அராஜகம் நடக்குது! அண்ணாமலைக்கு எல்லாம் நான் பதில் சொல்ல விரும்பவில்லை! டி.ஆர்.பாலு காட்டம்!
சென்னை: அண்ணாமலை கூறும் குற்றச்சாட்டுகளுக்கு எல்லாம் தாம் பதில் சொல்ல விரும்பவில்லை என திமுக மக்களவைக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் அராஜகம் நடந்துக் கொண்டிருப்பதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் மத்திய பாஜக அரசு சஸ்பெண்ட் செய்து வருவதாக கூறிய டி.ஆர்.பாலு, எடப்பாடி பழனிசாமி திமுகவை விமர்சிப்பதற்கு முன்னர் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

தாம் தொடர்ந்த அவதூறு வழக்கில் அண்ணாமலையை முதலில் ஆஜராக சொல்லுங்க எனக் கேட்டுக்கொண்ட டி.ஆர்.பாலு, அவரை பற்றி தன்னிடம் கேட்க வேண்டாம் என ஒதுங்கிக்கொண்டார். செந்தில்பாலாஜி, பொன்முடியை தொடர்ந்து இன்னும் பல திமுக அமைச்சர்கள் சிறைக்கு செல்வார்கள் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை நேற்று முதல் கூறிவருகிறார். அதேபோல் தான் எடப்பாடி பழனிசாமியும் இன்னும் சில திமுக அமைச்சர்கள் சிறைக்கு செல்வார்கள் என விமர்சித்து வருகிறார்.
இதற்கு தான் இப்படியொரு பதிலடியை கொடுத்துள்ளார் டி.ஆர்.பாலு. திமுகவை பற்றி பேசுவதை விட்டுவிட்டு முதலில் உங்களை வழக்குகளிலிருந்து காப்பாற்றிக் கொள்வதற்கான வேலைகளை பாருங்க என எடப்பாடி பழனிசாமிக்கு அறிவுறுத்தியுள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனைக் கூறினார். மழை வெள்ள நிவாரணத் தொகை குறித்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் முன்வைத்த விமர்சனத்திற்கு டி.ஆர்.பாலு பதிலடி கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அது குறித்தும் பெரிதாக பேசவில்லை.
டெல்லியில் திமுகவின் முகமாக அறியப்படும் டி.ஆர்.பாலு, மத்திய பாஜக அரசுடன் மோதல் போக்கை தவிர்த்து வருவது குறிப்பிடத்தக்கது. சில நாட்களுக்கு முன்னர் வட மாநிலங்கள் குறித்து திமுக எம்.பி. செந்தில்குமார் பேசியது மிகப்பெரிய சர்ச்சையானது. காங்கிரஸ் எம்.பி.க்களே கொதித்த நிலையில், அது குறித்து முதல்வர் ஸ்டாலின் கவனத்திற்கு உடனடியாக கொண்டு சென்று செந்தில்குமாரை அன்றைய தினமே தாமதமின்றி மன்னிப்பு கேட்க வைத்தது டி.ஆர். பாலு தான்.












Click it and Unblock the Notifications