Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆகா..ஒன்னு கூடிட்டாங்க! மகனுக்காக களத்துல ஐபி! கைகோர்த்த சக்கரபாணி! திக்கு தெரியாமல் திண்டுக்கல்லார்

Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல்: 2026 சட்டமன்ற தேர்தலில் திண்டுக்கல் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ஐபி செந்தில் குமாருக்கு ஆதரவாக அவரது தந்தையும் அமைச்சருமான ஐ.பெரியசாமியும், திண்டுக்கல்லை சேர்ந்த மற்றொரு அமைச்சரான சக்கரபாணியும் சேர்ந்து பிரச்சாரம் செய்திருப்பது திமுகவினரை உற்சாகமடைய செய்திருக்கிறது. ஆனால் அதிமுகவின் சீனியர்களின் ஒருவரான திண்டுக்கல் சீனிவாசனுக்கு ஆதரவாக நத்தம் விசுவநாதன் ஒரு முறை கூட பிரச்சாரம் செய்யவில்லை. நத்தம் விஸ்வநாதனுக்கு ஆதரவாக திண்டுக்கல் சீனிவாசனும் பேசவில்லை என குமுறுகின்றனர் அதிமுக ரத்தத்தின் ரத்தங்கள்.

கடைசி நேர பரபரப்புகளுக்கும் விறுவிறுப்புகளுக்கும் பஞ்சமில்லாமல் சென்று கொண்டிருக்கிறது 2026 சட்டமன்ற தேர்தல் களம். எப்படியாவது இரண்டாவது முறை ஆட்சி அமைத்த விட வேண்டும் என திமுக தீவிரமாக முயன்று வருகிறது.

அதே நேரத்தில் அடுத்தடுத்து இரண்டு தேர்தல்களில் தோற்றதில்லை என்ற சாதனையை தக்க வைக்க தீவிரமாக முயன்று வருகிறார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி. திமுக தரப்பிலும் அதிமுக தரப்பிலும் பல சீனியர்கள் களத்தில் இறங்கி பணியாற்றி வருகிறார்கள்.

TN Election Exclusive Tamil Nadu Assembly Election 2026 Dindigul Srinivasan IP Senthilkumar

திண்டுக்கல் அரசியல்

கடந்த காலங்களில் மனக்கசப்புகள், உட்க்கட்சி பூசல்கள் இருந்தாலும் தேர்தலில் அதனை காட்டிக் கொள்ளக் கூடாது என திமுக தலைமை கடும் உத்தரவு பிறப்பித்து இருக்கிறது.. மேலும் அதிமுக தரப்பில் இருக்கும் சீனியர்களை எதிர்த்துப் போட்டியிட்டு அவர்களை தோல்வியடைய செய்தால் அமைச்சர் பதவி உள்ளிட்ட பல்வேறு ஆஃபர்கள் வழங்கப்பட்டதால் மூத்தவர்களை எதிர்த்து களம் இறங்கி இருக்கின்றனர் திமுக ஜூனியர்கள்.

திண்டுக்கல் சீனிவாசன்

அந்த வகையில் திண்டுக்கல்லில் அதிமுக அடையாளமாக பார்க்கப்படும் திண்டுக்கல் சீனிவாசனை எதிர்த்து களம் இறங்கி இருக்கிறார் அமைச்சர் பெரியசாமியின் மகனும் திண்டுக்கல் கிழக்கு திமுக மாவட்ட செயலாளருமான ஐபி செந்தில் குமார். நான்கு முறை எம்பி, இரண்டு முறை எம்.எல்.ஏ, ஒருமுறை அமைச்சர் அதிமுக பொருளாளர், மாவட்ட செயலாளர் என பல பதவிகளை வகித்த திண்டுக்கல் சீனிவாசனை மூன்றே தேர்தல்களை சந்தித்திருக்கும் ஐபிஎஸ் எதிர்த்து களம் காண்பது திண்டுக்கல்லில் பரபரப்பை பற்ற வைத்திருக்கிறது.

ஐ பெரியசாமி

இந்த நிலையில் தான் மகனுக்கு ஆதரவாக களமிறங்கி இருக்கிறார் திமுகவின் சீனியர்களில் ஒருவரும் அமைச்சருமான ஐ பெரியசாமி. மேலும் மாவட்டத்தில் இருக்கும் மற்றொரு அமைச்சரான சக்கரபாணியும் ஐபிஎஸ்-க்கு ஆதரவாக திண்டுக்கல்லில் பிரச்சாரம் செய்திருக்கிறார். திண்டுக்கல் ஒருங்கிணைந்த திமுக மாவட்டமாக இருந்தபோது ஐ பெரியசாமி வைத்தது தான் சட்டம். அவரை மாநில பொறுப்புக்கு மாற்றிய பிறகு திண்டுக்கல் மாவட்ட திமுக கிழக்கு -மேற்காக பிரிக்கப்பட்டு கிழக்கு மாவட்ட திமுகவுக்கு ஐபிஎஸ்-ம் மேற்கு மாவட்ட திமுகவுக்கு சக்கரபாணி மாவட்ட செயலாளராக நியமனம் செய்யப்பட்டனர்.

