கியரை மாற்றிய ஸ்டாலின்.. "3 அமைச்சர்கள்".. தவிடுபொடியாகும் அதிமுகவின் வெற்றி தொகுதிகள்..!?
ஸ்டாலினின் புதுவியூகம் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துவருகிறது
சென்னை: அடுத்ததாக திமுகதான் ஆட்சியை பிடிக்கும் என்ற கணிப்புகள் வெளியாகி வரும் நிலையில், மொத்தம் 3 அமைச்சர்களை திமுக குறி வைத்துள்ளது என்கிறார்கள்.. இதற்கு என்ன காரணம்?
10 வருஷ காலம் விட்ட ஆட்சியை பிடிக்கும் நோக்கத்தில் திமுக மிக தீவிரமாக உள்ளது.. அதற்காகவே பெரும்பான்மையான இடங்களில் திமுக தனித்து களம் காண்பது என்ற முடிவிலும் உறுதியாக இருக்கிறது..
சில தினங்களுக்கு முன்பு கள ரிப்போர்ட் ஒன்றை திமுக எடுத்திருந்தது.. அதில், தொகுதிகளை 3ஆக பிரித்தது.. ஒன்று, அசால்ட்டாக வெற்றி பெறக்கூடிய தொகுதிகள், மற்றொன்று, போராடி வெற்றி பெறக்கூடிய தொகுதிகள், மூன்று, அதிமுகவுக்கு சாதகமான தொகுதிகள் என அந்த லிஸ்ட் ரெடியானது.

கூட்டணி
வழக்கமாக, கூட்டணிகளை ஒதுக்கீடு செய்கிறார்கள் என்றால், அதிலும் அதிமுகவுக்கு சாதகமான தொகுதிகள் என்று உறுதியாக தெரிந்தால், அங்கு திமுக மெனக்கெடாது.. அந்த தொகுதியை கூட்டணிக்கு ஒதுக்கிவிடும் திமுக... இதுதான் இவ்வளவு கால நடைமுறை.. இப்போது அப்படியில்லை..

வேட்பாளர்
எந்த தொகுதியில் அதிமுக உறுதியாக இருக்கிறதோ, அந்த தொகுதிகளில்தான் கூடுதல் கவனம் செலுத்தியது. வேட்பாளர் தேர்வும் அப்படித்தான் நடந்தது.. இந்த வேட்பாளர் தேர்வும், அந்தந்த மாவட்ட செயலாளர்களின் ஆலோசனையை பெற்று நடந்தாலும், கள நிலவரத்தை நேரடியாக அறிந்தே வேட்பாளர்களை திமுக இறக்கி உள்ளதாக தெரிகிறது.

பண பலம்
அந்த வகையில், 3 முக்கிய அமைச்சர்களின் தொகுதிகளுக்கும் குறி வைக்கப்பட்டது.. இந்த 3 அமைச்சர்களும் தொகுதியில் வலுவானவர்கள்.. யாரை எதிராக கொண்டு போய் நிறுத்தினாலும் எளிதாக ஜெயிக்கக் கூடியவர்கள்.. பண பலம் உடையவர்கள்.. வீட்டுக்கு வீடு கதவை தட்டி, அந்த வாக்குகளை மொத்தமாக தன் பக்கம் இழுக்கும் சக்தி படைத்தவர்கள். கடந்த 4 ஆண்டுகளில் தங்கள் தொகுதிக்கு ஏராளமான நலத்திட்டங்களையும் செய்து வைத்திருக்கிறார்கள்..

3 அமைச்சர்கள்
இந்த திட்டங்களை சொல்லி ஓட்டு கேட்டும் வருகிறார்கள்.. இன்னபிற தேவைகளையும் தொகுதி மக்களுக்கு நிறைவேற்றியும் வருகிறார்கள்.. . இதெல்லாம் தெரிந்தும், அந்த 3 தொகுதிகளில் அமைச்சர்களை எதிர்க்க, அவர்களுக்கு ஈடு கொடுக்கும் ஸ்டிராங் நபர்களை களமிறக்கி உள்ளது. அமைச்சர்களுக்கு நிகரான பணத்தை வாரி இறைக்க கூடியவர் + சமுதாய வாக்குகளை பெருவாரியாக அள்ளக்கூடியவர்கள் என்ற ரீதியில் திமுக வேட்பாளர்கள் இறங்கி வேலை பார்த்து வருகிறார்களாம்.

ஒத்துழைப்பு
இவர்களுடன் கூட்டணி கட்சிகளின் ஒத்துழைப்பும் கிடைத்து வருகிறது.. காரணம், இந்த முறை திமுகவின் கூட்டணி அதிமுகவைவிட பலம் வாய்ந்ததாக இருக்கிறது.. எதிர்பார்த்த தொகுதிகளை திமுக தரப்பில் தந்துள்ளதால், மனநிறைவடைந்த கூட்டணி கட்சியினர், திமுகவினருக்கு ஆதரவாக தோளோடு தோள் கொடுத்து வருகின்றனர்.

3 அமைச்சர்கள்
முக்கிய அமைச்சர்களை தோற்கடித்துவிட்டால், அது திமுகவுக்கு ஆகப்பெரிய பலம் என்றும் நம்பப்படுகிறது.. அப்படி தோற்கடிக்கும் திமுக வேட்பாளர்களுக்கு முக்கிய பொறுப்பையும் தலைமை தரும் என்றும் ஒரு பேச்சு உள்ளது. எப்படி பார்த்தாலும், பழைய பார்முலாவை தூக்கி எறிந்துவிட்டு, எங்கு அதிமுக வலிமையாக உள்ளதோ, அங்கே நேரடியாக இறங்கி மோதி பார்க்கும் புது துணிச்சலை திமுக தற்போது பெற்று வருகிறது என்கிறார்கள்.. பார்ப்போம்..!












Click it and Unblock the Notifications