"அட நீங்க வேற.. நான் எப்படி பொழச்சேன்னு நினைக்கறீங்க".. கேள்வி கேட்டவரையே திணறடித்த திமுக அமைச்சர்!

தடுப்பூசி குறித்து அமைச்சர் துரைமுருகன் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தடுப்பூசி போட்டால் செத்துப் போய்டுவோம்னு நினைக்கிறாங்க.. ஆனால், நானே 2 தடுப்பூசியை போட்டதால்தான், கொரோனா வந்தும், உயிர் பிழைத்தேன் என்று அமைச்சர் துரைமுருகன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

வேலூர்மாவட்டம், சத்துவாச்சாரியில் கலெக்டர் அலுவலகத்தில், 700 நடமாடும் வாகனங்களின் மூலம் காய்கறிகள் விற்பனை துவங்கப்பட்டுள்ளது.

தற்போது கொரோனா காலம் என்பதாலும் ஊரடங்கு அமலில் உள்ளதாலும் பொதுமக்கள் தங்களின் வீடுகளில் இருந்தவாறு காய்கறிகளை பெற வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த திட்டம் துவங்கப்பட்டுள்ளது.

 விழிப்புணர்வு

விழிப்புணர்வு

இதனை தமிழக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் துவங்கி வைத்தார். இதையடுத்து, வாணியர் வீதியில் ஜெயின் சங்கம் சார்பில் கொரோனா தடுப்பூசி முகாமிலும் அமைச்சர்கள் துரைமுருகன் மற்றும் காந்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். பின்னர் துரைமுருகன் பேசும்போது சொன்னதாவது:

தடுப்பூசி

தடுப்பூசி

"18 வயதிற்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி போடும் முகாம் இன்று துவங்கப்பட்டது.. இந்த மாவட்டத்தில் 1074054 பேர் தகுதி பெற்றுள்ளனர்.. அவர்களில் இதுவரையில் 193,915 பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.. பொதுமக்கள் அரசு வழங்கும் இந்த இலவச தடுப்பூசியை போடுவதற்கு தயக்கம் காட்டுகிறார்கள்.இதனை போட்டால் செத்து போய்விடுவோம் என்று நினைக்கிறார்கள்.. அது தவறானது..

 உயிர் பிழைத்தேன்

உயிர் பிழைத்தேன்

நானே 2 தடுப்பூசியை போட்டதால் தான் மறுபடியும் என்னை கொரோனா தாக்கிய போதும் உயிர் பிழைத்தேன்.. அமெரிக்கா ரஷ்யா,சீனா போன்ற நாடுகள் கொரோனாவுக்கு ஊசி போட்டுகொண்டதால் கொரோனாவை அவர்கள் வெற்றிகொண்டுள்ளனர்.. ஆனால் இங்கே தவறான தகவலால் தடுப்பூசி போட்டுகொள்ள அஞ்சுகிறார்கள்.. தடுப்பூசி போட்டுகொண்டு உங்களையும் சமுதாயத்தையும் காத்துகொள்ளுங்கள்.. அப்போது தான் கொரோனாவை நாம் முழுமையாக ஒழிக்க முடியும்" என்றார்.

 முகாம்கள்

முகாம்கள்

இறுதியாக, காட்பாடியில் உள்ள வேலூர் தொழில் நுட்ப பல்கலைகழகத்தில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சித்த மருத்துவ முகாமை 150படுக்கைகளுடன் முகாமையும் மூலிகை கண்காட்சியையும் அமைச்சர்கள் துவங்கி வைத்தனர்.. அங்கு பணியாற்றும் பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி முகாமையும் துவங்கி வைத்தனர்.. இதில் திரளானோர் ஆர்வமுடன் கலந்துகொண்டு தடுப்பூசி போட்டுகொண்டனர்..!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+