அமைச்சர்கள் சொதப்பல்.. தலைவர்கள் குழப்பல்.. மு.க.ஸ்டாலின் கலக்கல்.. கலக்கத்தில் அதிமுக!
ஸ்டாலினின் இடைத்தேர்தல் பிரச்சாரங்கள் மக்களை கவர்ந்து வருகிறது.
சென்னை: பொதுத்தேர்தலை விடுங்க.. இந்த இடைத்தேர்தலில் ஸ்டாலினின் பிரச்சாரம் ரொம்பவே தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளதாம்!
நடந்து முடிந்த தேர்தலில் அமைச்சர்கள் சொதப்பியதில் அதிமுக தரப்பில் பிரச்சாரங்கள் பெரிதாக சோபிக்கவில்லை. ஆனால் கடைசிவரை ராஜேந்திர பாலாஜி, மாம்பழம் சின்னத்துக்கு பதில் ஆப்பிள் சின்னம் சொல்லி கொண்டிருந்தது வேறு விஷயம்!
ஆனால் பிரச்சாரத்தில் அதிகமாக எடுபட்டது முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் பிரச்சாரம்தான். கொளுத்தும் வெயிலில், மண்டை பிளக்க நின்று பேசினார். கிடைத்த ஊரில், கிடைத்த சாப்பாட்டுடன் தன் பிரச்சாரத்தை தொடர்ந்தார்.

பொதுக்கூட்டம்
திமுக தலைவர் முக ஸ்டாலினோ, இந்த அளவுக்கு மெனக்கெடவில்லை. காலையில் வாக்கிங்குடன் கூடிய வோட்டிங் நடந்தது. மாலையில் ஒரு பெரிய பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார். அவ்வளவுதான்.. பார்த்து பார்த்து படிக்கிறார்... பார்த்து படிக்கும்போதே சொதப்புகிறார் என்று விமர்சனங்கள் வந்தன.

செல்பிகள்
ஆனால் இந்த முறை அப்படி இல்லை. இடைத்தேர்தல் பிரச்சாரத்துக்காக பெரிய மேடைகளை தேடி போகவில்லை. திண்ணை பிரச்சாரத்தை கையில் எடுத்தார். வீடு வீடாக சென்று மக்களை அணுகி வாக்கு கேட்டார். யாரை சந்தித்தாலும் செல்பிதான்.. சிரிப்புதான்.. நலன் விசாரிப்புதான்!

மாம்பழம் பாட்டி
ரோட்டில் மாம்பழம் வித்து கொண்டிருந்த பாட்டியையும் விட்டுவைக்காமல் ஸ்டாலின் நலன் விசாரித்து வாக்கு சேகரித்தார். குழந்தைகளுக்கு பெயர் சூட்டல், பாட்டிகளிடம் அன்பு, சலிக்காமல் செல்பி எடுக்க ஒத்துழைப்பது என ஸ்டாலின் பிரச்சாரம் மக்களை கவர்ந்து வருகிறதாம்!

அதிமுக கிலி
ஸ்டாலின் இப்படி நேரடியாகவே வாக்கு கேட்ட சென்றுவிட்டது அதிமுக தரப்பில் கிலியை ஏற்படுத்திவிட்டது. ஏற்கனவே அங்கு நல்ல பேச்சாளர்கள் இல்லை. அதனால் என்ன செய்வதென்றே தெரியாமல் நல்ல ஐடியாவை யோசித்து வருகிறதாம்!
-
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications