சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"லிஸ்ட் " ரெடியாகுதாமே.. இன்னும் ரிசல்ட்டே வரலையே.. அதுக்குள்ளயா.. பரபரப்பை கிளப்பும் யூகங்கள்!

திமுக ஆட்சியை பிடிக்குமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது

Google Oneindia Tamil News

சென்னை: கருத்துக்கணிப்புகளுக்கு பிறகு திமுக தொண்டர்கள் மிகுந்த தெம்புடன் உள்ளனர்.. இதையடுத்து, திமுக தலைமையும் அடுத்தடுத்த வேலைகளில் தீவிரமாக இறங்கி வருவதாக கூறப்படுகிறது..!

இந்த முறை பெரும்பாலான கருத்து கணிப்புகள் திமுகவுக்கு சாதகமாகவே வந்துள்ளன.. வாக்குப்பதிவு அன்றும், தொகுதிகள் நிலவரங்கள் குறித்தும் திருப்திகரமான தகவல்களே கிடைத்துள்ளன. அந்த வகையில் திமுக கூடாரமே மகிழ்ச்சியுடன் காணப்படுகிறது.

மற்றொரு புறம், அடுத்தகட்ட நகர்வுகளுக்குள் திமுக இறங்கிவிட்டதாக தெரிகிறது.. எத்தனை கருத்து கணிப்புகள் வந்தாலும், திமுக அதை பெரிதுப்படுத்தி கொள்ளாமல் களப்பணியில் ஈடுபட்டது என்பது வேறு விஷயம்..!

அதிகாரிகள்

அதிகாரிகள்

ஆனால், வெற்றி உறுதி, அடுத்து நாம்தான் ஆட்சி அமைப்போம் என்ற நம்பிக்கையில் திமுக தரப்பில் தேர்தலுக்கு பிந்தைய வேலைகளில் அப்போதே ஆர்வம் காட்ட தொடங்கிவிட்டனர். அதாவது, முக்கிய அதிகாரிகள் யார் யார் என்ற லிஸ்ட்டை எடுத்து வருவதாகவும், மண்டல, மாவட்ட வாரியாக பிரித்து எந்த அதிகாரியை நியமிக்கலாம் என்ற பணியில் ஈடுபட்டுள்ளனராம்.

ஆலோசனை

ஆலோசனை

அதேபோல, அமைச்சரவை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.. அதேபோல, மூத்த நிர்வாகிகளிடமும் இனி ஆலோசனை நடத்த போவதாகவும் தெரிகிறது. அதேமாதிரி அதிகாரிகள் நியமனம் விஷயத்தையும் 10 நாட்களுக்கு முன்பே, திமுக தரப்பில் லிஸ்ட் தயாராகி வருவதாகவும் சொல்லப்பட்டது.. இதில் நேர்மையானவர்கள் நிறைய பேரை செலக்ட் செய்திருக்கிறார்களாம்.. அதிலும், இந்த அதிமுக ஆட்சியில் நேர்மையாக பணியாற்றியவர்களுக்கும் கூட வாய்ப்பு உள்ளதாம்.

 அமைச்சர்கள்

அமைச்சர்கள்

மேலும், அமைச்சர்கள் யார் யார் என்ற விவாதமும் திமுக தலைமையை சுற்றி சுற்றியே நடந்துள்ளதாக செய்திகளும் வருகின்றன. ஆனால், இதெல்லாம் எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை... எனினும், ஒரு உறுதிமிக்க நடவடிக்கைகள்தான் தற்போதும் திமுக தரப்பில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதில் இன்னொரு விஷயமும் சொல்கிறார்கள்.. அதாவது, வாரிசு வேட்பாளருக்கு அமைச்சர் பதவி வேண்டாம் என்பதில் திமுக தலைமை உறுதியாக இருக்கிறதாம்...!

உதயநிதி

உதயநிதி

இதற்கு காரணம் என்னவென்று தெரியவில்லை.. எத்தனையோ அதிருப்திகளுக்கு பிறகுதான் அவருக்கு சீட் தரப்பட்டது.. அதை அவர் பிரச்சாரங்களிலேயே ஸ்கோர் செய்தும்விட்டார்.. ஒருவேளை திமுக வெற்றி பெற்று வந்தாலும்கூட, அமைச்சர் பதவி தரப்பட மாட்டாது என்றும், அநேகமாக ஒரு வருடம் கழித்து அமைச்சரவை மாற்றியமைக்கும்போது வேண்டுமானால் பதவி தரப்படலாம் என்றும் தெரிகிறது. இதெல்லாம் எந்த அளவுக்கு உண்மை என்று தெரியாவிட்டாலும்கூட, இப்படி பரபரப்புகளுக்கு பஞ்சம் இல்லாமல் அனுமானங்கள் ஓடிக் கொண்டிருக்கின்றன..!

English summary
DMK is preparing the list of officials, sources say
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X