இது வேற லெவல்.. "நானாவது 50 வயசுல..ஆனா என் பேரன் 5 வயசுலயே".. என்னா ஓட்டம் பாருங்க.. பாசக்கார மா.சு
பேரனை பற்றி மா.சுப்பிரமணியன் போட்ட ட்வீட் வைரலாகி கொண்டிருக்கிறது
சென்னை: கொரோனா தடுப்பு பிஸியில், சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் படுபிஸியாக இருந்தாலும், அவர் இன்று பதிவிட்ட ஒரு ட்வீட் இணையத்தை தன் வசமாக்கி வருகிறது.
தற்போதைய கொரோனா பாதிப்பில் தமிழக அமைச்சர்கள் படுமும்முரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.. அதிலும் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம், தொற்றை குறைக்க பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறார்.
அரசியலையும் தாண்டி சிறந்த தடகள வீரராக திகழ்பவர் அமைச்சர் மா.சுப்பிரமணியன்... 12 நாடுகள், 111 மாரத்தான் போட்டிகள் என இன்றைய இளைய தலைமுறையினருக்கே சவால் விடும் அளவுக்கு சாதனைகளை படைத்தவர்..

உடற்பயிற்சி
அதிலும் உடற்பயிற்சியில் புதிய சாதனையை படைத்து, ஆசிய புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் இடம்பிடித்தவர்.. கடந்த வருடம் தொற்று பாதிப்பு வந்து சென்னையே முடங்கியிருந்தபோதுகூட இவர் உடற்பயிற்சியை விடவில்லை.. வழக்கமாக பார்க்கில்தான் ஜாக்கிங் செய்வார்..

வாக்கிங்
தொற்று காலத்தில், வாக்கிங், ஜாக்கிங் போன்றவற்றை ரோட்டில் செய்ய முடியாது என்பதால், அவர் வீட்டு மொட்டை மாடியிலேயே "8 வடிவ ஓடுதளத்தை" அமைத்து, 4 மணி நேரம் கேப் விடாமல், அதாவது 4 மணி நேரம் 8 நிமிடம், 18 விநாடி, 1010 முறை ஓடி சாதனைப் படைத்திருக்கிறார்.

அரசியல்
பொதுவாக, ஒரு அரசியல்வாதிகள், தங்கள் உடற்பயிற்சியில் இவ்வளவு கவனம் செலுத்தாத நிலையில், மாசு ஒரு உதாரணமாக திகழ்ந்து வருகிறார். இவர்தான் இப்படி இருக்கிறார் என்று பார்த்தால், இவர் பேரனும் இவரை போலவே இருக்கிறார்.. அவரும் மாரத்தான் ஓடுகிறாராம்.. இந்த விஷயம் மா.சு சொல்லிதான் நமக்கே தெரியவந்துள்ளது.. அது சம்பந்தமாக ஒரு ட்வீட்டும் பதிவிட்டுள்ளார்..

தாத்தா
அதில், "தாத்தாவாகிய நான் 50 வயதுக்கு பிறகு தான் மாரத்தான் போட்டிகளில் பதக்கங்கள் பெறத் தொடங்கினேன்... ஆனால் என் பேரன் இன்பன் 5 வயதாகும் முன்னரே பதக்கம் பெற தொடங்கிவிட்டான்...." என்று பதிவிட்டுள்ளார்.. கொரோனாவை விரட்டிக் கொண்டு தாத்தா பிஸியாக இருந்தாலும், பேரன் குறித்து பூரிப்புடன் பதிவிட்ட இந்த ட்வீட்தான் இணையத்தில் றெக்கை கட்டி பறந்து கொண்டிருக்கிறது.
-
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
"போட்டோ, வீடியோக்காக ஆய்வு செய்யமாட்டேன்".. அட தவெகவில் இப்படியும் ஒரு அமைச்சரா! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications