ஒரே உற்சாகம்.. அறிவாலயம் வந்த முதல்வர் ஸ்டாலின்.. நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த சீனியர்கள்!
திமுக அமைச்சர்கள் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
சென்னை : ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையில், திமுக கூட்டணி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தொடர்ந்து முன்னிலை வகித்துவரும் நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து திமுக அமைச்சர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
ஈரோடு இடைத்தேர்தலில் திமுக கூட்டணி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தொடர்ந்து முன்னிலையில் உள்ளார். தற்போது 6வது சுற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், ஈவிகேஎஸ் இளங்கோவன் 46,116 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் தென்னரசு 16,778 வாக்குகளும் பெற்றுள்ளனர். இருவருக்கும் இடையேயான வாக்கு வித்தியாசம் சுமார் 30 ஆயிரமாக உள்ளது.

திமுக கூட்டணி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன், மிகப்பெரிய வித்தியாசத்தோடு வெற்றிமுகம் கண்டு வருவதைத் தொடர்ந்து, சென்னை அண்ணா அறிவாலயத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகை தந்தார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வாக்கு எண்ணிக்கையில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தொடர்ந்து முன்னிலையில் உள்ளார். இதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் காங்கிரஸ் மற்றும் திமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தமிழ்நாடு முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், அண்ணா அறிவாலயத்திற்கு வந்துள்ளார். அவரை திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி, அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, பொன்முடி உள்ளிட்ட மூத்த தலைவர்களும் அண்ணா அறிவாலயத்திற்கு வருகை தந்தனர்.
அண்ணா அறிவாலயத்தில் இருந்தபடி தேர்தல் முடிவுகளை மு.க.ஸ்டாலின் அறிந்து வருகிறார். அண்ணா அறிவாலயத்திற்கு வந்த மூத்த அமைச்சர்கள் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து, ஈரோடு கிழக்கு தேர்தல் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
-
பெரிய புள்ளி.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு! வலையை விரித்த செங்க்ஸ்.. தவெகவுக்கு தாவ தயாரான சிவிஎஸ்! -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்? -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications