வாங்க வந்து நல்லா பேசுங்க! பரிசுகளை அள்ளுங்க! சட்டக்கல்லூரி மாணவர்களுக்கு திமுக சட்டத்துறை அழைப்பு!
சென்னை: முதலமைச்சர் ஸ்டாலினின் 70வது பிறந்தநாளை யொட்டி திமுக சட்டத்துறை சார்பில் பேச்சுப்போட்டிகள் நடத்தப்படவுள்ளன.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள தனியார் சட்டக் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள ஜனநாயகம் மற்றும் சமூகநீதி குறித்த சட்ட நுணுக்கங்கள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில் இந்த பேச்சுப் போட்டி அமையும் என வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ அறிவித்துள்ளார்.

ஸ்டாலின் 70வது பிறந்த நாளினை முன்னிட்டு, தி.மு.க. சட்டத் துறையின் சார்பில், மாவட்டங்கள் அடங்கியுள்ள மண்டல வாரியாக அரசியலமைப்புச் சட்டப் "பிரிவு14ம் - சமூகநீதியும்" எனும் தலைப்பில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் 'பேச்சுப் போட்டி' மண்டல வாரியாக நடைபெற உள்ளது.
மண்டல வாரியாக நடைபெறும் பேச்சுப் போட்டியில், ஒவ்வொரு மண்டலத்திலும் சிறந்த முறையில் பேசி, முதல் ஐந்து இடங்களைப் பெறும் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கான இறுதி பேச்சுப் போட்டி வருகிற 15-04-2023, சனிக்கிழமை, மாலை 3.00 மணியளவில், சென்னை, அண்ணா அறிவாலயம், "கலைஞர் அரங்கத்தில்" நடைபெறும்.
இவ்விறுதிப் போட்டியில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவர்களுக்கு, 16-04-2023, ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 4.00 மணியளவில் சென்னை, கோட்டூர்புரம், அறிஞர் அண்ணா நூற்றாண்டு நினைவு நூலக அரங்கில், தி.மு.க. இளைஞர் அணிச் செயலாளரும் - மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கரங்களால் சான்றிதழ், பதக்கம், பரிசுத் தொகை ஆகியவற்றை வழங்கி சிறப்பிக்க உள்ளார்.
தி.மு.க. சட்டத் துறையைச் சேர்ந்த மாநில நிர்வாகிகள், தலைமைக் கழக வழக்கறிஞர்கள் - மாவட்ட, பகுதி நிர்வாகிகள் மற்றும் கழக வழக்கறிஞர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.
-
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
சிவக்குமார் விஜய்யை பாராட்டி பேச பேச சத்யராஜ் கொடுத்த ரியாக்ஷன் பாருங்க.. அமைதியாக கவனிக்கும் திமுக -
திமுகவில் இருந்து தூக்கலாம்! மோடியை பார்த்ததும் புது தெம்பில் விஜய்! ஆதவ் அர்ஜுனாவுடன் அவசர மீட்டிங்












Click it and Unblock the Notifications