அண்ணா அறிவாலயத்தில் கூடிய அமைச்சர்கள், 23 அணிகளின் செயலாளர்கள்.. முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை!
சென்னை: கருணாநிதி நூற்றாண்டு விழா தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் அமைச்சர்கள், நூற்றாண்டு விழா குழு உறுப்பினர்கள், 23 அணிகளின் செயலாளர்கள் பங்கேற்றுள்ளனர்.
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா கடந்த ஜூன் 3ஆம் தேதி தொடங்கப்பட்டு, 2024 ஜூன் மாதம் வரை நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு, தமிழக அரசு சார்பிலும், திமுக சார்பிலும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கும், கூட்டங்களுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அந்த வகையில் திமுக சார்பில் கருணாநிதி நூற்றாண்டு விழாவை சிறப்பாக நடத்துவது தொடர்பாக நிர்வாகிகள் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.
இதுகுறித்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்ட அறிவிப்பில், "கருணாநிதியின் பன்முக ஆற்றல், அவர் படைத்தளித்த மக்கள் நலத்திட்டங்களை ஓராண்டு முழுவதும் எடுத்துரைத்தாலும் முழுமையடையாது. இருந்தாலும், தமிழகத்தின் வருங்காலத் தலைமுறையினர் அவரை என்றென்றும் நினைவில் கொள்ளும் வகையில் நூற்றாண்டு விழாவை எழுச்சி, உணர்ச்சியுடன் தமிழகம் முழுவதும் நடத்துவது தொடர்பாக, முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆக.19ஆம் தேதி காலை 10.30 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள திமுக அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.
இதில், கருணாநிதி நூற்றாண்டு விழாக் குழு உறுப்பினர்கள், அனைத்து அணிகளைச் சேர்ந்த செயலாளர்கள், அமைச்சர்கள் தவறாமல் பங்கேற்க அறிவுறுத்தப்பட்டுள்ளது." எனத் தெரிவித்துள்ளார்.
ஆலோசனை கூட்டத்திற்கு அடுத்த நாளான நாளை, திமுக இளைஞரணி, திமுக மருத்துவர்கள் அணி, திமுக மாணவரணி ஆகிய அணியினர் நீட் தேர்வுக்கு எதிராக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட உள்ளது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
அம்மாவை இழந்த அஜித்துக்கு மு.க. ஸ்டாலின் ஆறுதல்.. ஒரு வரியில் சொன்ன நெகிழ்ச்சி வார்த்தை.. குவியும் பாராட்டு -
பரந்தூர்-க்கு சொன்ன நோ.. சென்னை மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி! சீட்டுக்கட்டுப்போல் சரியும் மெகா திட்டங்கள்!












Click it and Unblock the Notifications