சக்கரபாணி பிரச்சாரம்

தந்தை மகன் என இருக்க லேசான மோதல் போக்கை சக்கரபாணி கடைபிடித்து வருகிறார். இருவருக்குள்ளும் முட்டாள் மோதல் இருக்கிறது என உள்ளூர் அரசியல்வாதிகள் பேச தொடங்கி இருந்தனர். இந்த நிலையில் திண்டுக்கல்லில் முக்கிய முகமான சீனிவாசனை எதிர்த்து ஐபிஎஸ் களமிறங்குவதால் திமுகவின் இரு சீனியர்களும் ஒன்றாகச் சேர்ந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவது திமுகவினரை உற்சாகப்படுத்தி இருக்கிறது.

திமுக உடன் பிறப்புகள்

அது மட்டுமல்லாமல் கடந்த காலங்களில் திமுகவிலிருந்து ஓரம் கட்டப்பட்ட முன்னாள் ஒன்றிய செயலாளர் சுப பெருமாள் சாமி, முன்னாள் சேர்மன் நடராஜன் ஆகியோரை அழைத்து வந்து சமாதானப்படுத்தி தேர்தல் பணிகளில் ஈடுபட வைத்திருக்கிறார் ஐபி பெரியசாமி. இதனால் உற்சாகமடைந்திருக்கின்றனர் திமுக உடன் பிறப்புகள். ஆனால் எதிர் முகாமான அதிமுகவில் அதிருப்தி குரல்களும், கலக குரல்களும் மெல்ல எழத் தொடங்கி இருக்கிறது.

நத்தம் விஸ்வநாதன்

இந்த தேர்தலில் எப்படியாவது போட்டியிட வேண்டும் என திண்டுக்கல் மாநகராட்சி முன்னாள் மேயர் மருதராஜ் முயன்ற நிலையில் திண்டுக்கல் சீனிவாசனின் உள்ளடி வேலைகளால் அது கைகூடாமல் போனது, இருந்த போதும் மருதராஜை வைத்து தான் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார் திண்டுக்கல் சீனிவாசன். மறுபுறம் திண்டுக்கல் சீனிவாசனின் சிஷ்யராக இருந்து திண்டுக்கல் மாவட்டத்தை ஆண்ட நத்தம் விஸ்வநாதன் தற்போது நத்தத்தில் போட்டிருக்கிறார்.

அதிமுக பிரச்சனை

இருவரும் முக்கிய முகங்கள் என்றாலும் இதுவரை ஒருவொருவர் ஆதரவாக பிரச்சாரம் மேற்கொள்ளவில்லை. சொல்லப்போனால் ஆறு தொகுதிகளில் திண்டுக்கல்லில் அதிமுகவினர் போட்டியிடும் நிலையில் தங்கள் தொகுதிகளில் மட்டுமே கவனம் செலுத்தி வருகின்றனர் இருவரும். திண்டுக்கல் சீனிவாசனுக்கு ஆதரவாக நத்தம் விஸ்வநாதனும் நத்தம் விஸ்வநாதனுக்கு ஆதரவாக திண்டுக்கல் இதுவரை ஒரு முறை கூட ஆதரவாக வாக்கு சேகரிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

திமுக ஒற்றுமை

இந்த நிலையில் பலமாக இருந்தாலும், ஆளுங்கட்சி என்ற அடையாளத்தை மறந்து விட்டு ஒரு ஜூனியருக்காக சீனியர்கள் இருவரும் ஒன்றாக சேர்ந்து வேலை செய்கின்றார். ஆனால் சீனியர்களாக இருந்தாலும் ஒருவருக்கொருவர் உதவாமல் தங்கள் தொகுதிகளில் மட்டுமே கவனம் செலுத்துவதால் எங்களின் உற்சாகம் குறைந்து இருக்கிறது என குமுறுகின்றனர் திண்டுக்கல் மாவட்ட அதிமுகவின் ரத்தத்தின் ரத்தங்கள். இது மட்டுமல்லாமல் திண்டுக்கல் சீனிவாசன் தரப்பில் இருக்கும் ஒரு சில முக்கிய நிர்வாகிகள் அவருக்கு எதிராக உள்ளடி வேலை பார்க்க தயாராக இருக்கிறார்கள். தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரமே இருக்கும் நிலையில் அதிமுகவில் அடித்துக்கொள்ளும் படலங்களும் அதிகரிக்கலாம் என்கின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+