யோகம் திமுகவுக்கே.. விஜயின் ஆபத்தான மவுனமும், எடப்பாடி அதிமுகவின் வீக்னஸும்.. உருண்டு புரளுது சமூகம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய்யை வைத்து எடப்பாடி பழனிசாமி அரசியல் செய்கிறார்.. ஒருவருக்கு வீக்னஸ் இருக்கலாம், ஆனால் அந்த வீக்னஸை காட்டி கொள்ள கூடாது.. அந்தவகையில், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவுக்கும் வீக்னஸ் உள்ளது.. தேர்தலுக்கு பிறகு யாருமே அதிமுகவுடன் கூட்டணிக்கு செல்லவில்லை. மெகா கூட்டணி என்றெல்லாம் எடப்பாடி சொல்லியும்கூட, கூட்டணி வைக்க முன்வரவில்லை" என்று பத்திரிகையாளர் மணி கருத்து கூறியிருக்கிறார்.

Tamil Thadam என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள மூத்த பத்திரிகையாளர் மணி, விஜய்யை தவிர எல்லாருமே பேசுகிறார்கள் விஜய்யை பற்றி.. தவெகவிலும் பேசுவதற்கு யாருமே இல்லை.. மக்கள் பங்களிப்பே இல்லாத ஒருத்தர், எப்படி கட்சியை நடத்த முடியும்..

DMK TVK Vijay

டிஜிபியிடம் தந்த கடிதத்திலேயே அவர் என்ன மாதிரியான அரசியல் தலைவர் என்பதை வெளிச்சம் போட்டு காட்டிவிட்டது. அரசியல் கட்சி என்பதே மக்களின் இயக்கம்தான்.. மக்களிடம் நெருங்காதவர் எப்படி தலைவராக இருக்க முடியும்?

20 லட்சத்தை, பாதிக்கப்பட்டவர்களை அழைத்து தந்திருக்க வேண்டும்.. பேங்க் அக்கவுண்ட்டில் செலுத்திவிடுவதால், கடைசிவரை மக்களின் பங்களிப்பே இல்லாமல் அரசியல் கட்சியை நடத்திவிட முடியுமா?

எடப்பாடி பழனிசாமியின் வீக்னஸ்

மீடியாவிடம் விஜய் பேசுவது கிடையாது.. மக்களிடமும் பேசுவது கிடையாது.. விஜய்க்கு எதிராக யாருமே எதுவுமே செய்ய தேவையில்லை.. விஜய்யை அப்படியே விட்டாலே, அவரால் அரசியலில் நீடிக்காமலே போய்விடும்..

விஜய்யை வைத்து எடப்பாடி பழனிசாமி அரசியல் செய்கிறார்.. ஒருவருக்கு வீக்னஸ் இருக்கலாம், ஆனால் அந்த வீக்னஸை காட்டி கொள்ள கூடாது.. அந்தவகையில், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவுக்கும் வீக்னஸ் உள்ளது.. தேர்தலுக்கு பிறகு யாருமே அதிமுகவுடன் கூட்டணி செல்லவில்லை. மெகா கூட்டணி என்றெல்லாம் எடப்பாடி சொல்லியும்கூட, கூட்டணி வைக்க முன்வரவில்லை.

ஆபத்தான மௌனம்

இன்று விஜய் விஷயத்தில் எடப்பாடியின் செயல்பாடுகள் அனைத்தும் அதிமுகவின் விரக்தியைதான் வெளிப்படுத்துகிறது.. அதிமுக, திமுக இரண்டுமே எனக்கு எதிரி என்று நாளைக்கு விஜய் சொன்னால், அதிமுகவுக்குதான் மிகப்பெருத்த பின்னடைவு ஏற்படும்.. அதுக்காக திமுகவுக்கு தவெகதான் எதிரி என்பதெல்லாம் ஏற்க முடியாது.

தேர்தல் நெருக்கத்தில் அரசியல் களத்தில் நிற்கக்கூடியது அதிமுகவும், திமுகவும் மட்டுமே.. ஒரே ஒரு கரூர் நிகழ்வை விஜய்யால் எதிர்கொள்ள முடியவில்லை. .இப்போதுவரை அவரால் வெளியே வரமுடியவில்லை.

விஜய் இல்லாவிட்டாலும், அவரது கட்சி தொண்டர்கள் ஒருத்தர்கூட கரூர் மருத்துவமனைக்கு போகலையே? தவெகவில் கட்டமைப்பு இல்லை.. புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமார் எல்லாருமே பயந்து ஓடாமல் கரூருக்கு போயிருக்கலாமே? விஜய்யை பொறுத்தவரை அரசியலுக்கு தகுதியில்லாதவர் என்று சொல்ல முடியாது, ஆனால் பொருத்தம் இல்லாதவர்.

அதிமுக விஜய் கூட்டணி

கரூர் நிகழ்வுக்கு பிறகு திமுக, அதிமுகவை அவ்வளவு எளிதாக எதிர்க்க முடியாது என்ற ஞானோதயம் விஜய்க்கு வந்திருக்கலாம். காரணம், கலைஞர், எம்ஜிஆர், ஜெயலலிதாவே சந்திக்காத விஷயம் இது.. இதுவரை தமிழ்நாட்டில் அரசியல் கட்சி கூட்ட நெரிசலில் இவ்வளவு பேர் இறந்ததே கிடையாது.

ஏனென்றால், எந்த கட்சியாக இருந்தாலும், அக்கட்சிக்கு தொண்டர்கள் கட்டுப்படுவார்கள். தலைவர்களுக்கு கட்டுப்படுவார்கள். ஆனால், தவெக கட்சி யாருக்குமே கட்டுப்படாத கட்சியாக உள்ளது. அப்படிப்பட்ட கட்சியின் தலைவர், இதுவரை வாய் திறக்காமலும் இருப்பது ஆபத்தானது.

உருளுது புரளுது

கரூர் சம்பவத்தில் அரசின் மீது குறை இருந்தாலும், பெரும்பாலான தவறு விஜய் மீதுதான் உள்ளது.. அந்த சம்பவத்துக்கு தார்மீக பொறுப்பு ஏற்பதாககூட ஒரு வார்த்தை சொல்லவில்லை. இதுவே விஜயகாந்த்தாக இருந்திருந்தால், கண்டிப்பாக சொல்லியிருப்பார். ஜெயலலிதா, கலைஞர் இருந்திருந்தாலும் தார்மீக பொறுப்பேற்பதாக சொல்லியிருப்பார்கள்.

அமைதியாகவே இருக்கும் விஜய்யை வைத்து, யாரும் எதுவும் கணிக்க முடியாது.. அதிமுகவுடன் கூட்டணி இல்லை என்று சொன்னாலும் ஆச்சரியமில்லை.. அதேபோல கரூர் சம்பவம் நடந்து 20 நாட்களுக்கும் மேலாகியும், ஒரு தனி மனிதனை பற்றியே பேசி பேசி உருண்டு புரள்கிறது இந்த சமூகம்" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+