில் இருந்து ஒதுங்கி கொண்டனர். ஒரு சிலர் மாற்று கட்சிகளுக்கு சென்றுவிட்டனர். ஆனால் சிலர் மாற்று கட்சிக்கு செல்ல விருப்பமில்லாமல், எந்த பணியையும் செய்யாமல் ஒதுங்கி இருக்கின்றனர். எடப்பாடி பழனிசாமியின் இதுபோன்ற செயல்களால் அதிமுக பின்னோக்கி சென்று கொண்டிருக்கிறது.
1998ல் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரியவராக மாறினார் ஓபிஎஸ். 18 ஆண்டுகளுக்கு மேலாக ஒரு முறை கூட ஜெயலலிதா ஓபிஎஸ்-ஐ பார்த்து கடுஞ்சொல் சொல்லியதில்லை. எந்த முடிவாக இருந்தாலும், தந்தை ஓபிஎஸ் உடன் கலந்தாலோசித்து முடிவினை எடுப்பார்கள். ஆனால் எடப்பாடி பழனிசாமி பொய்யான தகவல்களை தொண்டர்கள் மத்தியில் விஷமாக பரப்பிக் கொண்டிருக்கிறார்.
சொந்த கட்சியினரை காலி செய்ய வேண்டும் என்ற ஒரே சிந்தனையுடன் மட்டுமே எடப்பாடி பழனிசாமி பணியாற்றி கொண்டிருக்கிறார். இதனால் ஜெயலலிதாவின் ஆட்சியில் 10 ஆண்டுகள் முடங்கி இருந்த திமுக, தற்போது இந்தியாவிலேயே முதன்மை கட்சியாக உருவாகி கொண்டிருக்கிறது. ஆனால் நாம் சகோதரர்களுக்குள் பிரிவினையை கொண்டு வந்து தற்போது வரை செயல்படாமல் உள்ளோம்.
அதிமுக அதள பாதாளத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. தாயை இழந்த ஓபிஎஸ், தற்போது கட்சியை இழந்து தவிக்கும் நிலையில் இருக்கிறார். அவர்தான் கட்சிக்காகவும், தொண்டர்களுக்காகவும் போராடி கொண்டிருக்கிறார் என்று தெரிவித்தார். திடீரென ஜெயபிரதீப் வீடியோ வெளியிட்டிருப்பது அக்கட்சி தொண்டர்களிடையே விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
தேமுதிகவிற்கு 10 தொகுதிகள் ஏன்? பின்னணியில் 2 ஜாதிகளின் ஓட்டுகளுக்கு குறி.. ஸ்டாலின் போடும் கணக்கு -
அதிமுக, பாஜக நேரடி போட்டியில்லை.. பெரம்பூரில் தவெக விஜய்க்கு சாதகம்? களமிறக்கிவிடப்பட்ட பாமக! -
சிந்தாமல் சிதறாமல் அள்ள வேண்டும்.. ஸ்மார்ட்டாக காய் நகர்த்திய ஸ்டாலின்.. என்டிஏ கூட்டணிக்கு சேதாரம் -
2026 தேர்தல் யார் ஜெயிப்பார்கள்? ‘நீயா நானா’வில் ஜோதிடர்கள் உடைத்த ரகசியம்! பெண்கள் ஓட்டு, மறு எலக்சன் இருக்காமே! -
எல்லா சின்னமும் நம்ம சின்னம் தான்.. தவிடுபொடியான சதிகாரர்களின் எண்ணங்கள்! ஸ்டாலின் போட்ட ஆர்டர்! -
கலைஞரின் மகள் கனிமொழி நெல்லையில் போட்டியா? அடம் பிடிக்கும் ஆதரவாளர்கள்! தலைமை போடும் வேறு கணக்கு! -
எஸ்டிபிஐ, கருணாஸ்க்கு தலா 1 தொகுதி ஒதுக்கீடு.. உதயசூரியன் சின்னத்திலேயே போட்டி.. எந்த தொகுதி? -
இரட்டை என்ஜின் சர்க்கார்.. ‘ஓபிஎஸ் - இபிஎஸ்’அணி சந்தித்த கடைசி தேர்தல் - 2021 ரீவைண்ட்! -
திமுக கூட்டணியில் அடுத்த விக்கெட்? தனியரசு விலக முடிவு.. அதிருப்தியின் பின்னணி -
DMK Vs ADMK: தமிழக தேர்தல்களில் அதிக தொகுதிகளை வென்ற கட்சி எது தெரியுமா? சுவாரஸ்யம்! -
மதுரை தெற்கில் பாஜக வெல்லுமா.. செளராஷ்டிரா வாக்குகளை நம்பும் ராம சீனிவாசன்.. பூமிநாதன் சமாளிப்பாரா? -
உடையும் கூட்டணி? திமுக முதுகில் குத்திய காங்கிரஸ்! நேருக்கு நேர் தோழமைகளுடன் மோதும் கதர் தலைகள்?












Click it and Unblock the Notifications