கொரோனா பரவ காரணமாக இருக்க கூடாது.. தி.மு.க.வினர் கொண்டாட்டங்களை தவிர்க்கணும்.. ஸ்டாலின் வேண்டுகோள்
சென்னை: திமுகவினர் கொண்டாட்டங்களை தவிர்க்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடந்து வருகிறது. தமிழகத்தில் சுமார் 10 ஆண்டுகளுக்கு பிறகு திமுக மீண்டும் ஆட்சியில் அமர இருக்கிறது. தற்போது வரை திமுக 144 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது.
அதிமுக 88 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. தற்போது கொரோனா பரவி வருவதால் எந்த கட்சி வெற்றி பெற்றாலும் அதனை பொது வெளியில் கொண்டாடக் கூடாது என்று தேர்தல் ஆணையம் ஏற்கனவே அறிவித்து இருந்தது.

மு.க.ஸ்டாலின் அறிக்கை
ஆனால் திமுக வெற்றியை அந்த கட்சியின் தொண்டர்கள் அண்ணா அறிவாலயம் முன்பு கூடி நின்றும், பட்டாசு வெடித்தும் கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் திமுகவினர் கொண்டாட்டங்களை தவிர்க்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

குறைவான வாக்குகள்
தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலையில் தொடங்கி நடந்து வருகிறது. இதுவரை 30 விழுக்காட்டிற்கும் குறைவான வாக்குகள் மட்டுமே எண்ணப்பட்டுள்ளன. பெரும்பான்மைத் தொகுதியில் தி.மு.கழகக் கூட்டணிக் கட்சிகள் முன்னிலை வகித்து வெற்றியை நோக்கி முன்னேறிக் கொண்டு இருப்பதையே தகவல்கள் தெரிவிக்கின்றன. இறுதி முடிவுகள் ஒவ்வொரு தொகுதியாக மாலையில் இருந்து வரத் தொடங்க உள்ளன. ஆட்சி அமைக்க இருப்பது தி.மு.க.தான் என்பது உறுதியாகிவிட்டது.

முகவர்கள் கண்காணிக்க வேண்டும்
இந்த நிலையில் வாக்கு எண்ணும் மையங்களில் உள்ள நமது நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் மிக மிக விழிப்புணர்வுடன் இருந்து வாக்கு எண்ணிக்கையை கண்காணிக்க வேண்டும். வாக்கு எண்ணிக்கையில் ஏதாவது குளறுபடிகள் நடந்து விடாமல் தடுக்க வேண்டும். பெரிய குளறுபடிகள் எதுவும் செய்து விட முடியாது என்றாலும் - எங்காவது ஒரு அதிகாரி - அதைச் செய்து விடக் கூடும் என்பதால் அதிக கவனம் அவசியம். எந்தக் காரணத்தை முன்னிட்டும் முழு வாக்கு எண்ணிக்கை முடியும் வரை வாக்கு எண்ணிக்கை மையத்தை விட்டு வெளியே வரக்கூடாது. எதிர் அணியினர் வாக்கு எண்ணிக்கையினை சீர்குலைக்காமல் பார்த்து கொள்ள வேண்டும்

வெளியே வரக்கூடாது
ஏதேனும் காரணம் காட்டி வெற்றிச் சான்றிதழை வழங்கக் காலதாமதம் செய்தால் உடனடியாகத் தலைமையைத் தொடர்பு கொள்ளவும். வெற்றிச் சான்றிதழ் பெறும் வரைக்கும் எக்காரணம் கொண்டும் அனைத்து முகவர்களும் வாக்கு எண்ணும் மையத்தை விட்டு வெளியேறக் கூடாது. வாக்கு எண்ணிக்கையை முழுமையாக முடித்து, வெற்றிச் சான்றிதழைப் பெறுவதிலேயே குறியாக இருக்க வேண்டும்.

கொண்டாட்டங்களை தவிர்க்க வேண்டும்
நமது வெற்றி என்பது உறுதி செய்யப்பட்ட வெற்றியாகும். இருப்பினும் கொரோனா என்ற பெருந்தொற்று காலம் என்பதால் தொண்டர்கள் அனைவரும் அதிக கவனத்துடன் செயல்பட வேண்டும். வெற்றிக் கொண்டாட்டங்களைத் தவிர்க்க வேண்டும் என்று நான் ஏற்கனவே அறிக்கை வெளியிட்டு இருந்தேன். பெருந்தொற்று தொற்றிக் கொள்ளவும், பரவவும் காரணம் ஆகிவிடக்கூடாது. பட்டாசு வெடிப்பது போன்ற கொண்டாட்டங்களைத் தவிர்க்கவும். திராவிட முன்னேற்றக் கழகத்தின் வரலாற்றில் புதியதோர் அத்தியாயம் தொடங்க இருக்கிறது. நம்மையும் பாதுகாத்து, நாட்டையும் பாதுகாப்போம்! இவ்வாறு மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
-
வில்லிவாக்கத்தில் நானே வேட்பாளர் என நினைத்துக் கொள்ளுங்கள்.. நண்பனுக்காக களம் இறங்கிய சபரீசன் பேட்டி -
சென்னை உட்பட.. 30 மாவட்டங்களுக்கு பறந்த மஞ்சள் அலர்ட்! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
1988ல் "மக்கள் ஆணையிட்டால்" படத்தில்! விஜயகாந்துக்காக ஸ்டாலின் பாடிய பாடல் இதுதான்! -
காமராஜரை டெல்லி வீட்டில் வைத்து கொளுத்த பார்த்தது சங்கி கூட்டம்! ஸ்டாலின் குற்றச்சாட்டு! -
“படத்தில் விஜயகாந்துக்கு வாக்கு கேட்டேன்.. இன்று அவரது மகனுக்கு ஓட்டு கேட்கிறேன்" - ஸ்டாலின் பேச்சு -
6ஆம் வகுப்பு முதல் மும்மொழி கொள்கை! இந்தி திணிப்பை கண்டித்து சிபிஎஸ்இக்கு ஸ்டாலின் கண்டனம் -
மத்திய அரசின் முடிவு.. கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானது.. தமிழச்சி தங்கப்பாண்டியன் பதிவு -
Gold Price: மீண்டும் எகிறிய தங்கம் விலை.. ஒரே நாளில் தாறுமாறாக உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம் -
சென்னையின் மெகா மேக் ஓவர்.. நகரின் மையத்தில்.. வரப்போகும் 3 மேஜர் திட்டங்கள்.. இன்ஜினியரிங் அதிசயம்! -
“தனது பெயர்ப் பலகையை காப்பாற்றிக் கொள்ள டெல்லிக்கு ‘காவடி’ தூக்குகிறார் எடப்பாடி” - ஸ்டாலின் தாக்கு! -
கருணாநிதியை வீட்டுச் சிறையில் வைத்திருந்தேனா? நாக்கில் நரம்பிருக்கா பழனிசாமி? ஸ்டாலின் ஆவேசம் -
புதுவையில் ஏப்.6-ல் ராகுல் பிரச்சாரம்! ஸ்டாலினும் மாலையில் பரப்புரை!











Click it and Unblock the Notifications