நீட்டை ரத்துசெய்ய முடியாது, இது திமுகவிற்கு தெரியும்.. ஆனாலும் ஏமாற்றுகிறார்கள்.. சீறும் எல் முருகன்
சென்னை: நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது என்று திமுகவிற்கு தெரியும் என்றும் ஆனாலும் மக்களை ஏமாற்றும் முயற்சியில் திமுக ஈடுபட்டு வருவதாகவும் தமிழ்நாடு பாஜக தலைவர் எல் முருகன் விமர்சித்துள்ளார்,
சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமையகமான கமலாலயத்தில் பாஜக விவசாய அணி சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு பாஜக தலைவர் எல் முருகன் கலந்து கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் பாஜக சார்பில் ஒரு லட்சம் மாஸ்க்குகள் மற்றும் ஆக்சிஜன் செறிவூட்டிகள் தமிழ்நாடு சுகாதாரத் துறைக்கு வழங்கப்பட்டது.

எல் முருகன் பேச்சு
இந்த நிகழ்ச்சி முடிந்ததும் தமிழ்நாடு பாஜக தலைவர் எல் முருகன் செய்தியாளரிடம் பேசினார். அப்போது அவர் கூறுகையில், "தமிழ்நாடு பாஜக சார்பில் பல்வேறு நிவாரண உதவிகளை செய்து வருகிறோம். முன்களப் பணியாளர்களுக்கு வழங்க 1 லட்சம் மாஸ்க்குகளை தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்கவுள்ளோம். கொரோனா தடுப்பூசிகளை மத்திய அரசு தடுப்பூசி முறையாகவே பிரித்து மாநிலங்களுக்கு அளித்து வருகிறது. ஆனால், இங்கு திமுக தலைமையிலான மாநில அரசு, குறை கூறுவதையே வேலையாக வைத்துள்ளது.

மாதம்தோறும் ரூ 1000 எங்கே
திமுக ஆட்சி அமைத்து 30 நாட்கள் கடந்துவிட்டது. பல தாய்மார்களிடம் இருந்து கோரிக்கைகள் வந்து கொண்டிருக்கிறது. திமுக தனது தேர்தல் அறிக்கையில் மாதம் மாதம் 1000 அளிப்பதாக வாக்குறுதி அளித்தனர். ஆனால், இப்போது ஆட்சி அமைத்த பிறகு, அது குறித்து வாய் திறக்கவே மறுக்கின்றனர். எனவே, தேர்தல் அறிக்கையில் கூறிய வாக்குறுதியை திமுக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.

நீட்டை ரத்து செய்ய முடியாது
நீட் விவகாரத்தில் மாணவர்களைக் குழப்பக் கூடாது. நீட் தேர்வைக் கொண்டு வந்தது காங்கிரஸ் ஆட்சியில் தான். மாணவர்கள் மனதில் நஞ்சை விதைக்க வேண்டும் என்ற திமுக செயல்படுகிறது. நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது என்று திமுகவிற்கு தெரியும். ஆனாலும் மக்களையும் மாணவர்களை ஏமாற்ற திமுக பல முயற்சிகளைச் செய்து வருகிறது. சர்வதேச அளவில் போட்டியிடும் வகையில் கல்வித் தரத்தைத் தமிழ்நாடு அரசு உயர்த்த வேண்டும். மாணவர்கள் கல்வியில் திமுக அரசியல் செய்ய வேண்டாம்.

நூலகங்களில் முரசொலி நாளிதழ்
நூலகங்களில் முரசொலி நாளிதழ் கட்டாயம் வாங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர். இது அதிகார துஷ்பிரோகம். அனைத்து நாளிதழ்களையும் நூலகங்களில் வாங்கத் தமிழ்நாடு அரசு உத்தரவிட வேண்டும். பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும் என தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தார்கள். முதலில் அதை நிறைவேற்றுங்கள், பின்னர் மத்திய அரசைக் குறை கூறலாம்" என்றும் எல் முருகன் விமர்சித்துள்ளார்.
-
”ஆபரேசன் கமலாலயம்” அண்ணாமலையால் ஆட்டம் காணும் பாஜக! பேராசிரியருக்கு பெரிய லக்! அமித் ஷாவின் ப்ளான்? -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பாஜகவை விட்டு விலகுகிறேன்.. 39 ஆண்டு பயணத்திற்கு முற்றுப்புள்ளி.. காரணம் இதுதான்! நடிகர் பாண்டி ரவி ஆதங்கம் -
“வெறும் காகிதத்தில் மட்டுமே 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதா?”.. முதல்வர் விஜய்க்கு பாஜக கேள்வி! -
நீட் தேர்வு.. எக்ஸாம் டைம் எக்ஸ்ட்ரா கொடுத்த NTA! இந்த முறையாவது தேர்வு சரியாக நடக்குமா? -
கடன் சுமை டூ வங்கி இருப்பு! 12 வருடத்தில் விவசாயிகளின் தலையெழுத்தை மாற்றிய கிசான் சம்ரித்தி திட்டம் -
தாமிரபரணி ஆற்றில் ஜாலியோ ஜாலி.. ட்ரோன் கேமராவில் சிக்கிய நவத்திருப்பதி யானைகள் -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி












Click it and Unblock the Notifications