ரஜினிகாந்த் வாழ்த்தால்...திமுகவுக்கு எந்த வரவும் இல்லை...ஆர்எஸ் பாரதி!!
சென்னை: துரைமுருகன், டிஆர் பாலுவை ரஜினிகாந்த் வாழ்த்தி இருப்பதால் எந்த வரவும் திமுகவுக்கு இருக்கப் போவதில்லை என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.
திமுகவுக்கு புதிய பொருளாளர், பொதுச்செயலாளர் தேர்வு நடைபெறும் என்றும் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், பொருளாளர் பதவிக்கு டிஆர் பாலுவும், பொதுச்செயலாளர் பதவிக்கு துரைமுருகனும் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்எஸ் பாரதியிடம் வேட்புமனு தாக்கல் செய்து இருந்தனர்.

இவர்கள் இருவர் மட்டுமே வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு இருந்ததால், இவர்கள் இருவரும் இந்தப் பதவிகளுக்கு போட்டியின்றி தேர்வு செய்யப்படுவார்கள் என்று கூறப்பட்டது. பொதுவாக திமுகவில் இந்த இரண்டு பதவிகளுக்கு எந்தவித போட்டிகளும் இன்றி தேர்வு செய்யப்படுவது வழக்கம். வரும் செப்டம்பர் 9ஆம் தேதி பொருளாளர், பொதுச்செயலாளர் தேர்வு செய்வதற்கு பொதுக்குழு கூட இருக்கிறது. அப்போது இவர்கள் இருவரும் இந்தப் பொறுப்புக்கு தேர்வு செய்யப்பட்டு இருப்பது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
இதையடுத்து இவர்கள் இருவருக்கும் நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்து இருந்தார். இதுகுறித்து இன்று கருத்து தெரிவித்து இருக்கும் ஆர்எஸ் பாரதி, ''துரைமுருகன், டிஆர் பாலுவை ரஜினிகாந்த் வாழ்த்தியதால், எந்த வரவும் திமுகவுக்கு இருக்கப் போவதில்லை'' என்று தெரிவித்துள்ளார்.
Recommended Video
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது!












Click it and Unblock the Notifications