தமிழகத்தில் திமுக ஆட்சியே தொடரும்! சீமானுக்கு பெருத்த ஏமாற்றம்! மின்னம்பலம் சர்வே
சென்னை: தமிழகத்தில் திமுக ஆட்சியே தொடரும் என்றும் நாம் தமிழர் கட்சிக்கு ஒரு இடம் கூட கிடைக்காது என்றும் மின்னம்பலம் கருத்துக் கணிப்புகளை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் கடந்த 23 ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் தமிழகத்தில் 85 சதவீதம் வாக்குகள் பதிவாகின. இது சதவீதம் அளவில் உயர்ந்திருந்தாலும் கடந்த காலங்களை வாக்களித்தவர்களின் எண்ணிக்கையை பொருத்தமட்டில் பெரிய அளவில் வாக்குப் பதிவில் புரட்சி நடக்கவில்லை என்றே நிபுணர்கள் சொல்கிறார்கள்.

பொதுவாக தேர்தல் முடிந்ததுமே தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகும். ஆனால் இந்த முறை மேற்கு வங்கத்தின் 2ஆம் கட்ட தேர்தல் இன்று (ஏப்.29) முடிவடைந்ததால் எக்சிட் போல்களை வெளியிட தேர்தல் ஆணையம் தடை விதித்திருந்தது.
தற்போது மேற்கு வங்க தேர்தல் நடந்து முடிந்த நிலையில் தமிழகம், புதுவை, அஸ்ஸாம், கேரளா, மேற்கு வங்கம் ஆகிய 5 மாநிலங்களுக்கான எக்சிட் போல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் மொத்தம் 234 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இந்த தேர்தலில் தனி பெரும்பான்மைக்கு 118 இடங்கள் தேவை. கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் திமுக 133 தொகுதிகளில் வென்று தனிப்பெரும்பான்மை பலத்தை பெற்றது. அது போல் அதிமுக 66 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 18 இடங்களிலும் பாமக 5 இடங்களிலும், பாஜக 4 இடங்களிலும், விசிக 4 இடங்களிலும், கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கட்சிகள் தலா 2 இடங்களிலும் வென்றன.
இன்றைய தினம் மின்னம்பலம் கருத்துக் கணிப்புகளை வெளியிட்டுள்ளது. இந்த வாக்குப் பதிவுக்கு பின் ஒவ்வொரு சட்டசபை தொகுதியிலும் 200 பேர் வீதம் 234 தொகுதிகளிலும் 46,800 பேரிடம் யாருக்கு வாக்களித்தீர்கள்? என கேட்கப்பட்டது.
அதில் திமுக கூட்டணி 155 இடங்களில் வென்று ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளும். அதிமுக கூட்டணி 72 இடங்களிலும் தவெக 5 இடங்களிலும் வெல்லும் என கணிக்கப்பட்டுள்ளது.
நாம் தமிழர் கட்சிக்கு ஒரு தொகுதி கூட வெல்லாது என கணிக்கப்பட்டுள்ளது. புதிதாக கட்சி தொடங்கிய விஜய் கூட ஒற்றை இலக்கம், இரட்டை இலக்கத்தில் இடங்களை பிடிக்கும் என கணித்துள்ள நிலையில் 10 ஆண்டுகளுக்கு மேலாக கட்சி நடத்தி வரும் சீமான், இதுவரை ஒரு தேர்தலில் கூட வெல்லவில்லை. எனினும் வாக்கு சதவீதத்தின் அடிப்படையில் அந்த கட்சிக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் கொடுத்துள்ளது.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications