குருதிக்கொடை செயலியை தொடங்கி வைத்த ஸ்டாலின்..! திமுக மருத்துவ அணியின் புது முயற்சி..!
சென்னை: ரத்த தானம் செய்வோர் மற்றும் ரத்தம் தேவைப்படுவர்களுக்காக திமுக மருத்துவ அணியினர் பிரத்யேக செயலியை வடிவமைத்து வெளியிட்டுள்ளனர்.
மனித உடல் உறுப்புகளை சீராக இயங்க வைக்கும் முக்கிய காரணிகளில் ரத்தமும் ஒன்று. உடல் முழுவதும் ஆக்சிஜனை கொண்டு செல்லும் ரத்தம் மனிதனுக்கு இன்றியமையாத ஒன்றாக திகழ்கிறது. இந்நிலையில், ''குருதிக்கொடை செயலி'' என்ற பெயரில் புதிய ஆப் ஒன்றை திமுக மருத்துவ அணியியினர் உருவாக்கியுள்ளனர். அதனை அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார்.

திமுக தொண்டர்களும், நிர்வாகிகளும் ரத்த தானம் செய்ய வேண்டும் என்று நினைத்தால் இந்த செயலியில் பதிவு செய்துகொண்டு குருதிக்கொடை அளிக்கலாம். அவர்களை ஊக்குவிக்கும் வகையில் பாராட்டு சான்றிதழும் அளிக்கப்படும். மேலும், அறுவைச்சிகிச்சைக்காக ரத்தம் தேவைப்படுபவர்கள் இந்த செயலியில் தகவல் தெரிவித்தால், அவர்களுக்கு தேவைப்படும் ரத்தம் கிடைக்கவும் திமுக மருத்துவ அணி ஏற்பாடு செய்யுமாம்.
சட்டமன்ற உறுப்பினரும், திமுக மருத்துவ அணி தலைவருமான பூங்கோதை ஆலடி அருணா முயற்சியில் குருதிக்கொடை செயலி உருவாக்கப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் செயல்படும் வகையிலும், எந்நேரமும் செயலியை பின்பற்ற ஆட்கள் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் எளிதாக அனுகக்கூடிய வகையில் செயலி வடிவமைக்கப்பட்டுள்ளதாக திமுக மருத்துவ அணி தரப்பில் கூறப்பட்டுள்ளது.
-
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications