திமுக 'ப்ளூ ஸ்கை ஆப்ரேஷன்' நடத்துகிறது.. அதிமுக பரபரப்பு குற்றச்சாட்டு.. பின்னணி இதுதான்!

திமுக கட்சி 'ப்ளூ ஸ்கை ஆப்ரேஷன்' மூலம் லோக்சபா தேர்தலில் வெற்றிபெற திட்டமிட்டு இருப்பதாக அதிமுக குற்றஞ்சாட்டி இருக்கிறது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக கட்சி 'ப்ளூ ஸ்கை ஆப்ரேஷன்' மூலம் லோக்சபா தேர்தலில் வெற்றிபெற திட்டமிட்டு இருப்பதாக அதிமுக குற்றஞ்சாட்டி இருக்கிறது.

அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் இதுகுறித்து குற்றஞ்சாட்டி உள்ளார். தமிழக தேர்தல் களம் தற்போது சூடுபிடித்து இருக்கிறது. லோக்சபா தேர்தல் மற்றும் தமிழக சட்டமன்ற இடைத்தேர்தலுக்காக திமுக, அதிமுக சார்பாக தீவிரமாக பிரச்சாரம் செய்யப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டில் சோதனை நடைபெற்றது. தேர்தல் பறக்கும்படை பிரிவினர் இந்த சோதனையை நடத்தினார்கள்.

கடுமை

கடுமை

நேற்று சுமார் 14 மணி நேரம் இந்த சோதனை நடந்தது. இதில் கடைசியில் எந்த விதமான பொருளும் கைப்பற்றப்படவில்லை என்று துரைமுருகன் தரப்பு தெரிவித்து இருக்கிறது. சுமார் 40 அதிகாரிகள் துரைமுருகனுக்கு சொந்தமான வீடு மற்றும் கல்லூரிகளில் சோதனை செய்தனர்.

என்ன புகார்

என்ன புகார்

இந்த நிலையில் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் திமுக 'ப்ளூ ஸ்கை ஆப்ரேஷன்' நடத்துகிறது என்று பரபரப்பு குற்றச்சாட்டு வைத்து இருக்கிறார். இந்த ஆபரேஷன் மூலம் பல கோடிகளை அள்ளிக்கொடுத்து மக்களை தேர்தல் நேரத்தில் விலைக்கு வாங்க திமுக முயற்சிக்கிறது என்று அவர் கூறி இருக்கிறார்.

எவ்வளவு கோடி

எவ்வளவு கோடி

அதன்படி ஒவ்வொரு தொகுதிக்கும் திமுக 100 கோடி ரூபாய் செலவு செய்ய திமுக திட்டமிட்டு இருக்கிறது . திமுக மொத்தம் 20 தொகுதிகளில் தேர்தலில் போட்டியிட உள்ளது. இதனால் 2000 கோடி ரூபாய் வரை திமுக செலவு செய்ய திட்டமிட்டு இருப்பதாக அதிமுக குற்றஞ்சாட்டி இருக்கிறது.

இதனால்தான் சோதனை

இதனால்தான் சோதனை

மேலும் நேற்று துரைமுருகன் வீட்டில் இதனால்தான் சோதனை நடந்தது. வருமான வரித்துறைக்கு இதுகுறித்து தகவல் சென்று இருக்கிறது. அதன் அடிப்படையிலேயே நேற்று சோதனை நடந்தது என்று அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் கூறி இருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+